Friday, June 26
Shadow

கிராமத்து மண்வாசனையுடன் மீண்டும் வருகிறார் கவின்! ‘பேர் சொல்லும் பிள்ளை’ படப்பிடிப்பு இனிதே தொடக்கம்

கிராமத்து மண்வாசனையுடன் மீண்டும் வருகிறார் கவின்! ‘பேர் சொல்லும் பிள்ளை’ படப்பிடிப்பு இனிதே தொடக்கம்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து வெற்றிப் பாதையில் பயணித்து வரும் நடிகர் கவின், தற்போது மேலும் ஒரு புதிய கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களை சந்திக்கத் தயாராகியுள்ளார். அந்தப் புதிய பயணத்தின் பெயர் தான் ‘பேர் சொல்லும் பிள்ளை’.

‘தண்டட்டி’ திரைப்படத்தின் மூலம் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய இயக்குநர் ராம் சங்கையா, இந்த முறை கிராமத்து பின்னணியையும், குடும்ப உணர்வுகளையும், நகைச்சுவையையும் கலந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு படைப்பை உருவாக்க களமிறங்கியுள்ளார். அதில் கதையின் மையமாக கவின் இடம்பெறுவது ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிக்கிறார். மேலும், ஒளிப்பதிவை ஆர். வேல்ராஜ் கவனிக்க, இசைக்கு ஜஸ்டின் பிரபாகரன் உயிரூட்டுகிறார். படத்தொகுப்பை ஜி. மதன் மேற்கொள்கிறார். கலை இயக்கப் பொறுப்பை எம். கதிரவன் மதி ஏற்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் தரமான படைப்புகளை வழங்கி வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ். லக்ஷ்மன் குமார் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ. வெங்கடேஷ் இணைத் தயாரிப்பாளராக உள்ளார். கிராமத்து வாழ்க்கையின் இயல்பான உணர்வுகளையும், மக்களை கவரும் பொழுதுபோக்கு அம்சங்களையும் இணைத்து உருவாகும் இப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடையும் என படக்குழு நம்பிக்கை தெரிவிக்கிறது.

சென்னையில் நடைபெற்ற படத்தின் பாரம்பரிய தொடக்க விழா, திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் திரைப்படத் துறையின் முன்னணி தயாரிப்பாளரான ‘கலைப்புலி’ எஸ். தாணு, முதல் கிளாப்பை அடித்து படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். நிகழ்வில் இயக்குநர்-நடிகர் தமிழ், இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா மற்றும் இயக்குநர் ஆன்ட்ரூ லூயிஸ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு படக்குழுவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

கிராமத்து உணர்வுகளும், மனித உறவுகளின் ஆழமும், ரசிகர்களை மகிழ்விக்கும் பொழுதுபோக்கு அம்சங்களும் இணையும் இந்த ‘பேர் சொல்லும் பிள்ளை’, கவினின் திரைப்பயணத்தில் மற்றொரு முக்கியமான மைல்கல்லாக அமையும் என்ற நம்பிக்கை தற்போது திரையுலக வட்டாரங்களில் பரவி வருகிறது. ரசிகர்களும் இந்தப் புதிய கூட்டணியின் படைப்பை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Kavin Returns to the Roots with Per Sollum Pillai; Grand Launch Ceremony Held in Chennai

Actor Kavin, who has been steadily carving a niche for himself with successful and content-driven films, is all set to embark on an exciting new journey with his upcoming project titled Per Sollum Pillai.

Directed by Ram Sangaiah, who won appreciation for his critically acclaimed film Thandatti, Per Sollum Pillai promises to be a wholesome entertainer set against a rural backdrop, blending family emotions, humor, and heartwarming storytelling. With Kavin playing the lead role, the film has already generated considerable curiosity among fans and industry circles alike.

Actress Sanjana Krishnamoorthy stars opposite Kavin, while acclaimed cinematographer R. Velraj handles the visuals. The music is composed by Justin Prabhakaran, with editing by G. Madan and production design by M. Kathiravan Mathi.

The film is produced by S. Lakshman Kumar under the banner of Prince Pictures, known for backing quality cinema. A. Venkatesh serves as the co-producer. The makers aim to bring an engaging rural entertainer that resonates with audiences across demographics through its relatable characters and rooted storytelling.

The traditional launch ceremony of Per Sollum Pillai was held in Chennai in the presence of several notable personalities from the Tamil film industry. Veteran producer Kalaipuli S. Thanu officially inaugurated the film’s shoot by giving the ceremonial first clap. Filmmaker-actor Tamil, director Thiagarajan Kumararaja, and director Andrew Louis were among the distinguished guests who attended the event and extended their best wishes to the team.

With a promising combination of Kavin, Ram Sangaiah, Sanjana Krishnamoorthy, R. Velraj, and Justin Prabhakaran, Per Sollum Pillai is shaping up to be a film that celebrates rural life, human relationships, and entertainment in equal measure. Expectations are already high, and the project is being viewed as a significant addition to Kavin’s growing filmography.