
“சிரிப்பு, காதல், உணர்வுகள்… புதிய தலைமுறையின் அழகான அறிமுகமாக வருகிறது ‘மிஸ்டர் பாரத்’!”
சென்னை:
யூடியூப் தளத்தில் தங்களது திறமையை நிரூபித்து, தற்போது வெள்ளித்திரையிலும் தனித்த அடையாளத்தை உருவாக்கி வரும் புதிய தலைமுறை கலைஞர்களின் வரிசையில், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் திரைப்படம் ‘மிஸ்டர் பாரத்’. அறிவிக்கப்பட்ட நாள் முதலே எதிர்பார்ப்பை உருவாக்கிய இப்படம், தற்போது வெளியாகவிருக்கும் நிலையில் படக்குழு படத்தின் பல சுவாரஸ்ய அம்சங்களை பகிர்ந்துள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்கும் இந்தப் படத்தை சுதன் சுந்தரம், லோகேஷ் கனகராஜ், ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். கதையை எழுதி இயக்கியிருப்பவர் நிரஞ்ஜன்.
ஒரே படத்தில் ஆறு புதிய முகங்கள்!
தமிழ் சினிமாவில் ஒரே திரைப்படத்தின் மூலம் ஆறு புதிய திறமையாளர்கள் அறிமுகமாகும் அரிய நிகழ்வாக ‘மிஸ்டர் பாரத்’ உருவாகியுள்ளது. கதாநாயகனாக பாரத், கதாநாயகியாக சம்யுக்தா விஸ்வநாதன் மட்டுமல்லாமல், இயக்குநர் நிரஞ்ஜன், இசையமைப்பாளர் பிரணவ் முனிராஜ், கலை இயக்குநர் பாவனா கோவர்தன், படத்தொகுப்பாளர் திவாகர் டெனிஸ் ஆகியோரும் இந்தப் படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறார்கள்.

‘மாஸ்டர் பீஸ்’ முதல் ‘மிஸ்டர் பாரத்’ வரை…
இந்தப் படத்திற்கு ஆரம்பத்தில் ‘மாஸ்டர் பீஸ்’ என்ற தலைப்பு பரிசீலிக்கப்பட்டது. ஆனால் அதே பெயரில் ஏற்கனவே பிற மொழிகளில் திரைப்படங்கள் இருந்ததால், புதிய தலைப்பை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
அப்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பரிந்துரைத்த ‘மிஸ்டர் பாரத்’ என்ற தலைப்பு படக்குழுவினருக்கு மிகவும் பிடித்திருந்தாலும், அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வெற்றிப் படத்தின் பெயர் என்பதால் கூடுதல் பொறுப்புடன் அணுகப்பட்டது. இதையடுத்து ஏ.வி.எம். நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ No Objection Certificate (NOC) பெற்று, சட்டரீதியான அனுமதியுடன் அந்த தலைப்பு பயன்படுத்தப்பட்டது.
“கதாநாயகனாக நடிப்பது என் வாழ்க்கையின் முக்கிய தருணம்” – பாரத்
இதற்கு முன்பு ‘பிரின்ஸ்’, ‘லவ் டுடே’ உள்ளிட்ட படங்களில் நண்பர் கதாபாத்திரங்களில் நடித்திருந்த பாரத், முதல் முறையாக முழுநீள கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
“இந்தப் படம் எனக்கு மிகவும் சிறப்பானது. முதல் முறையாக ஹீரோவாக நடிப்பதோடு, என்னுடன் மேலும் ஐந்து புதிய திறமையாளர்களும் அறிமுகமாகிறார்கள். ரசிகர்களின் அன்பும் ஆதரவும் எங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.” என்றார்.
படத்தில் பொம்மை தயாரிக்கும் நிறுவனத்தில் குவாலிட்டி செக் அதிகாரியாக பணியாற்றும் அப்பாவியான இளைஞனாக அவர் நடித்துள்ளார். ஒரு பெண் தன்னை காதலிக்கிறாள் என்பதைக்கூட உணர முடியாத அளவுக்கு வெகுளித்தனமான அந்த கதாபாத்திரம், படத்தின் முக்கிய பலங்களில் ஒன்றாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
தாத்தா – பேரன் உறவில் நகைச்சுவை விருந்து
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த இளைஞன், தனது தாத்தாவின் அரவணைப்பில் வளர்கிறான். அந்த தாத்தா கதாபாத்திரத்தில் அனுபவம் மிக்க நடிகர் ஆர். சுந்தர்ராஜன் நடித்துள்ளார்.
இருவருக்கும் இடையேயான பாசம், கலாட்டா, பழைய கால நகைச்சுவை பாணி ஆகியவை குடும்ப ரசிகர்களை நிச்சயம் கவரும் வகையில் அமைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
காதலை புதிதாக சொல்லும் கதாநாயகி
கதாநாயகி சம்யுக்தா விஸ்வநாதன், டாய் டிசைனர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிறுவயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் வாழ்க்கை மற்றும் உறவுகள் குறித்து எதிர்மறையான பார்வையுடன் வாழும் இளம் பெண்ணின் வாழ்க்கையில், பாரத்தின் அப்பாவித்தனமும் தூய்மையான மனமும் புதிய மாற்றத்தை உருவாக்குகிறது.
இந்த இருவரின் சந்திப்பு, காதல், உணர்வுகள் மற்றும் வாழ்க்கைப் பயணமே ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் மையக்கருவாக அமைகிறது.
பிரம்மாண்டம் இல்லை… மனதில் நிற்கும் மனிதர்கள்!
அதிரடி காட்சிகள் அல்லது பிரம்மாண்ட செட்கள் மீது நம்பிக்கை வைக்காமல், மனித உறவுகள், இயல்பான நகைச்சுவை, காதல், குடும்ப பாசம் மற்றும் உணர்ச்சிகளை மையமாக வைத்து இயக்குநர் நிரஞ்ஜன் இந்தப் படத்தை வடிவமைத்துள்ளார்.
அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் சிரிப்பும், காதலும், மனதை வருடும் தருணங்களும் இணைந்த முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக ‘மிஸ்டர் பாரத்’ உருவாகியுள்ளதாக படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
நடிகர் பட்டியல்
பாரத், சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், ஆர். சுந்தர்ராஜன், லிங்கா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு மேலும் பல முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பக் குழு
ஒளிப்பதிவு: ஓம் நாராயண்
இசை: பிரணவ் முனிராஜ்
படத்தொகுப்பு: திவாகர் டெனிஸ்
கலை இயக்கம்: பாவனா கோவர்தன்
ஆடை வடிவமைப்பு: நவா ரேம்போ ராஜ்குமார்
ஒலி வடிவமைப்பு: சுரேன் ஜி., அழகியகூத்தன்
நடனம்: அசார்
ஒப்பனை: சையது மாலிக் எஸ்.
சண்டைப்பயிற்சி: கனல் வி. கண்ணன், கனல் எஸ். குகன்
இணை நிர்வாக தயாரிப்பாளர்: ஆதவன் சுப்ரமணியன்
தயாரிப்பு நிர்வாகம்: டி. செல்வராஜ், பார்த்திபன் செல்வம், மஞ்சுநாதன்
கலரிஸ்ட்: கெளஷிக் கே.எஸ்.
பப்ளிசிட்டி டிசைன்ஸ்: அமுதன் பிரியன்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: பிரதீப் பூபதி எம்.
நிர்வாக தயாரிப்பாளர்: ஆர். உமா மகேஸ்வரன்.

‘Mr. Bharath’ Promises a Heartwarming Blend of Comedy and Romance for Audiences Worldwide, Says Debut Hero Bharath
Chennai:
The rise of digital creators making a successful transition from YouTube to mainstream cinema continues to reshape Tamil cinema, and Mr. Bharath is one of the most anticipated films to emerge from this new wave. Ever since its announcement, the film has generated significant curiosity among audiences. The title announcement glimpse, featuring filmmaker Lokesh Kanagaraj in a humorous avatar introducing the project as its presenter, received an overwhelming response from fans.
With the film gearing up for its theatrical release, debut actor Bharath and director Niranjan have shared exciting insights into the making of the film and what audiences can expect.
From ‘Master Piece’ to ‘Mr. Bharath’
Interestingly, the film was initially titled Master Piece. However, since films with the same title already existed in Kannada and Telugu, the makers decided to opt for a different name.
The title Mr. Bharath was suggested by filmmaker Lokesh Kanagaraj, and the team instantly fell in love with it. Given that the title belonged to the iconic Rajinikanth blockbuster, the makers approached the decision with great responsibility. After obtaining an official No Objection Certificate (NOC) from AVM Studios, the title was formally approved and adopted for the film.
Six New Talents Introduced Through a Single Film
One of the biggest highlights of Mr. Bharath is that it introduces six fresh talents to Tamil cinema simultaneously.
The film marks the debut of Bharath as the lead actor, Samyuktha Viswanathan as the female lead, Niranjan as director, Pranav Muniraj as music composer, Bhavna Govardhan as production designer, and Divakar Dennis as editor.
Presented by Lokesh Kanagaraj, the film is jointly produced by Sudhan Sundaram, Lokesh Kanagaraj, and Jagadish Palanisamy.

“Becoming a Hero Is a Dream Come True” – Bharath
Speaking about his debut, Bharath said:
“I have previously appeared as the hero’s friend in films like Prince and Love Today. Playing the lead for the first time is truly a dream come true. It is even more special because six newcomers are making their debut together through this film. We sincerely seek the love and support of the audience.”
Bharath plays a quality control officer in a toy manufacturing company. His character is an innocent young man who is so naive that he cannot even realize when someone is in love with him.
Having lost his parents at a young age, he is raised by his grandfather, played by veteran actor R. Sundarrajan. Bharath believes the heartwarming bond between the grandfather and grandson, coupled with Sundarrajan’s signature style of comedy, will become one of the film’s biggest strengths.
A Love Story Rooted in Emotions
Samyuktha Viswanathan plays a toy designer whose difficult childhood experiences and emotional struggles have shaped her outlook on life and relationships.
When she meets Bharath’s pure-hearted and innocent character, her perspective gradually changes. Their emotional journey, evolving relationship, and the warmth they bring into each other’s lives form the heart of Mr. Bharath.
A Feel-Good Entertainer with Strong Human Emotions
Written and directed by Niranjan, Mr. Bharath is designed as a wholesome entertainer that blends comedy, romance, emotions, and family relationships.
Rather than relying on large-scale action or visual spectacle, the film focuses on memorable characters, relatable situations, heartfelt storytelling, and emotionally engaging moments that appeal to audiences of all age groups.
According to the makers, the film has been crafted as a universal entertainer that combines laughter, romance, and meaningful emotions, making it enjoyable for audiences across the world.
Cast
The film features Bharath, Samyuktha Viswanathan, Bala Saravanan, Nidhi Pradeep, R. Sundarrajan, Linga, Adithya Kathir, and several others in key roles.
The makers have also confirmed that more exciting announcements related to the film will be revealed in the coming days.
Technical Crew
- Presented by: Lokesh Kanagaraj
- Producers: Sudhan Sundaram, Lokesh Kanagaraj, Jagadish Palanisamy
- Writer & Director: Niranjan
- Cinematographer: Om Narayan
- Music: Pranav Muniraj
- Editor: Divakar Dennis
- Production Designer: Bhavna Govardhan
- Costume Designer: Nava Rainbow Rajkumar
- Sound Design: Suren G., Azhagiyakoothan
- Choreography: Azhar
- Make-up: Syed Malik S.
- Action: Kanal V. Kannan & Kanal S. Gugan
- Associate Executive Producer: Aadhavan Subramanian
- Production Executives: D. Selvaraj, Parthiban Selvam, Manjunathan
- Colorist: Goushik K.S.
- Publicity Designs: Amudhan Priyan
- Creative Producer: Pradeep Bhoopathi M.
- Executive Producer: R. Uma Maheswaran
