Monday, November 9
Shadow

50-வது ஆண்டில் மெட்ராஸ் முதலை வங்கி: ஊர்வன பாதுகாப்புக்காக 15,000 கி.மீ. விழிப்புணர்வு பயணம்

50-வது ஆண்டில் மெட்ராஸ் முதலை வங்கி: ஊர்வன பாதுகாப்புக்காக 15,000 கி.மீ. விழிப்புணர்வு பயணம்

22 மாநிலங்கள்… 120 நாட்கள்… ‘Save The Reptiles’ மூலம் நாடு முழுவதும் விழிப்புணர்வு

சென்னை: ஊர்வன உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்து கடந்த 49 ஆண்டுகளாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மெட்ராஸ் முதலை வங்கி, தற்போது 50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி, ஊர்வன பாதுகாப்பை மையமாகக் கொண்டு நாடு முழுவதும் மிகப்பெரிய விழிப்புணர்வு பயணத்தை தொடங்கியுள்ளது.

சென்னையை அடுத்த மகாபலிபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் மெட்ராஸ் முதலை வங்கி, இந்தியாவில் ஊர்வன பாதுகாப்புக்காக நீண்ட காலமாக செயல்பட்டு வரும் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. முதலைகள் மட்டுமின்றி பல்வேறு வகையான ஊர்வன உயிரினங்களை பாதுகாப்பது, அவற்றின் வாழ்விடங்களை காப்பது மற்றும் பொதுமக்களிடையே அவை குறித்த புரிதலை ஏற்படுத்துவது என பல்வேறு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

49 ஆண்டுகால பணியை நிறைவு செய்து 50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், மெட்ராஸ் முதலை வங்கியின் நிறுவனர்களான பத்மஸ்ரீ ரோமுலஸ் விட்டேக்கர் மற்றும் சாய் விட்டேக்கர் ஆகியோருக்கு சிறப்பு நன்றி மற்றும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

பார்வையாளர்களுக்கு சிறப்பு சலுகை

50-வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பொதுமக்களுக்காக பல்வேறு சிறப்பு அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, ஆகஸ்ட் 2026 முதல் ஆகஸ்ட் 2027 வரை ஒவ்வொரு மாதமும் 2-வது புதன்கிழமை, மெட்ராஸ் முதலை வங்கிக்கு வரும் அனைத்து பார்வையாளர்களுக்கும் இலவச அனுமதி வழங்கப்பட உள்ளது.

மேலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து குழுவாக வரும் மாணவர்களுக்கு சிறப்பு கட்டணச் சலுகைகளும் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் மாணவர்கள் நேரடியாக ஊர்வன உயிரினங்களைப் பார்வையிட்டு, அவற்றின் வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழலில் அவற்றின் பங்கு குறித்து தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

22 மாநிலங்கள்… 15 ஆயிரம் கிலோமீட்டர் பயணம்

50-வது ஆண்டு கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக, மெட்ராஸ் முதலை வங்கி மற்றும் The Reptile Conservancy Alliance இணைந்து ‘Save The Reptiles’ என்ற நாடு தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன.

ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்கிய இந்த விழிப்புணர்வு பயணம் சுமார் 120 நாட்கள் நடைபெறுகிறது. இந்த பயணத்தில் நாடு முழுவதும் 22 மாநிலங்கள் வழியாக சுமார் 15,000 கிலோமீட்டர் தூரம் பயணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வனத்துறை அதிகாரிகள், வன உயிரின ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து ஊர்வன உயிரினங்கள் தொடர்பான பல்வேறு தகவல்கள் பகிரப்பட உள்ளன.

ஊர்வன இல்லாமல் சுற்றுச்சூழல் சமநிலை சாத்தியமா?

பாம்புகள், முதலைகள், ஆமைகள், பல்லிகள் உள்ளிட்ட ஊர்வன உயிரினங்கள் குறித்து பொதுமக்களிடையே இன்னும் பல தவறான புரிதல்கள் இருந்து வருகின்றன. குறிப்பாக, மனிதர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் உயிரினங்களாக மட்டுமே சில ஊர்வன பார்க்கப்படுகின்றன.

இந்த நிலையை மாற்றி, இயற்கைச் சூழலில் ஊர்வன உயிரினங்கள் வகிக்கும் முக்கிய பங்கு குறித்து மக்களுக்கு எடுத்துச் செல்வதே ‘Save The Reptiles’ பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும்.

உணவுச் சங்கிலியின் சமநிலையை பராமரிப்பது முதல் இயற்கைச் சூழலின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது வரை ஊர்வன உயிரினங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அவற்றின் எண்ணிக்கை குறைவது சுற்றுச்சூழல் சமநிலையிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அவற்றை பாதுகாப்பதன் அவசியம் குறித்து இந்த பயணத்தின் மூலம் எடுத்துரைக்கப்பட உள்ளது.

மாணவர்களை மையமாகக் கொண்ட விழிப்புணர்வு

‘Save The Reptiles’ பயணத்தில் மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எதிர்கால தலைமுறையினரிடம் இயற்கை மற்றும் வன உயிரினங்கள் குறித்த பொறுப்புணர்வை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

வனத்துறை அதிகாரிகள் மற்றும் வன உயிரின ஆர்வலர்களுடனும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு, ஊர்வன உயிரினங்களை எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் பங்கு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

50-வது ஆண்டில் புதிய அத்தியாயம்

ஊர்வன உயிரினங்களின் பாதுகாப்புக்காக கடந்த அரை நூற்றாண்டாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணியின் அடுத்த கட்டமாகவே ‘Save The Reptiles’ பிரச்சாரத்தை மெட்ராஸ் முதலை வங்கி பார்க்கிறது.

50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்த முக்கியமான தருணத்தில், ஒரே இடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதைத் தாண்டி, நாடு முழுவதும் பயணம் செய்து மக்களை நேரடியாக சந்தித்து ஊர்வன பாதுகாப்பின் அவசியத்தை எடுத்துச் செல்லும் முயற்சியாக இந்த பிரச்சாரம் அமைந்துள்ளது.

இந்த விழிப்புணர்வு பயணம் நாடு முழுவதும் அதிகளவிலான மக்களை சென்றடையவும், ஊர்வன உயிரினங்கள் குறித்த தவறான புரிதல்களை மாற்றவும், அவற்றின் பாதுகாப்பில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

49 ஆண்டுகால அர்ப்பணிப்பான பணியை நிறைவு செய்து 50-வது ஆண்டில் புதிய பயணத்தை தொடங்கியுள்ள மெட்ராஸ் முதலை வங்கி, ‘Save The Reptiles’ மூலம் ஊர்வன பாதுகாப்புக்கான தனது அடுத்த முக்கிய அத்தியாயத்தை நாடு முழுவதும் தொடங்கியுள்ளது.

Madras Crocodile Bank Enters Its 50th Year with ‘Save The Reptiles’ Nationwide Awareness Campaign

22 States, 15,000 Kilometres and 120 Days: A Nationwide Mission to Raise Awareness on Reptile Conservation

Chennai: Marking a significant milestone in its journey, the Madras Crocodile Bank has entered its 50th year, celebrating nearly five decades of dedicated work towards the conservation of reptiles and creating awareness about their ecological importance.

Located near Chennai, the Madras Crocodile Bank has been at the forefront of reptile conservation in India for the past 49 years. From protecting and caring for crocodiles and other reptiles to educating the public about their role in the ecosystem, the institution has consistently worked towards building greater awareness and appreciation for these often misunderstood species.

As the Madras Crocodile Bank steps into its 50th year, special appreciation and greetings were extended to its founders, Padma Shri Romulus Whitaker and Zai Whitaker, for their pioneering contribution to reptile conservation.

Special Initiatives to Mark the 50th Year

As part of its 50th anniversary celebrations, the Madras Crocodile Bank has announced a series of special initiatives for visitors and students.

From August 2026 to August 2027, visitors will be offered free entry on the second Wednesday of every month. Special concessionary rates will also be available for groups of students visiting from schools and colleges.

The initiatives are aimed at encouraging more young people to experience wildlife conservation first-hand and understand the importance of reptiles and their habitats.

22 States. 15,000 Kilometres. 120 Days.

One of the major highlights of the 50th-year celebrations is the launch of a nationwide reptile conservation awareness campaign titled ‘Save The Reptiles’.

The campaign is being jointly undertaken by the Madras Crocodile Bank and The Reptile Conservancy Alliance. The awareness journey, which began on August 28, 2026, is set to continue for approximately 120 days, covering nearly 15,000 kilometres across 22 states in India.

As part of the journey, the team will interact with school and college students, state forest department officials, wildlife enthusiasts, conservationists and members of the public across different parts of the country.

Spotlight on the Ecological Importance of Reptiles

A key objective of the ‘Save The Reptiles’ campaign is to address misconceptions surrounding reptiles and highlight their critical role in maintaining ecological balance.

Snakes, crocodiles, turtles, lizards and other reptiles are often viewed primarily through the lens of fear or danger. However, these species play an important role in maintaining food chains, regulating ecosystems and contributing to the overall health of natural habitats.

Through the nationwide campaign, the organisers aim to communicate the importance of reptile conservation and encourage people to look at these species from a conservation perspective rather than through fear and misinformation.

Inspiring the Next Generation

Students will be an important focus of the ‘Save The Reptiles’ awareness journey. Through interactions and educational programmes at schools and colleges, the campaign aims to encourage young people to develop a deeper understanding of wildlife and become more responsible towards nature and biodiversity.

The campaign will also engage with forest officials and wildlife enthusiasts to discuss the challenges faced by reptiles, conservation measures and the role that local communities can play in protecting these species.

A New Chapter in a 50-Year Conservation Journey

The ‘Save The Reptiles’ campaign marks a significant new chapter in the Madras Crocodile Bank’s nearly five-decade-long conservation journey.

Rather than limiting awareness efforts to a single location, the initiative seeks to take the message of reptile conservation directly to people across the country. By travelling through 22 states and engaging with communities, educational institutions and conservation stakeholders, the campaign aims to create a wider understanding of the need to protect reptiles and their habitats.

As it steps into its 50th year, the Madras Crocodile Bank is continuing its long-standing commitment to reptile conservation with a nationwide mission—taking the message of ‘Save The Reptiles’ across India and inspiring greater public participation in wildlife conservation.