
பிரதீப் ரங்கநாதனின் புதிய அவதாரம்… வுமன் சென்ட்ரிக் கதையுடன் கவனம் ஈர்க்கும் #PRS01 அறிமுக காணொளி வெளியீடு!
நடிகர், இயக்குநர் என இரண்டு துறைகளிலும் தொடர்ந்து வெற்றிப் பயணம் மேற்கொண்டு வரும் பிரதீப் ரங்கநாதன், தற்போது தயாரிப்பாளராகவும் தனது புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். அவரது தயாரிப்பில் உருவாகி வரும் #PRS01 திரைப்படத்தின் அறிமுக காணொளி அதிகாரப்பூர்வமாக வெளியாகி, திரையுலகிலும் ரசிகர்களிடையிலும் குறிப்பிடத்தக்க எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
கதையின் மையமாக பெண்மையை முன்னிறுத்தும் இந்த திரைப்படத்தில் தென்னிந்தியாவின் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவரான மமீதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். கதைக்களம், காட்சியமைப்பு மற்றும் புதிய அணுகுமுறையால் இந்த திரைப்படம் ஆரம்பத்திலிருந்தே தனித்துவமான கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்தப் படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய ஆறு பேர் இணைந்து ‘தி ஆல்ஃபா யூனிட்’ என்ற பெயரில் இயக்குநர்களாக அறிமுகமாகிறார்கள். ஒரே படத்தில் ஆறு படைப்பாளிகள் இணைந்து இயக்குநர்களாக களமிறங்குவது திரைப்பட உலகில் தனித்துவமான முயற்சியாக பார்க்கப்படுகிறது.
மமீதா பைஜுவுடன் அஸ்வத் மாரிமுத்து, சிவாஜி சொன்டினேனி, சுவாசிகா, அனாமிகா மகி, லிசி ஆண்டனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தினேஷ்குமார் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை பிரதீப் இ. ராகவ் மேற்கொண்டுள்ளார்.
கதை எழுதி தயாரித்துள்ள பிரதீப் ரங்கநாதன், தனது PR SHOW நிறுவனத்தின் சார்பில் இந்த திரைப்படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாக்கி வருகிறார்.
தற்போது வெளியாகியுள்ள அறிமுக காணொளி, அதன் ஸ்டைலிஷ் காட்சியமைப்பு, வலுவான பின்னணி இசை, மர்மம் கலந்த கான்செப்ட் மற்றும் நடிகர்களின் தோற்றம் ஆகியவற்றால் சமூக வலைதளங்களில் வேகமாக கவனம் பெற்று வருகிறது.
மேலும், ‘டிராகன்’ திரைப்பட வெற்றிக்குப் பிறகு பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து மீண்டும் இணைந்திருப்பதும், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பிரம்மாண்ட படத்தை இயக்கி வரும் அஸ்வத் மாரிமுத்து இந்த முயற்சியிலும் முக்கிய பங்காற்றியிருப்பதும், #PRS01 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
புதிய தலைமுறை படைப்பாளிகளின் கூட்டணியும், வலுவான பெண் மையக் கதையும், தொழில்நுட்ப ரீதியாக வலிமையான குழுவும் இணைந்துள்ள #PRS01, அடுத்தடுத்த அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் முக்கியமான பன்மொழித் திரைப்படங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது.

Pradeep Ranganathan Turns Producer; #PRS01 Launch Video Sparks Excitement Across Industries
Actor-filmmaker Pradeep Ranganathan has officially stepped into film production with his latest multilingual venture, #PRS01. The launch video of the much-anticipated women-centric film has now been unveiled, generating significant buzz among cinema enthusiasts and across social media.
Headlined by South Indian actress Mamitha Baiju, the film promises a compelling female-led narrative. The launch video has impressed audiences with its stylish visuals, intriguing concept, and impactful background score, setting high expectations for the project.
One of the film’s biggest highlights is the directorial debut of The Alpha Unit, a collective of six assistant directors who previously worked under Pradeep Ranganathan. Coming together under a single banner, the team makes its filmmaking debut with this ambitious multilingual production.
The ensemble cast features Mamitha Baiju, Ashwath Marimuthu, Sivaji Sontineni, Swasika, Anamika Mahi, Lissy Antony, and several other notable actors in pivotal roles.
The technical crew includes cinematographer Dineshkumar Purushothaman, while the music is composed by the fast-rising Sai Abhyankkar. Editing is handled by Pradeep E. Raghav. The story has been written by Pradeep Ranganathan, who is also producing the film under his PR SHOW banner.
Tentatively titled #PRS01, the film is being simultaneously produced in Tamil, Telugu, and Malayalam, aiming to reach audiences across South India.
The project also reunites Pradeep Ranganathan and Ashwath Marimuthu after the blockbuster success of Dragon. Ashwath, who is currently directing a prestigious film starring Rajinikanth, has joined the cast of #PRS01, further elevating anticipation for the film.
With a strong women-centric storyline, an exciting new team of filmmakers, and a talented cast and crew, #PRS01 is shaping up to be one of the most awaited multilingual films in the coming months.
