மீண்டும் திரையில் அதிரப்போகும் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’!
மீண்டும் திரையில் அதிரப்போகும் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’!
செப்டம்பர் 25 முதல் பிரம்மாண்ட பிரீமியம் திரையிடல் – ‘டூம்ஸ்டே’ பிரத்யேக காட்சியும் உண்டு
மார்வெல் ரசிகர்களின் மனதில் என்றும் நீங்காத இடம் பிடித்துள்ள ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படம் மீண்டும் இந்திய திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ என்ற பெயரில் வெளியாகும் இப்படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
செப்டம்பர் 25ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் இப்படம், IMAX, Marvel Studios Infinity Vision, 4DX, MX4D, SCREEN X, Dolby Vision, HDR Barco மற்றும் ICE உள்ளிட்ட பல்வேறு பிரீமியம் திரையிடல் வடிவங்களில் ரசிகர்களை சந்திக்கிறது.
குறிப்பாக, மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் பிரத்யேக காட்சியும் ‘எண்ட்கேம்: என்கோர்’ திரையிடலின்போது ர...
