Saturday, July 11
Shadow

அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வைரல்… அடுத்தடுத்து வெளியாகும் இரண்டு புதிய போஸ்டர்களால் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வைரல்… அடுத்தடுத்து வெளியாகும் இரண்டு புதிய போஸ்டர்களால் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளையும், தரமான படைப்புகளையும் தொடர்ந்து வழங்கி வரும் தயாரிப்பாளர் கே.எஸ். சினிஷின் புதிய தயாரிப்பான ‘சூப்பர் ஹீரோ’ திரைப்படம், அதன் முதல் பார்வை (First Look) வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

அர்ஜுன் தாஸ் மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், படத்தின் தனித்துவமான உலகத்தையும், வித்தியாசமான கதைக்களத்தையும் உணர்த்தும் வகையில் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, படத்தின் கதையின் மேலும் சில அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் இன்னும் இரண்டு பிரத்யேக போஸ்டர்களை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் கே.எஸ். சினிஷ், தனது சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் மூலம் இப்படத்தை வழங்குகிறார். தரமான உள்ளடக்கங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் ரெடாக்டட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஷான்ஜன் ஜி இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார்.

இயக்குநராக ‘பலூன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான கே.எஸ். சினிஷ், பின்னர் தயாரிப்பாளராக ‘டிக்கிலோனா’ மற்றும் தேசிய விருது பெற்ற ‘பார்க்கிங்’ போன்ற வெற்றிப்படங்களை வழங்கி தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார். அதே வரிசையில், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக ‘சூப்பர் ஹீரோ’ உருவாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வலுவான வில்லன் கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அர்ஜுன் தாஸ், தற்போது கதாநாயகனாகவும் தொடர்ந்து வெற்றிப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக திறமையான இளம் நடிகை தேஜு அஷ்வினி நடித்துள்ளார்.

படத்தின் மற்றொரு முக்கிய சிறப்பம்சமாக, பிரபல நடன இயக்குநரும் நடிகருமான சாண்டி மாஸ்டர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்திய பல திரைப்படங்களில் தனது நடிப்பால் பாராட்டுகளைப் பெற்றுள்ள சாண்டி மாஸ்டர் மற்றும் அர்ஜுன் தாஸ் நேருக்கு நேர் மோதும் காட்சிகள் படத்தின் முக்கிய ஈர்ப்பாக இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவிக்கிறது.

இந்த திரைப்படத்தின் மூலம் விக்னேஷ் வேணுகோபால் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘பலூன்’ திரைப்படத்தில் கே.எஸ். சினிஷிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அவர், கதையை அணுகிய விதம், திரைக்கதையில் காட்டிய தெளிவு மற்றும் திட்டமிடல் ஆகியவை தயாரிப்புக் குழுவின் முழு நம்பிக்கையையும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய இயக்குநர்களை தமிழ் சினிமாவிற்கு தொடர்ந்து அறிமுகப்படுத்தி வரும் கே.எஸ். சினிஷ், இதற்கு முன்பு ‘டிக்கிலோனா’ மூலம் கார்த்திக் யோகியையும், தேசிய விருது பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநர் ராம்குமாரையும் அறிமுகப்படுத்தியிருந்தார். அந்த வரிசையில் விக்னேஷ் வேணுகோபாலும் குறிப்பிடத்தக்க இயக்குநராக உருவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

படத்திற்கு இசையமைப்பாளர் ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். ‘ஹிருதயம்’, ‘குஷி’, ‘ஒன்ஸ் மோர்’ உள்ளிட்ட படங்களில் மனதை வருடும் இசையை வழங்கிய அவர், ‘சூப்பர் ஹீரோ’ திரைப்படத்திற்கும் இசையமைத்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

முதல் பார்வை மூலம் கவனத்தை ஈர்த்துள்ள ‘சூப்பர் ஹீரோ’, விரைவில் வெளியாகவுள்ள இரண்டு புதிய போஸ்டர்களின் மூலம் தனது அடுத்த கட்ட புரமோஷனை தொடங்கவுள்ளது. தொடர்ந்து வெளியாகவுள்ள அப்டேட்கள் ரசிகர்களிடையே இந்த திரைப்படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

# Arjun Das’ ‘Super Hero’ First Look Wins Big Response; Two New Posters to Be Unveiled Soon

The recently released first look of ‘Super Hero’, starring Arjun Das in the lead, has generated an overwhelming response from fans and the film fraternity alike. The striking poster has sparked curiosity about the film’s unique premise, creating strong anticipation across social media platforms. Building on the excitement, the makers are now set to unveil two brand-new posters in the coming days, offering audiences a deeper glimpse into the film’s intriguing world.

The film is presented by National Award-winning producer K.S. Sinish under his banner Soldiers Film Factory. It is jointly produced by Shanzhen G of Redacted Studios, who is known for backing content-driven cinema with fresh storytelling.

After making his directorial debut with Balloon, K.S. Sinish successfully established himself as a producer with acclaimed films such as Dikkiloona and the National Award-winning Parking. Continuing his commitment to innovative and entertaining cinema, Super Hero promises to be a wholesome entertainer that appeals to audiences across all age groups.

Following his remarkable success as one of Tamil cinema’s most sought-after performers in powerful antagonist roles, Arjun Das has also carved a niche for himself as a leading hero. In Super Hero, he plays the central character alongside Teju Ashwini, who has been steadily earning praise for her impressive performances.

Adding further excitement to the project, popular choreographer-turned-actor Sandy Master plays the film’s antagonist. Having impressed audiences with his performances in films like Loka – Chapter One and the recently released Parimala & Co., Sandy’s face-off with Arjun Das is expected to be one of the film’s major highlights.

Super Hero marks the directorial debut of Vignesh Venugopal, who previously worked as an assistant director under K.S. Sinish on Balloon. His clarity of vision, meticulous planning, and confidence in the script have earned appreciation from the entire production team.

K.S. Sinish has consistently introduced promising new filmmaking talent to Tamil cinema. Earlier, he launched Karthik Yogi through Dikkiloona and Ramkumar Balakrishnan through the National Award-winning Parking. With Super Hero, he continues that tradition by introducing Vignesh Venugopal as a filmmaker.

The film features music composed by Hesham Abdul Wahab, whose soulful scores in films such as Hridayam, Kushi, and Once More have won widespread appreciation. His association with Super Hero has further heightened expectations for the film’s soundtrack.

With its first look already creating a strong buzz, Super Hero is gearing up for the next phase of its promotional campaign through the release of two new posters. As anticipation continues to grow, the film is emerging as one of the most eagerly awaited upcoming Tamil entertainers.