Wednesday, June 24
Shadow

“ராம் சரணின் திரைப்பயணத்தில் மறக்க முடியாத படமாக ‘பெத்தி’ இருக்கும்” – சென்னை விழாவில் படக்குழுவின் உறுதி

“ராம் சரணின் திரைப்பயணத்தில் மறக்க முடியாத படமாக ‘பெத்தி’ இருக்கும்” – சென்னை விழாவில் படக்குழுவின் உறுதி

சென்னை:

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட விளையாட்டு பின்னணித் திரைப்படமான ‘பெத்தி’, வெளியாகும் முன்பே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட படக்குழுவினர், திரைப்படம் குறித்த தங்களது அனுபவங்களையும் நம்பிக்கைகளையும் பகிர்ந்து கொண்டனர்.

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு தயாரித்துள்ள இப்படம், ஒரு கிராஸ்ஓவர் தடகள வீரரின் வாழ்க்கைப் போராட்டம், கனவு மற்றும் வெற்றிப் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. கிராமத்து மண்வாசனையுடன் விளையாட்டு, உணர்வு, ஆக்ஷன் மற்றும் மனித உறவுகளை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், பான்-இந்தியா அளவில் ஜூன் 4ஆம் தேதி வெளியாகிறது.

நிகழ்வில் பேசிய ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு, தனது திரைப்பயணத்தில் முக்கியமான படங்களின் வரிசையில் ‘பெத்தி’யும் இடம்பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். குறிப்பாக ராம் சரண் இந்தக் கதாபாத்திரத்திற்காக மேற்கொண்ட உடல் மற்றும் மன மாற்றங்கள், அவரது அர்ப்பணிப்பின் உச்சத்தை வெளிப்படுத்துவதாகக் கூறினார். மேலும், திரையரங்கில் பார்வையாளர்களை முழுமையாக மூழ்கடிக்கும் அனுபவமாக இந்தப் படம் இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

நடிகர் திவ்யேந்து சர்மா, ‘பெத்தி’ தனது தெலுங்கு சினிமா அறிமுகப் படமாக அமைந்துள்ளதில் மகிழ்ச்சி தெரிவித்தார். வழக்கமான நடிப்பு வட்டத்தைத் தாண்டி புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பை இப்படம் வழங்கியதாக அவர் கூறினார். ராம் சரண், புச்சி பாபு மற்றும் படக்குழுவினரின் ஒத்துழைப்பு மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

இயக்குநர் புச்சி பாபு, ‘பெத்தி’ ஒரு உணர்வுப்பூர்வமான திரைப்படம் என்றும், இரண்டாம் பாதியில் ராம் சரண் வெளிப்படுத்திய நடிப்பு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் என்றும் கூறினார். சமீபத்தில் நடைபெற்ற சிறப்புக் காட்சிகளை பார்த்தவர்கள் அளித்த பாராட்டுகள், படத்தின் மீது மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நடிகர் சிவராஜ்குமார், ‘குரு’ கதாபாத்திரம் தன்னை உடனடியாக ஈர்த்ததாகக் கூறினார். புற்றுநோய் சிகிச்சைக்காக சென்றிருந்த காலத்திலும் படக்குழு தனக்காக காத்திருந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்த அவர், ராம் சரணின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை மனதார பாராட்டினார்.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், ராம் சரண் தனது தந்தை சிரஞ்சீவியின் புகழைத் தாண்டி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியிருப்பதை குறிப்பிட்டு பாராட்டினார். ‘பெத்தி’ திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம், ஒரு புதிய படத்தில் பணிபுரியும் உற்சாகத்தை அளித்ததாகவும், பின்னணி இசை பணிகள் இறுதிவரை முழு ஈடுபாட்டுடன் நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.

நிகழ்வின் மைய ஈர்ப்பாக இருந்த ராம் சரண், ‘பெத்தி’ தனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமான திரைப்படம் என்று கூறினார். இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக நீண்ட இந்தப் படப்பயணத்தில், இயக்குநர் புச்சி பாபுவின் அர்ப்பணிப்பு தான் படத்தின் மிகப்பெரிய பலம் என அவர் குறிப்பிட்டார். மேலும், ‘ஆர்.ஆர்.ஆர்.’, ‘மகதீரா’, ‘ரங்கஸ்தலம்’ போன்ற தனது வெற்றிப் படங்களைப் போலவே, ‘பெத்தி’ பற்றியும் வீட்டில் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதாக கூறிய அவர், இது தனது வாழ்க்கையில் மறக்க முடியாத திரைப்படமாக இருக்கும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

ராம் சரண், ஜான்வி கபூர், சிவராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘பெத்தி’, இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஏற்கனவே வெளியாகியுள்ள பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், சென்னை பத்திரிகையாளர் சந்திப்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

கிராமத்து உணர்வுகளையும், விளையாட்டு வீரரின் போராட்டத்தையும் இணைக்கும் ‘பெத்தி’, ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

“Peddi Will Be One of the Most Memorable Films in Ram Charan’s Career” – Team Expresses Confidence at Chennai Press Meet

Chennai:

The much-anticipated sports drama ‘Peddi’, starring Mega Power Star Ram Charan, continues to generate massive buzz ahead of its release. At a grand press conference held in Chennai, the film’s cast and crew shared their experiences and expressed strong confidence in the project.

Directed by Buchi Babu Sana and produced by Venkata Satish Kilaru, Peddi revolves around the inspiring journey of a crossover athlete, blending sports, emotions, action, and human relationships against a vibrant rural backdrop. The pan-Indian film is set for a worldwide theatrical release on June 4.

Speaking at the event, cinematographer R. Rathnavelu said that Peddi would stand alongside the most important films of his career. He praised Ram Charan’s extraordinary commitment to the role, highlighting the physical and emotional transformation the actor underwent for the character. According to him, the film will offer audiences a deeply immersive theatrical experience while leaving a lasting impact long after they leave the cinema hall.

Actor Divyenndu Sharma, who makes his Telugu cinema debut with Peddi, described the film as a significant milestone in his career. He noted that the project allowed him to step out of his comfort zone and explore new dimensions as an actor. He also expressed gratitude to Buchi Babu Sana, Ram Charan, and the entire team for their support and collaboration.

Director Buchi Babu Sana described Peddi as a deeply emotional film that will resonate strongly with audiences. He revealed that viewers who attended special preview screenings had showered the film with praise, further strengthening his confidence in its success. He emphasized that Ram Charan’s performance, particularly in the second half, would be one of the film’s biggest highlights.

Veteran actor Shivarajkumar, who plays a pivotal mentor figure in the film, said the role immediately appealed to him. He also shared how the team patiently waited for him during his cancer treatment, a gesture that deeply touched him. Shivarajkumar praised Ram Charan’s dedication and predicted that audiences would be amazed by his performance.

Oscar-winning composer A.R. Rahman lauded Ram Charan for creating his own identity beyond the immense legacy of his father, Chiranjeevi. He remarked that working on Peddi gave him the excitement of composing for a debut film and revealed that the background score was completed with tremendous passion and dedication right up to the final stages.

Ram Charan, the star attraction of the event, described Peddi as one of the most personal and heartfelt films of his career. Reflecting on the two-and-a-half-year journey of making the film, he credited director Buchi Babu Sana’s relentless commitment as one of the project’s greatest strengths. He also noted that, much like his landmark films RRR, Magadheera, and Rangasthalam, he has found himself constantly talking about Peddi even after returning home from the shoot—something he considers a sign of a future blockbuster.

Featuring an ensemble cast that includes Ram Charan, Janhvi Kapoor, Shivarajkumar, Jagapathi Babu, and Divyenndu Sharma, Peddi is widely regarded as one of the most awaited Indian films of the year. The songs composed by A.R. Rahman and the recently released trailer have already received an overwhelming response from audiences, while the Chennai press meet has further amplified excitement surrounding the film.

Combining rural emotions, sports, action, and an inspiring underdog journey, Peddi is all set for a grand worldwide theatrical release on June 4.