
“ராம் சரணின் திரை வாழ்க்கையில் மறக்க முடியாத படம் ‘பெத்தி’… கிளைமாக்ஸ் ரசிகர்களை அதிர வைக்கும்!” – சிவராஜ்குமார் உறுதி
ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் “பெத்தி” திரைப்படம் தற்போது தென்னிந்திய திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. கிராமத்து பின்னணியுடன் ஆக்ஷன், உணர்ச்சி, விளையாட்டு மற்றும் உறவுகளை இணைத்து உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்கும் இப்படத்தை விருத்தி சினிமாஸ் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.
இப்படத்தில் முக்கியமான “கௌர்நாயுடு” கதாபாத்திரத்தில் நடித்துள்ள கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், சமீபத்திய ஊடக சந்திப்பில் பகிர்ந்த தகவல்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.
“பெத்தி சாதாரண கமர்ஷியல் படம் அல்ல; உணர்ச்சியும் மனித உறவுகளும் கலந்த ஒரு சக்திவாய்ந்த பயணம்” என ஆரம்பித்த சிவராஜ்குமார், கதை கேட்ட முதல் நொடியில் இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்ததாக தெரிவித்தார். குறிப்பாக “கௌர்நாயுடு” கதாபாத்திரம் ஒரு வலுவான நோக்கத்துடன் எழுதப்பட்டிருப்பதாகவும், அந்த கதாபாத்திரத்தின் உணர்ச்சி ஆழம் தான் தன்னை கவர்ந்ததாகவும் கூறினார்.
மேலும், “பெத்தி மற்றும் கௌர்நாயுடு இடையிலான உறவு ரசிகர்களின் மனதில் நீண்ட நாட்கள் நிற்கும். அன்பு, பாசம், நம்பிக்கை எல்லாமே அந்த உறவில் இருக்கும்” என்று அவர் குறிப்பிட்டார்.
ராம் சரணின் அர்ப்பணிப்பு குறித்து பேசுகையில், “இந்த படத்திற்காக அவர் செய்த உழைப்பு சாதாரண விஷயம் இல்லை. இரண்டு ஆண்டுகளாக அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். அவரது உடல் மொழி, மாற்றம், நடிப்பு — எல்லாமே தேசிய விருது தரத்தில் உள்ளது. ‘பெத்தி’ ராம் சரணுக்கு தேசிய விருது வாங்கித்தரும் படம் என நான் நம்புகிறேன்” என்று பெருமையாக தெரிவித்தார்.
இயக்குநர் புச்சி பாபு சனாவைப் பற்றி பேசும்போது, “ஒரு கதைக்கு என்ன தேவை என்பதை மிகவும் தெளிவாக அறிந்த இயக்குநர். அவர் உருவாக்கிய திரைக்கதை உலகமே இந்த படத்தின் பெரிய பலம். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் உயிரோடு கொண்டு வந்திருக்கிறார்” என்று பாராட்டினார்.
அதேபோல் ஜகபதி பாபு உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் கதையோடு நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளதாகவும், ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலுவின் காட்சிகள் திரையரங்கில் ரசிகர்களை மெய்மறக்கச் செய்யும் என்றும் அவர் கூறினார்.
பல விளையாட்டுகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், அவை வெறும் காட்சிக்காக அல்லாமல் கதையின் முக்கிய அங்கமாக அமைந்துள்ளதாகவும், “கிளைமாக்ஸ் யாரும் எதிர்பார்க்காத வகையில் இருக்கும்; அதை திரையரங்கில் அனுபவிக்க வேண்டும்” என்றும் சிவராஜ்குமார் தெரிவித்தார்.
தயாரிப்பாளர் சதீஷின் அர்ப்பணிப்பையும் பாராட்டிய அவர், “மிக உயர்ந்த தயாரிப்பு தரத்தில் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார். பெரிய திரையில் கொண்டாட வேண்டிய படம் இது” என்றார்.
ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள “பெத்தி” திரைப்படம், ராம் சரணின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாக அமையும் என தற்போது திரையுலக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

“Peddi Will Be a Landmark Film in Ram Charan’s Career… The Climax Will Leave Audiences Stunned!” – Shiva Rajkumar
Ram Charan’s upcoming film “Peddi” has already created massive buzz across South Indian cinema. Set against a rustic backdrop, the film blends action, emotions, sports, and strong human relationships, making it one of the most anticipated releases of the year. Directed by Buchi Babu Sana, the film is presented by Mythri Movie Makers and Sukumar Writings, while Venkata Satish Kilaru is producing it lavishly under the Vriddhi Cinemas banner.
Kannada Superstar Shiva Rajkumar, who plays the powerful role of “Gournaidu” in the film, recently shared exciting details during a media interaction, further increasing expectations around the project.
Calling “Peddi” much more than a regular commercial entertainer, Shiva Rajkumar said the emotional depth and the journey of the characters immediately convinced him to be part of the film. He revealed that Gournaidu is written with a strong purpose and emotional intensity, which made the role deeply satisfying for him as an actor.
He further added that the relationship between Peddi and Gournaidu would become one of the biggest highlights of the film. According to him, the bond between the two characters is filled with affection, trust, and emotional strength that audiences will strongly connect with.
Speaking about Ram Charan’s dedication, Shiva Rajkumar showered praise on the actor and confidently stated that “Peddi” could win him a National Award. He mentioned that Ram Charan spent nearly two years completely immersed in the role, undergoing a remarkable physical transformation and delivering a performance filled with honesty and commitment.
Praising director Buchi Babu Sana, Shiva Rajkumar described him as a filmmaker who clearly understands the soul of a story. He noted that the director has crafted every character with care and brought the film’s world alive with exceptional storytelling and execution.
He also highlighted the performances of Jagapathi Babu and the rest of the cast, while appreciating cinematographer R. Rathnavelu for creating visually stunning sequences that will mesmerize audiences on the big screen.
Talking about the sports elements in the movie, Shiva Rajkumar clarified that the sports are not included merely for entertainment, but are deeply connected to the emotional core of the story. He especially hinted that the climax would be completely unexpected and emotionally impactful, urging audiences to experience it in theaters.
The actor also appreciated producer Satish for backing the film with grand production values and immense passion, calling “Peddi” a film meant to be celebrated on the big screen.
With its worldwide release scheduled for June 4, “Peddi” is now being viewed as a potential milestone in Ram Charan’s cinematic journey and one of the biggest emotional action dramas to look forward to this year.
