Saturday, June 27
Shadow

மணிகண்டனுடன் கைகோர்க்கும் ராகேஷ்… தரமான உள்ளடக்க சினிமாவுக்கு பிறந்த புதிய கூட்டணி!

“நீலம் பள்ளியில் பயிற்சி… இப்போது தயாரிப்பாளராக புதிய இன்னிங்ஸ்! ”மணிகண்டனுடன் கைகோர்க்கும் ராகேஷ்… தரமான உள்ளடக்க சினிமாவுக்கு பிறந்த புதிய கூட்டணி!

தமிழ் சினிமாவில் உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வரும் நிலையில், அந்த வரிசையில் மேலும் ஒரு வலுவான முயற்சியாக புதிய திரைப்படம் ஒன்று உருவாக உள்ளது.

“ரைனோ பிக்சர்ஸ்” தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக புதிய பயணத்தை தொடங்குகிறார் திரு. ஆர். ராகேஷ்.

சினிமாவின் தொழில்நுட்பம், தயாரிப்பு நிர்வாகம் மற்றும் தரமான படைப்பின் பின்னணி வேலைகளை ஆழமாக அறிந்தவர் ராகேஷ். இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் நீலம் ப்ரொடக்ஷனில் எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசராக பணியாற்றிய அவர், கபாலி, காலா, பைசன் உள்ளிட்ட முக்கியமான திரைப்படங்களின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

திரைக்கதையின் வலிமை மற்றும் சமூக உணர்வுகளுடன் கூடிய படைப்புகள் தான் நீண்ட நாள் நினைவில் நிற்கும் என்ற நம்பிக்கையுடன், தற்போது தயாரிப்பாளராக அவர் எடுத்து வைக்கும் இந்த புதிய முயற்சி திரையுலகில் கவனம் பெற்றுள்ளது.

இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய பலமாக இணைந்துள்ளார் நடிகர் மணிகண்டன். இயல்பான நடிப்பு, நுணுக்கமான கதைத்தேர்வு மற்றும் மாறுபட்ட கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ள அவர், தொடர்ந்து தரமான வெற்றி படங்களை வழங்கி வருகிறார்.

குட் நைட், குடும்பஸ்தான் போன்ற வெற்றிப்படங்களின் வரிசையில் இணையும் வகையில், இந்த புதிய திரைப்படமும் குடும்ப உணர்வுகள், வாழ்க்கை நெருக்கமான சம்பவங்கள், வலுவான திரைக்கதை மற்றும் நவீன திரை மொழியுடன் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், வணிக அம்சங்களையும் தரமான உள்ளடக்கத்தையும் சமநிலைப்படுத்தும் முயற்சியாக இப்படம் அமையும் என கூறப்படுகிறது.

வருகின்ற ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு பிரம்மாண்டமாக தொடங்க உள்ள நிலையில், இயக்குனர், நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தயாரிப்பு நிறுவனம் விரைவில் வெளியிட உள்ளது.

உள்ளடக்க சினிமாவை விரும்பும் ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய கூட்டணி, தமிழ் சினிமாவில் பேசப்படும் முக்கியமான படைப்பாக மாறும் என்ற நம்பிக்கை திரையுலகில் உருவாகியுள்ளது.

 

“Trained at Neelam… Now Beginning a New Innings as Producer!”Rakesh Joins Hands with Manikandan for a Promising Content-Driven Film!

At a time when content-oriented films are receiving tremendous appreciation from audiences in Tamil cinema, yet another strong and promising project is set to join that league.

Under the banner of Rhino Pictures, Mr. R. Rakesh is all set to begin his new journey as a producer with this upcoming film.

Rakesh, who has a deep understanding of film production, creative execution, and quality storytelling, previously worked as an Executive Producer at director Pa. Ranjith’s Neelam Productions. He played a significant role in the making of major films such as Kabali, Kaala, and Bison.

Believing that powerful storytelling and socially rooted narratives create long-lasting cinematic impact, Rakesh now steps forward with a vision to produce meaningful and quality cinema. His new venture has already started gaining attention within the industry.

One of the biggest highlights of the project is the presence of actor Manikandan in the lead role. Known for his natural performances, unique script selection, and memorable characters, Manikandan has consistently delivered critically acclaimed and successful films.

Following the success of films like Good Night and Kudumbasthan, this upcoming project is said to blend strong emotions, relatable life moments, powerful storytelling, and a modern cinematic treatment to create a compelling theatrical experience.

Sources also suggest that the film will strike a perfect balance between quality content and commercial appeal.

The shooting of the film is expected to commence on a grand scale this August, while official announcements regarding the director, cast, and technical crew will be revealed soon by the production house.

With growing anticipation among cinema lovers who appreciate meaningful storytelling, this new collaboration is already being viewed as one of the most talked-about upcoming projects in Tamil cinema.