
காடு, கொந்தளிப்பு, கொலைவெறி… சத்யதேவின் ‘சமவர்த்தி’ புதிய ஆக்சன் உலகத்துக்கு அழைப்பு!
தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும், ஆழமான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து தனது தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள நடிகர் , தற்போது முற்றிலும் மாறுபட்ட பரிமாணத்தில் களமிறங்குகிறார். அவரது 16வது கதாநாயகன் திரைப்படமாக உருவாகும் புதிய படத்துக்கு ‘சமவர்த்தி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதுடன், அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்றும் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் இயக்குகிறார். தயாரிப்பாளர்களாக சிவசரண் ரெட்டி ஜக்கிடி மற்றும் சசிதர் ரெட்டி படமடி செயல்படுகின்றனர்.
‘சமவர்த்தி’ சாதாரண ஆக்சன் திரைப்படமாக அல்லாமல், “Ecological Action Thriller” எனப்படும் புதிய வகைத் திரில்லர் அணுகுமுறையில் உருவாகி வருகிறது. இயற்கை, வனம், மனித பேராசை, உயிர் பிழைப்புப் போராட்டம் ஆகியவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கும் இந்தக் கதை, வழக்கமான வர்த்தக படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட அனுபவத்தை தரும் என படக்குழு நம்பிக்கை தெரிவிக்கிறது.
வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், சுற்றிலும் ஆயுதங்களுடன் விரைந்துவரும் பலருக்கு மத்தியில், ஹெட்போன் அணிந்து அமைதியாக இசை கேட்கும் போல் அமர்ந்திருக்கும் சத்யதேவின் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. பின்னணியில் இடம்பெற்றுள்ள புலி உருவமும், காட்டு சூழலும், படத்தின் மையக்கரு இயற்கையோடு சம்பந்தப்பட்டதென சுட்டிக்காட்டுகிறது.
இந்தப் படத்திற்காக சத்யதேவ் தனது உடல் அமைப்பு, தோற்றம் மற்றும் ஆக்சன் பாணியில் பெரிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவரது திரைப்பயணத்தில் மிகவும் தீவிரமான மற்றும் அதிரடியான படைப்பாக ‘சமவர்த்தி’ அமையும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
படத்தில் , , கணவி லக்ஷ்மண், , மோகன் பகத் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் குழு:
- கலை இயக்கம் : மன்ட்ரூ ரவிக்குமார்
- ஆடை வடிவமைப்பு : பிரியங்கா ரெபாக்கா ஸ்ரீநிவாஸ்
- தயாரிப்பு வடிவமைப்பு : உல்லாஸ் ஹைதுர்
- ஒளிப்பதிவு : ஹர்ஷா மல்லிகார்ஜுன், தேவ் தீப் காந்திகுண்டு
- படத்தொகுப்பு : ஆதித்யா திவாரி
- இசை : சிஞ்சித் யெர்மில்லி
- கிரியேட்டிவ் புரொடியூசர் : வினய் ரெட்டி மமிடி
- நிர்வாகத் தயாரிப்பு : உஜ்வல் பி.எம்.
- மக்கள் தொடர்பு : யுவராஜ்
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் ‘சமவர்த்தி’, விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Into the Wild, Into the Chaos… Satyadev’s ‘Samavarthi’ Opens the Door to a Fierce New Action Universe!
Known for consistently choosing unconventional scripts and performance-driven roles, talented actor is now stepping into an entirely new cinematic space. The title and first-look poster of his 16th film as a lead actor, Samavarthi, have now been unveiled, instantly creating strong buzz among movie lovers.
Produced jointly by and , the film is directed by , with Shivacharan Reddy Jakkidi and Shashidhar Reddy Padamati backing the project as producers.
Unlike a conventional commercial entertainer, Samavarthi is being crafted as an “Ecological Action Thriller” — a fresh genre blend where nature, wilderness, survival, and human greed collide in a high-stakes narrative. The makers believe the film will offer a completely different cinematic experience from regular action dramas.
The newly released first-look poster has already sparked curiosity. While several armed men rush toward him with axes and knives, Satyadev appears unusually calm, listening to music through his headphones. The tiger imagery and dense forest elements in the backdrop subtly hint at the film’s strong connection with nature and the wild.
Sources close to the production reveal that Satyadev has undergone a significant physical transformation for the role, adapting a more intense and rugged action avatar. This has raised expectations that Samavarthi could become one of the most powerful and hard-hitting films in his career so far.
The film also features , , Ganavi Laxman, , Mohan Bhagath, and others in pivotal roles.
Technical Crew:
- Art Director: Mondru Ravikumar
- Costume Designer: Priyanka Rebecca Srinivas
- Production Designer: Ullas Haidur
- Cinematographers: Harsha Mallikarjun & Dev Deep Gandikundu
- Editor: Aditya Tiwari
- Music: Sinjith Yerramilli
- Creative Producer: Vinay Reddy Mamidi
- Executive Producer: Ujwal B.M.
- PRO: Yuvraaj
Samavarthi is being made simultaneously in Telugu, Tamil, Kannada, and Malayalam, and is gearing up for a grand theatrical release soon.
