
அருள்நிதி – அமீர் கூட்டணியில் உருவாகும் ‘வேட்ட சாமி’ – ஃபர்ஸ்ட் லுக், கிளிம்ப்ஸ் வெளியீடு
நெல்லை மண்ணின் காவல் தெய்வ வழிபாடு, கிராமிய வாழ்வியல், தலைமுறை கடந்து தொடரும் சமூகப் பிரச்சினைகள் என வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘வேட்ட சாமி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
7 Miles Per Second Productions நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ‘பம்பர்’ படத்தை இயக்கிய எம். செல்வகுமார் எழுதி இயக்குகிறார். அருள்நிதி மற்றும் அமீர் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். ஆர்.ஜே. பாலாஜி மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸை வெளியிட்டனர்.
காவல் தெய்வங்களை மையமாகக் கொண்ட கதை
நெல்லை மாவட்ட மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்துள்ள சங்கிலி பூதத்தார், சுடலை மாடன் உள்ளிட்ட காவல் தெய்வங்களின் வழிபாட்டு முறைகளை மையமாக வைத்து ‘வேட்ட சாமி’ படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து தலைமுறை தலைமுறையாக சமூகத்தில் தொடரும் பிரச்சினைகளையும், அவற்றால் மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் தாக்கங்களையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ஆக்ஷன், உணர்வு மற்றும் சமூக வாழ்வியலை ஒன்றிணைத்த படமாக ‘வேட்ட சாமி’ இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
கவனம் ஈர்க்கும் அருள்நிதியின் தோற்றம்
வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அருள்நிதி ஆவேசம் நிறைந்த தோற்றத்தில் இடம்பெற்றுள்ளார். சாமி வந்து ஆடும் காட்சியை நினைவுபடுத்தும் வகையில் அவரது தோற்றம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
போஸ்டரின் பின்னணியில் பிரம்மாண்டமான சாமி சிலையும், நாட்டுப்புறக் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் படத்தின் கிராமிய பின்னணி மற்றும் ஆன்மிகத் தொடர்பு ரசிகர்களுக்கு உணர்த்தப்பட்டுள்ளது.
கிளிம்ப்ஸில் கிராமியமும் ஆன்மிகமும்
வில்லிசைக் கலைஞர் மாதவியின் குரலில் தொடங்கும் கிளிம்ப்ஸ், பாரம்பரிய தெய்வ வழிபாட்டின் பின்னணியில் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறது. இதில் அருள்நிதி மற்றும் அமீர் ஆகியோரின் கதாபாத்திரங்களுக்கான முக்கியத்துவமும் வெளிப்படுகிறது.
கிராம மக்களின் வாழ்க்கை, வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள பிரச்சினைகள் ஆகியவற்றை மையப்படுத்திய காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், ‘வேட்ட சாமி’ வழக்கமான திரைப்பட அனுபவத்திலிருந்து மாறுபட்டதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் இல்லாத படம்
இப்படத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக, வழக்கமான கதாநாயகி கதாபாத்திரம் இல்லாமல், கதையும் அதில் இடம்பெறும் கதாபாத்திரங்களுமே பிரதானமாக பயணிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
படத்தில் ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், ஹரீஷ் பேராடி, விஜி சந்திரசேகர், இந்துமதி மணிகண்டன், மைனா நந்தினி, இயக்குநர் தமிழ், கவிதா பாரதி, அயாஸ் கான், டி.எஸ்.கே, ஓ.ஏ.கே. சுந்தர், அர்ஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் குழு
7 Miles Per Second Productionsசார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். கலை இயக்குநராக ஜி. துரைராஜ் பணியாற்றுகிறார். சண்டைக் காட்சிகளை சிறுத்தை கணேஷ் அமைத்துள்ளார்.
‘வேட்ட சாமி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியானதைத் தொடர்ந்து, அருள்நிதி – அமீர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Arulnithi and Ameer Join Forces for ‘Vetta Saami’; First Look and Glimpse Released
The first look poster and glimpse of Vetta Saami, an upcoming film featuring Arulnithi and Ameer in pivotal roles, have been released and are creating considerable buzz among moviegoers. Produced by 7 Miles Per Second Productions and written and directed by M. Selvakumar of Bumper fame, the film promises to present a rooted story set against the backdrop of rural life, traditional worship and deep-rooted social issues.
The first look and glimpse were unveiled by popular filmmaker Lokesh Kanagaraj and actor-filmmaker RJ Balaji.
A Story Rooted in Nellai’s Culture
Set against the cultural landscape of the Nellai region, Vetta Saami revolves around the worship of revered guardian deities such as Sangili Boothathar and Sudalai Madan.
The film explores social issues that have continued across generations, going beyond caste and religious boundaries. Blending action, emotion and social drama, the film aims to portray the lives and struggles of ordinary people in a raw and rooted manner.
Arulnithi’s Intense First Look
The first look poster features Arulnithi in an intense and powerful avatar, seemingly possessed by a divine force and performing a traditional trance-like ritual. His fierce gaze immediately grabs attention.
The backdrop features a grand deity statue along with vibrant folk art performances, establishing the film’s strong rural and spiritual setting.
Glimpse Offers a Taste of the Film’s World
The glimpse opens with the voice of Villupattu artiste Madhavi before introducing the central characters played by Arulnithi and Ameer against the backdrop of traditional deity worship.
With its combination of rural life, spirituality, cultural practices and human emotions, the glimpse has sparked curiosity about the world that Vetta Saami seeks to explore.
A Character-Driven Narrative
One of the film’s notable aspects is that it does not follow the conventional template of having a prominent heroine-centric track. Instead, the narrative places its focus on the story and its principal characters.
The film features an ensemble cast including Aadukalam Naren, Madhusudhan Rao, Hareesh Peradi, Viji Chandrasekhar, Indhumathi Manikandan, Maina Nandhini, director Thamizh, Kavitha Bharathi, Ayaz Khan, TSK, OAK Sundar and Arjai, among others.
Strong Technical Team
Produced by Samuel Mathew under the banner of 7 Miles Per Second Productions, Vetta Saami has music by Ghibran, cinematography by R.D. Rajasekhar and editing by Ruben. G. Duraikumar serves as the art director, while Siruthai Ganesh has choreographed the action sequences.
The shooting of Vetta Saami has been completed, and the film is currently in its final stages of post-production. With the release of its first look and glimpse generating positive reactions, the Arulnithi-Ameer collaboration has already raised expectations among audiences.
