“ராம் சரணின் திரைப்பயணத்தில் மறக்க முடியாத படமாக ‘பெத்தி’ இருக்கும்” – சென்னை விழாவில் படக்குழுவின் உறுதி
“ராம் சரணின் திரைப்பயணத்தில் மறக்க முடியாத படமாக ‘பெத்தி’ இருக்கும்” – சென்னை விழாவில் படக்குழுவின் உறுதி
சென்னை:
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட விளையாட்டு பின்னணித் திரைப்படமான ‘பெத்தி’, வெளியாகும் முன்பே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட படக்குழுவினர், திரைப்படம் குறித்த தங்களது அனுபவங்களையும் நம்பிக்கைகளையும் பகிர்ந்து கொண்டனர்.
இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு தயாரித்துள்ள இப்படம், ஒரு கிராஸ்ஓவர் தடகள வீரரின் வாழ்க்கைப் போராட்டம், கனவு மற்றும் வெற்றிப் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. கிராமத்து மண்வாசனையுடன் விளையாட்டு, உணர்வு, ஆக்ஷன் மற்றும் மனித உறவுகளை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், பான்-இந்தியா ...

