Friday, September 11
Shadow

மீண்டும் திரையில் அதிரப்போகும் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’!

மீண்டும் திரையில் அதிரப்போகும் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’!

செப்டம்பர் 25 முதல் பிரம்மாண்ட பிரீமியம் திரையிடல் – ‘டூம்ஸ்டே’ பிரத்யேக காட்சியும் உண்டு

மார்வெல் ரசிகர்களின் மனதில் என்றும் நீங்காத இடம் பிடித்துள்ள ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படம் மீண்டும் இந்திய திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ என்ற பெயரில் வெளியாகும் இப்படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

செப்டம்பர் 25ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் இப்படம், IMAX, Marvel Studios Infinity Vision, 4DX, MX4D, SCREEN X, Dolby Vision, HDR Barco மற்றும் ICE உள்ளிட்ட பல்வேறு பிரீமியம் திரையிடல் வடிவங்களில் ரசிகர்களை சந்திக்கிறது.

குறிப்பாக, மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் பிரத்யேக காட்சியும் ‘எண்ட்கேம்: என்கோர்’ திரையிடலின்போது ரசிகர்களுக்கு விருந்தாக அமைய உள்ளது. ‘டூம்ஸ்டே’ திரைப்படம் டிசம்பர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

முடிவில்லாத சண்டை, தியாகம், நட்பு மற்றும் ஹீரோக்களின் இறுதிப் போராட்டம் என ‘எண்ட்கேம்’ மீண்டும் பெரிய திரையில் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கத் தயாராகியுள்ளது.

‘Avengers: Endgame’ Set to Roar on the Big Screen Again!

Grand premium screenings from September 25; exclusive preview of ‘Avengers: Doomsday’ also in store

Marvel fans are in for a nostalgic treat as the much-loved ‘Avengers: Endgame’ is all set to return to theatres across India in a grand re-release. Titled ‘Avengers: Endgame – Encore’, the film has already opened for advance bookings.

The film will hit theatres on September 25 in English, Hindi, Tamil and Telugu, and will be screened across a wide range of premium formats, including IMAX, Marvel Studios Infinity Vision, 4DX, MX4D, SCREENX, Dolby Vision, HDR Barco and ICE.

Adding to the excitement, fans will also get an exclusive preview of the highly anticipated ‘Avengers: Doomsday’ during the ‘Endgame: Encore’ screenings. ‘Avengers: Doomsday’ is scheduled to release in theatres on December 18.

Packed with epic battles, sacrifice, friendship and the heroes’ ultimate showdown, ‘Avengers: Endgame’ is set to deliver its larger-than-life cinematic experience all over again on the big screen.