
காதல், காமெடி, சென்டிமென்ட் கலந்த முழுநீள பொழுதுபோக்கு விருந்தாக உருவாகும் ‘அலப்பற கிளப்புறோம்’ – இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்!
சென்னை:
புதிய கதைக்களத்தையும், இளம் திறமைகளையும் முன்னிறுத்தும் முயற்சியாக AZ06 Productions நிறுவனம் தயாரித்து வரும் ‘அலப்பற கிளப்புறோம்’ திரைப்படம், இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை வேகமாக மேற்கொண்டு வருகிறது. இப்படத்தை இயக்குநரும் தயாரிப்பாளருமான எஸ்.எம். முகமது அசாருதீன் இயக்கி தயாரித்துள்ளார். இதற்கு முன் ‘ஹாப்பி பர்த்டே லூசி’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற அவர், இம்முறை வித்தியாசமான பொழுதுபோக்கு அம்சங்களுடன் ரசிகர்களை கவரும் வகையில் புதிய படைப்பை உருவாக்கியுள்ளார்.
முழுக்க முழுக்க காதல், காமெடி மற்றும் குடும்ப சென்டிமென்ட் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களையும் இணைத்து, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இப்படத்தின் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. சிரிப்பையும், உணர்வுகளையும், இளமைக் கொண்டாட்டத்தையும் ஒருசேர அனுபவிக்கச் செய்யும் வண்ணம் ‘அலப்பற கிளப்புறோம்’ உருவாகியுள்ளது.

இந்தப் படத்தின் மூலம் விக்ரம் சுந்தர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருடன் நரேஷ், சஞ்சீவ் சீனிவாஸ், ஹரி விஜய், கிரிதர், ஹரிஷ், கைலாஷ், எஸ்.கே. குரு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கதாநாயகிகளாக ஜனனி, சிவரஞ்சனி, அனுப்பியங்கா, சுமியா, மாலினி தனா, சுகன்யா, நந்தினி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், விஜய் டிவி மூலம் பிரபலமான சங்கர பாண்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், ‘கஞ்சா பூ கண்ணாலே’ பாடலின் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்ற பாடலாசிரியர் மணிமாறன், இப்படத்தின் மூலம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகராகவும் தோன்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை மற்றும் தேனி மாவட்டத்தின் அழகிய இயற்கைச் சூழல்களில் பல கட்டங்களாக நடைபெற்றது. திட்டமிட்டபடி அனைத்து படப்பிடிப்புகளும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது படத்தின் பின்னணி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இப்படத்திற்கு மோனிஷ் மற்றும் ஹய்டு கார்த்திக் இணைந்து இசையமைத்துள்ளனர். ஐயப்பன் மற்றும் பாலகுரு ஒளிப்பதிவை மேற்கொண்டு, கதையின் உணர்வுகளை காட்சிகளின் மூலம் உயிர்ப்பித்துள்ளனர்.
தற்போது எடிட்டிங், டப்பிங், ரீ-ரெக்கார்டிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் படத்தின் டிரெய்லர், இசை வெளியீட்டு விழா மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குநரும் தயாரிப்பாளருமான எஸ்.எம். முகமது அசாருதீன் வெளியிட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

‘Alappara Klappurom’ Nears Completion; Post-Production in Full Swing
Chennai:
AZ06 Productions’ upcoming Tamil entertainer ‘Alappara Klappurom’ has entered the final stages of post-production. The film is written, directed, and produced by S.M. Mohamed Azharudheen, who previously directed ‘Happy Birthday Lucy’. With this project, the filmmaker promises a wholesome commercial entertainer packed with romance, comedy, and emotional moments.
Designed as a complete family entertainer, Alappara Klappurom blends love, humor, and sentiment into an engaging narrative aimed at audiences of all age groups.
The film introduces Vikram Sundar as the lead hero. The supporting cast includes Naresh, Sanjeev Srinivas, Hari Vijay, Giridhar, Harish, Kailash, and S.K. Guru, who play pivotal roles in the story.
The female leads are Janani, Sivaranjani, Anuppiyanka, Sumiya, Malini Thana, Sukanya, and Nandhini. Popular Vijay TV personality Sankar Pandian also appears in a significant role, adding further appeal to the film.

Another notable highlight is the acting debut of lyricist Manimaran, who gained recognition through the hit song “Ganja Poo Kannale.” He plays an important character in the film.
Mounted on a grand scale, the movie was extensively shot across Chennai and the scenic locations of Theni district. The entire shoot has now been successfully completed.
The music has been composed by Monish and Hydu Karthik, while Ayyappan and Balaguru have handled the cinematography, capturing the film’s vibrant visuals.
With editing, dubbing, background score, and other post-production work progressing rapidly, the makers are gearing up for the next phase of promotions. Director-producer S.M. Mohamed Azharudheen is expected to officially announce the film’s trailer launch, audio launch event, and release date soon.
