
பழைய இசை – புதிய கதை: மீண்டும் அதிர வைக்கும் சத்யஜோதி & இளையராஜா கூட்டணி!
தமிழ் சினிமாவில் சில கூட்டணிகள் காலத்தை தாண்டி நினைவில் நிற்கும். அப்படிப்பட்ட ஒரு மந்திர கூட்டணி தான் சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் மற்றும் இசைஞானி இளையராஜா. நீண்ட 32 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இருவரும் மீண்டும் கைகோர்க்கிறார்கள் என்ற செய்தி ரசிகர்களுக்கு ஒரு இனிய அதிர்ச்சி!
“லெனின் பாண்டியன்” என்ற புதிய படத்தின் மூலம் இந்த இணைப்பு திரும்பி வருகிறது. இதை அறிவித்த விதமே வேற லெவல் – ஒரு அழகான அனிமேஷன் வீடியோவில், காரில் பயணம் செய்யும் தியாகராஜன் மற்றும் இளையராஜா, தங்களின் பழைய ஹிட் பாடல்களை ரசிக்கும் காட்சிகள்… இதே போதும் நெஞ்சை நெகிழ வைக்க!
இந்த கூட்டணி முன்னாடியே “மூன்றாம் பிறை”, “காக்கி சட்டை”, “கிழக்கு வாசல்”, “இதயம்” மாதிரி பல கல்ட் கிளாசிக் படங்களை கொடுத்திருக்கிறது. அந்த இசையும் உணர்ச்சியும் இன்னும் ரசிகர்களின் மனசுல வாழ்கிறது. அதனால தான், இப்போ வரும் “லெனின் பாண்டியன்” மீது எதிர்பார்ப்பு டபுள் ஆகி இருக்கு.
இந்த படத்தை புதிய இயக்குநர் D.D. பாலச்சந்திரன் இயக்குகிறார். கிராமத்து வாழ்க்கை, சமூக உண்மைகள், மனித உணர்ச்சிகள் – இந்த மூன்றையும் கலந்த ஒரு வலுவான கதையாக படம் உருவாகி இருக்கிறது.
சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் இந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். காவல்துறையில் பணியாற்றும் இளைஞனாக அவர் நடிக்கிறார். அதோடு கங்கை அமரன் மற்றும் நடிகை ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு முக்கிய கதாப்பாத்திரங்களில் வருவது கூட ஒரு ஹைலைட்.
மொத்தத்தில் பார்க்கும்போது, பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் இசை + புதிய தலைமுறையின் கதை + கிராமத்து உணர்ச்சி – இந்த மூன்றின் கலவையாக “லெனின் பாண்டியன்” படம் உருவாகி இருக்கிறது.
விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. ஆனால் ஒரு விஷயம் கிளியர் – இந்த கூட்டணி திரும்பி வந்திருக்கு… அதனால் இந்த படம் கவனிக்க வேண்டிய ஒன்றாக மாறி விட்டது! 🔥

Classic Music Meets a Fresh Story: The Return of a Legendary Combo!
Some collaborations in Tamil cinema remain timeless—and one such iconic duo is producer of Sathya Jyothi Films and music maestro . After a long gap of 32 years, they are joining hands again, giving fans a truly exciting moment to celebrate.
Their reunion comes through the upcoming film “Lenin Pandian.” The announcement itself stood out—a beautifully crafted animated video showing Thyagarajan and Ilaiyaraaja on a car journey, listening to their classic hit songs. A simple yet nostalgic concept that instantly struck a chord with fans.
This duo has previously delivered several unforgettable classics like Moondram Pirai, Kaakki Sattai, Kizhakku Vaasal, and Idhayam. Their music and storytelling have left a lasting impact, which is why expectations for Lenin Pandian are naturally sky-high.
The film is directed by debutant D.D. Balachandran and promises a strong narrative rooted in rural life, social realities, and human emotions.
Adding to the excitement, ’s grandson Darshan is making his debut as the lead, playing a young police officer. The film also features in a key role, alongside actress , who returns to the screen after a long break.
Overall, Lenin Pandian looks like a perfect blend of nostalgic music, a new-age story, and emotionally rich rural storytelling.
The release date is expected to be announced soon—but one thing is certain: this legendary reunion has already made the film one to watch out for! 🔥
