
வாலிபால் மைதானத்திலிருந்து வெள்ளித்திரைக்கு… தமிழ் சினிமாவில் புதிய அத்தியாயம் தொடங்கும் “அட்டாக்கர்”!
தமிழ் சினிமாவில் விளையாட்டை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தாலும், வாலிபால் விளையாட்டை முழுமையாக மையப்படுத்திய திரைப்படம் இதுவரை உருவாகாதது குறிப்பிடத்தக்கது. அந்த குறையை போக்கும் வகையில், தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படமாக உருவாகும் “அட்டாக்கர்” திரைப்படம் இன்று சென்னையில் நடைபெற்ற படபூஜையுடன் அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது.
BSE-யில் பட்டியலிடப்பட்ட ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தினேஷ்ராஜ் தயாரிக்கும் இந்தப் படம், புதிய தலைமுறை நட்சத்திரங்களின் அறிமுகத்தாலும் கவனம் பெற்று வருகிறது. நடிகர் தனுஷின் மருமகனான பவிஷ் மற்றும் நடிகர்-இயக்குநர் சுந்தர் சி – குஷ்பு தம்பதியினரின் மகளான அவந்திகா சுந்தர் ஆகியோர் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகின்றனர்.

இப்படத்தை இயக்குநர் பா.இரஞ்சித்திடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய தாமோ நாகபூஷணம் எழுதி இயக்குகிறார். விளையாட்டு வெற்றிகளை மட்டும் பேசாமல், வாலிபாலைச் சுற்றியுள்ள சமூக வாழ்க்கை, கிராமப்புற கலாச்சாரம், பாரம்பரிய அடையாளங்கள் மற்றும் இளைஞர்களின் கனவுகளை இணைத்து ஜனரஞ்சகமான கதையாக உருவாக்கப்படுவது இப்படத்தின் சிறப்பம்சமாகும்.
படத்தின் துவக்க விழாவில் இயக்குநர் பா.இரஞ்சித், திரைப்பட ஆய்வாளர் மற்றும் தயாரிப்பாளர் ஜி. தனஞ்செயன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இந்திய வாலிபால் வீரர்களான ஜி.ஆர். வைஷ்ணவ், எல்.எம். மனோஜ் உள்ளிட்ட பல விளையாட்டு நட்சத்திரங்களின் பங்கேற்பு நிகழ்வுக்கு கூடுதல் முக்கியத்துவத்தை அளித்தது.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பா.இரஞ்சித், தனது கிராமத்தில் வாலிபால் விளையாட்டை அறிமுகப்படுத்திய அனுபவத்தை பகிர்ந்துகொண்டதுடன், அந்த விளையாட்டு பல இளைஞர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டார். வாலிபாலை மையமாகக் கொண்டு தமிழ் திரைப்படம் உருவாகுவது மகிழ்ச்சியளிப்பதாகவும், “அட்டாக்கர்” பெரிய வெற்றி பெற வேண்டும் என்றும் அவர் வாழ்த்தினார்.

தயாரிப்பாளர் தினேஷ்ராஜ் பேசுகையில், விளையாட்டு மற்றும் கலாச்சார அடையாளங்களை இணைக்கும் முயற்சியாக இப்படம் உருவாகி வருவதாக தெரிவித்தார். கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக நடிகர்கள் தீவிர வாலிபால் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், தேசிய அளவிலான வாலிபால் வீரர்கள் பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் கூறினார்.
குறிப்பாக, இந்தியாவின் முன்னணி வாலிபால் வீரர்களில் ஒருவரான அஜித் லால் உள்ளிட்ட பல தேசிய வீரர்கள் இப்படத்தில் இடம்பெறுவது, படத்தின் நம்பகத்தன்மையையும் விளையாட்டு உணர்வையும் மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே வெளியிடப்பட்ட புரோமோ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ள நிலையில், “அட்டாக்கர்” திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டின் பரபரப்பும், இளமைத் துடிப்பும், மனித உணர்வுகளும் இணையும் இந்தப் படம், தமிழ் சினிமாவில் விளையாட்டு திரைப்படங்களுக்கான புதிய மைல்கல்லாக அமையும் என்ற நம்பிக்கை திரையுலகில் நிலவுகிறது.
விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள “அட்டாக்கர்”, தற்போது உருவாகி வரும் தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திரைப்படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

From the Volleyball Court to the Silver Screen: “Attacker” Marks a New Chapter in Tamil Cinema
While sports-based films have occasionally found success in Tamil cinema, no film has ever been made with volleyball as its central theme. Breaking new ground, “Attacker”, touted as Tamil cinema’s first-ever volleyball-based feature film, was officially launched with a grand pooja ceremony in Chennai today.
Produced by Dineshraj under the banner of Cinema Media & Entertainment Limited, a company listed on the BSE, the film is already drawing attention for introducing a new generation of talent. The movie marks the acting debut of Pavish, actor Dhanush’s nephew, and Avantika Sundar, daughter of actor-director Sundar C and actress Khushbu.
The film is written and directed by debutant Thamo Nagabooshanam, who previously worked as an associate director with acclaimed filmmaker Pa. Ranjith. Rather than focusing solely on sporting victories, Attacker aims to blend the excitement of volleyball with themes of community life, rural culture, tradition, and the aspirations of young people.

The launch event was attended by several notable personalities, including filmmaker and film analyst-producer , who extended their best wishes to the team. The presence of Indian volleyball players G.R. Vaishnav and L.M. Manoj, along with several other sports personalities, added significance to the occasion.
Speaking at the event, recalled introducing volleyball in his village and shared how the sport had positively influenced the lives of many young people. He expressed happiness that a Tamil film is now being made around the sport and wished Attacker great success.
Producer described the project as an effort to combine sports with cultural identity. He revealed that the actors have undergone intensive volleyball training for more than six months and that several national-level volleyball players have been cast in important roles.
Notably, one of India’s leading volleyball players, Ajith Lal, along with several other national-level athletes, will be seen in key roles, a move expected to enhance the film’s authenticity and sporting spirit.

The film’s promotional video, released earlier, has already garnered hundreds of thousands of views and gone viral across social media platforms, significantly boosting anticipation among audiences.
With filming set to begin soon, Attacker is shaping up to be one of the most eagerly awaited sports films in Tamil cinema. Combining the energy of competitive sports, youthful passion, and strong human emotions, the film is expected to set a new benchmark for sports-based storytelling in the industry.
