
ரசிகர்களின் மனதை வெல்லும் நம்பிக்கையில் ‘சிக்மா’ – படக்குழுவினர் நெகிழ்ச்சி!”
சென்னை: லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் ஆக்ஷன், நகைச்சுவை மற்றும் உணர்வுகளை இணைத்த பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளதாக நடிகர் சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார்.
‘சிக்மா’ திரைப்பட விழாவில் பேசிய அவர், தன்னுடைய திரைப் பயணத்தில் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். புதிய முயற்சிகளை முன்னெடுத்து வரும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்கும் பாராட்டு தெரிவித்த சந்தீப் கிஷன், இளம் இயக்குநர் சஞ்சயின் ஆர்வமும் உழைப்பும் படத்தில் பிரதிபலித்துள்ளதாக குறிப்பிட்டார்.
எபிசோடிக் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் இரண்டாம் பாதி மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் ரசிகர்களுக்கு வித்தியாசமான ஆக்ஷன் அனுபவத்தை வழங்கும் என அவர் கூறினார். ரசிகர்களை சிரிக்கவும், பல இடங்களில் கைதட்டவும் வைக்கும் படமாக ‘சிக்மா’ இருக்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
நட்பும் உழைப்பும் இணைந்த ‘சிக்மா’ – நடிகர் அன்பு
‘சிக்மா’ திரைப்படம் உணர்வு, நகைச்சுவை, ஆக்ஷன் என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய முழுமையான பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளதாக நடிகர் அன்பு தெரிவித்தார்.
படப்பிடிப்பின்போது இயக்குநர் சஞ்சீவ் மற்றும் படக்குழுவினருடன் ஏற்பட்ட நட்பான அனுபவத்தை பகிர்ந்த அவர், தனித்தனி கலைஞர்களாக இல்லாமல் நண்பர்கள் ஒன்றிணைந்து பணியாற்றிய உணர்வு ஏற்பட்டதாக கூறினார். படத்தின் ஒளிப்பதிவு, இயக்குநர் குழு மற்றும் தயாரிப்புக் குழுவினரின் உழைப்பையும் அவர் பாராட்டினார்.
படத்தை ஏற்கனவே பார்த்துவிட்டதாகக் கூறிய அன்பு, குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் படம் உருவாகியுள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார். மேலும், படத்தை உருவாக்கிய அனைவரின் உழைப்புக்கும் ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
“என்னுடன் இருக்கும் மனிதர்கள்தான் எனக்கு வீடு” – பரிதா அப்துல்லா
‘சிக்மா’ திரைப்பட விழாவில் பேசிய நடிகை பரிதா அப்துல்லா, படம் வெளியாக உள்ள உற்சாகத்துடன் சிறிய பதற்றமும் இருப்பதாக தெரிவித்தார். ஹைதராபாத்தில் பிறந்து தமிழ் திரையுலகில் தனக்கு கிடைத்த வரவேற்பை நினைவுகூர்ந்த அவர், தனது பெற்றோர், குடும்பத்தினர் மற்றும் தன்னுடன் தொடர்ந்து பயணிக்கும் குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.
“வீடு என்பது ஒரு குறிப்பிட்ட இடம் அல்ல; நான் யாருடன் இருக்கிறேனோ அந்த மனிதர்கள்தான் எனக்கு வீடு” என்ற அவரது கருத்து விழாவில் கவனம் பெற்றது. தமிழ் திரையுலகில் தனக்கு குடும்பம் போன்ற ஆதரவை வழங்கிய லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ‘சிக்மா’ படக்குழுவினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
ஆக்ஷன், நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை படக்குழுவினரின் பேச்சுகள் வெளிப்படுத்தியுள்ள நிலையில், ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்கும் என்பது வெளியீட்டுக்குப் பிறகு தெரியவரும்.

‘Sigma’ Team Confident of Winning Audiences’ Hearts
Chennai: Produced by Lyca Productions, Sigma is shaping up to be an entertaining film that blends action, comedy and emotions, actor Sundeep Kishan said.
Speaking at the Sigma film event, Sundeep Kishan thanked his fans for their continued support throughout his film journey. He also appreciated Lyca Productions for backing new and innovative ventures, and noted that the passion and hard work of young director Sanjay are reflected in the film.
Made in an episodic format, the actor said the second half and climax sequences would offer audiences a different kind of action experience. He expressed confidence that Sigma would make audiences laugh and leave them applauding at several moments.
‘Sigma’ is a Blend of Friendship and Hard Work: Actor Anbu
Actor Anbu said that Sigma has been made as a complete entertainer, bringing together emotions, comedy and action.
Sharing his experience of working on the film, he spoke about the friendly bond he developed with director Sanjeev and the entire team. He said the shoot felt less like a group of individual artistes working together and more like a group of friends coming together to create a film.
Anbu also praised the cinematography, direction team and production crew for their efforts. Revealing that he has already watched the film, he expressed confidence that it would be an enjoyable experience for audiences to watch with their families. He also urged fans to support the efforts of everyone involved in making the film.
“The People I’m With Are My Home”: Paritha Abdullah
Speaking at the Sigma event, actress Paritha Abdullah said she was excited about the film’s release while also feeling a little nervous.
Recalling her journey from being born in Hyderabad to receiving a warm welcome in the Tamil film industry, she thanked her parents, family members and the team that has continued to stand by her throughout her journey.
Her words, “Home is not a particular place; the people I am with are my home,” drew attention at the event. She also expressed her gratitude to Lyca Productions and the Sigma team for giving her a family-like support system in the Tamil film industry.
Featuring action, comedy and entertainment, Sigma is set to hit theatres soon. The speeches by the cast and crew have added to the anticipation surrounding the film, while the audience response will be known after its theatrical release.
