Friday, May 22
Shadow

மோகன்லாலின் மாயாஜாலத்தை மீண்டும் கொண்டாடும் ஜியோஹாட்ஸ்டார்! — ரசிகர்களுக்காக 115 சூப்பர் ஹிட் படங்களுடன் பிரம்மாண்ட திரைவிழா

மோகன்லாலின் மாயாஜாலத்தை மீண்டும் கொண்டாடும் ஜியோஹாட்ஸ்டார்! — ரசிகர்களுக்காக 115 சூப்பர் ஹிட் படங்களுடன் பிரம்மாண்ட திரைவிழா

இந்திய சினிமாவில் “நடிப்பின் பல்கலைக்கழகம்” என்று ரசிகர்களால் போற்றப்படும் அவர்களின் திரைப்பயணத்தை, ரசிகர்கள் மறுபடியும் அனுபவிக்கும் வகையில், ஒரு வித்தியாசமான திரை கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளது.

“மோகன்லால் – தி கம்ப்ளீட் ஆக்டர்” என்ற பெயரில் நடைபெறும் இந்த சிறப்பு திரைப்பட விழா, மே 20 முதல் 30 வரை ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய மோகன்லாலின் 115 முக்கியமான படங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

ஒரே நடிகரின் பல பரிமாணங்களை ஒரே மேடையில் ரசிகர்கள் அனுபவிக்கலாம் என்பதே இந்த திரைவிழாவின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. குடும்பக் கதைகள், சஸ்பென்ஸ் திரில்லர்கள், நகைச்சுவை, ஆக்ஷன், உணர்ச்சிபூர்வமான கதாபாத்திரங்கள் என மோகன்லால் நடித்த பல்வேறு வகை திரைப்படங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

‘த்ரிஷ்யம்’, ‘மணிச்சித்திரதாழு’, ‘பாரதம்’, ‘வானபிரஸ்தம்’, ‘புலிமுருகன்’, ‘நேரு’, ‘ஒப்பம்’, ‘காலாபாணி’, ‘கிரீடம்’, ‘கிலுக்கம்’, ‘சித்திரம்’, ‘மின்னாரம்’, ‘ஆறாம் தம்புரான்’, ‘தன்மாத்ரா’, ‘12த் மேன்’, ‘எல்2: எம்புரான்’ உள்ளிட்ட ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த பல படங்கள் இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

இதோடு மட்டும் நின்றுவிடாமல், ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப தனிப்பட்ட பிரிவுகளாகவும் இந்த திரைப்படங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. “மோகன்லால் கல்ட் கிளாசிக்ஸ்”, “தி கம்ப்ளீட் லாலேட்டன் ஸ்வாக்”, “லாலேட்டன் LOL யுனிவர்ஸ்”, “பெஸ்ட் மோகன்லால் திரில்லர்ஸ்”, “மோகன்லால் ஹார்ட் & ஹோம்” போன்ற சிறப்பு பிரிவுகள் மூலம் ரசிகர்கள் தங்கள் விருப்பமான மோகன்லாலை தேர்வு செய்து ரசிக்கலாம்.

இந்த கொண்டாட்டத்தை ரசிகர்களுடன் மேலும் நெருக்கமாக இணைக்கும் வகையில், “மோகன்லால் சூப்பர் ஃபேன்” போட்டியையும் ஜியோஹாட்ஸ்டார் அறிவித்துள்ளது. மோகன்லாலின் திரைப்படங்களை மையமாகக் கொண்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் ரசிகர்களுக்கு, அவரின் கையொப்பமிட்ட பிரத்யேக டி-ஷர்ட்களை வெல்லும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

மொழி, தலைமுறை, மாநில எல்லைகளை தாண்டி ரசிகர்களை கவர்ந்த நடிகராக திகழும் மோகன்லாலின் சினிமா பயணத்தை, ஒரு திரைப்பட விழாவாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது. திரை ரசிகர்களுக்கு இது வெறும் ஸ்ட்ரீமிங் கொண்டாட்டம் மட்டுமல்ல, ஒரு நடிகரின் அபாரமான கலைப் பயணத்தை மீண்டும் அனுபவிக்கும் நினைவுப்பயணமாகவும் மாறியுள்ளது.

 

JioHotstar Celebrates the Magic of Mohanlal with a Grand Film Festival Featuring 115 Blockbuster Classics

, widely celebrated by fans as a “university of acting” in Indian cinema, is now being honoured with a unique cinematic celebration by .

Titled “Mohanlal – The Complete Actor”, the special film festival is being streamed on JioHotstar from May 20 to May 30. The festival showcases 115 landmark films from Mohanlal’s illustrious career spanning over four decades in Indian cinema.

One of the major highlights of this festival is that audiences get to witness the many dimensions of Mohanlal as an actor through a single curated platform. From family dramas and suspense thrillers to comedy entertainers, action spectacles, and emotionally powerful performances, the collection brings together the finest shades of the legendary actor.

The line-up includes several fan-favourite classics such as Drishyam, Manichitrathazhu, Bharatham, Vanaprastham, Pulimurugan, Neru, Oppam, Kaalapani, Kireedam, Kilukkam, Chithram, Minnaram, Aaraam Thampuran, Thanmathra, 12th Man, L2: Empuraan, and many more iconic titles that continue to hold a special place in cinema lovers’ hearts.

Adding more excitement to the celebration, the films have also been curated into specially themed collections such as Mohanlal Cult Classics, The Complete Lalettan Swag, Lalettan LOL Universe, Best Mohanlal Thrillers, and Mohanlal Heart & Home. These categories allow viewers to revisit different moods and milestones from Mohanlal’s extraordinary acting journey.

As part of the celebrations, JioHotstar has also launched the Mohanlal Super Fan Contest. Fans can participate by answering questions based on Mohanlal’s iconic films and stand a chance to win exclusive autographed T-shirts signed by the actor himself.

Having captivated audiences across languages, generations, and regions, Mohanlal remains one of the most admired actors in Indian cinema. Through this grand film festival, JioHotstar offers fans not just a streaming event, but an emotional journey celebrating the timeless legacy of one of Indian cinema’s greatest performers.