
பிரிட்டிஷ் உளவுத்துறைக்குச் சவால் விடும் மர்ம வீரன்… பிரபாஸின் புதிய அவதாரத்தால் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘ஃபௌஜி’!
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில், உளவுப் போர், ரகசிய நடவடிக்கைகள், தேசப்பற்று எனப் பல அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான காலகட்டத் திரைப்படமாக உருவாகி வருகிறது பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌஜி’. இயக்குநர் ஹனு ராகவபூடி இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், டி-சீரிஸ் வழங்கும் இப்படத்தின் புதிய முன்னோட்டமான ‘ஃபைல் நம்பர் 25’ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த முன்னோட்டம், அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பின்னணியைப் பற்றிய பல கேள்விகளை எழுப்புவதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இதுவரை பார்த்திராத தோற்றத்தில் பிரபாஸ் களமிறங்கியிருப்பது இந்த முன்னோட்டத்தின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.
நேதாஜி – ஹிட்லர் சந்திப்பு; கதையில் திருப்பம்!
இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் கதை நகர்கிறது. 1942ஆம் ஆண்டு பெர்லினில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸும் ஜெர்மன் தலைவர் அடால்ஃப் ஹிட்லரும் சந்தித்துப் பேசும் காட்சியுடன் முன்னோட்டம் தொடங்குகிறது. இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுவிக்க ஜெர்மனியின் ஆதரவை நாடும் நேதாஜி, இந்தியாவின் சுதந்திர வேட்கையையும் போராட்டத்தின் அவசியத்தையும் எடுத்துரைக்கிறார்.
பிரிட்டிஷ் பேரரசை எதிர்த்து இந்தியா வெற்றி பெற முடியுமா என்ற கேள்வி எழும்போது, சுதந்திரம் பெற வேண்டும் என்ற உறுதியை யாராலும் அழிக்க முடியாது என்ற கருத்தை நேதாஜி முன்வைக்கிறார். அடுத்ததாக, ராணுவ பலத்தைவிட உளவுத்துறையின் செயல்பாடுகள் எவ்வாறு எதிரியை நிலைகுலையச் செய்யும் என்பதை விளக்கும் வகையில் உரையாடல் திருப்பம் பெறுகிறது.
பிரிட்டிஷாருக்குப் புதிராக இருக்கும் ‘ஃபௌஜி’!
பிரிட்டிஷ் உளவுத்துறையின் திட்டங்களைத் தொடர்ந்து முறியடித்து வரும் மர்ம இந்திய உளவாளியைப் பற்றி நேதாஜி விவரிக்கிறார். ராணுவ நடவடிக்கைகளைத் திசைதிருப்புவது, முக்கியத் திட்டங்களைச் சீர்குலைப்பது, காலனித்துவ அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவுவது எனப் பல ரகசிய நடவடிக்கைகளில் அந்த வீரன் ஈடுபட்டு வருவதாகக் காட்சிகள் உணர்த்துகின்றன.
அந்த உளவாளியின் தகவல் பரிமாற்ற முறை மற்றொரு சுவாரசியமான அம்சமாக இடம்பெறுகிறது. பகவத் கீதையின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட ரகசியக் குறியீடு, ஜெர்மனியின் ‘எனிக்மா’ குறியீட்டைவிடவும் சிக்கலானது என முன்னோட்டத்தில் குறிப்பிடப்படுகிறது. இத்தனை நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும், அந்த வீரனின் உண்மையான அடையாளத்தைப் பிரிட்டிஷாரால் கண்டறிய முடியவில்லை என்பதே கதையின் மர்மத்தை அதிகரிக்கிறது.
1932ஆம் ஆண்டு முதல் காலனித்துவ அதிகாரிகளால் தேடப்பட்டு வரும் அந்த வீரன், பிரிட்டிஷாரால் ‘ஃபௌஜி’ என அறியப்படுகிறான். அவனது உண்மையான பெயர் என்ன, அவனது பின்னணி என்ன, அவன் மேற்கொள்ளும் ரகசிய நடவடிக்கைகளின் நோக்கம் என்ன என்ற கேள்விகளுக்கு முன்னோட்டம் முழுமையான பதிலை அளிக்கவில்லை. தற்போது கல்கத்தாவில் இருந்து தனது போராட்டத்தைத் தொடர்ந்து வருவதாகக் கூறப்படும் அந்த வீரனின் கதாபாத்திரமே படத்தின் மைய ஈர்ப்பாக அமைகிறது.
ஆவேசமான தோற்றத்தில் பிரபாஸ்!
முன்னோட்டத்தின் இறுதிப் பகுதியில் பிரபாஸ் அதிரடியான தோற்றத்தில் திரையில் தோன்றுகிறார். உதடுகளுக்கு இடையே சிகரெட்டும், கையில் பெரிய துப்பாக்கியுமாக, ஆங்கிலேயர் ஆட்சிக்கு அடிபணிய மறுக்கும் புரட்சியாளனாக அவர் காட்சியளிக்கிறார். அவரது தோற்றமும் உடல்மொழியும் கதாபாத்திரத்தின் ஆக்ரோஷத்தையும் துணிச்சலையும் வெளிப்படுத்துகின்றன.
வழக்கமான ஆக்ஷன் நாயகனாக மட்டுமல்லாமல், அறிவாற்றல், ரகசியத் திட்டமிடல், உளவுப் போர் ஆகியவற்றை மையமாகக் கொண்ட கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்திருப்பது முன்னோட்டத்தின் மூலம் தெரியவருகிறது. வரலாற்றுப் பின்னணியையும் கற்பனைக் கதையையும் இணைத்து, மர்மம் நிறைந்த ஒரு வீரனின் உலகத்தை இயக்குநர் ஹனு ராகவபூடி உருவாக்கியிருப்பது படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கிறது.
நட்சத்திரப் பட்டாளத்துடன் ‘ஃபௌஜி’!
‘ஃபௌஜி’ திரைப்படத்தில் இமான்வி கதாநாயகியாக நடிக்கிறார். மிதுன் சக்கரபோர்த்தி, அனுபம் கேர், ஜெயப்பிரதா, பானு சந்தர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி, ஒய். ரவிசங்கர் மற்றும் பூஷன் குமார் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சுதீப் சட்டர்ஜி ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைக்க, கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்கிறார். அனில் விலாஸ் ஜாதவ் தயாரிப்பு வடிவமைப்பையும், ஆர்.சி. கமலக்கண்ணன் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். பிரேம் ரக்ஷித் நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
வரலாறு, தேசப்பற்று, உளவுத்துறை நடவடிக்கைகள் மற்றும் அதிரடி சண்டைக் காட்சிகள் எனப் பல அம்சங்களுடன் உருவாகும் ‘ஃபௌஜி’, 2027 மார்ச் 19ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகர்கள்: பிரபாஸ், இமான்வி, மிதுன் சக்கரபோர்த்தி, அனுபம் கேர், ஜெயப்பிரதா, பானு சந்தர் மற்றும் பலர்.
தொழில்நுட்பக் குழு:
- எழுத்து, இயக்கம் – ஹனு ராகவபூடி
- தயாரிப்பு – மைத்ரி மூவி மேக்கர்ஸ்
- வழங்குபவர்கள் – குல்ஷன் குமார், பூஷன் குமார், டி-சீரிஸ்
- தயாரிப்பாளர்கள் – நவீன் யெர்னேனி, ஒய். ரவிசங்கர், பூஷன் குமார்
- ஒளிப்பதிவு – சுதீப் சட்டர்ஜி ISC
- இசை – விஷால் சந்திரசேகர்
- பாடல் வரிகள் – கிருஷ்ண காந்த்
- படத்தொகுப்பு – கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ்
- தயாரிப்பு வடிவமைப்பு – அனில் விலாஸ் ஜாதவ்
- விஷுவல் எஃபெக்ட்ஸ் – ஆர்.சி. கமலக்கண்ணன்
- நடன இயக்கம் – பிரேம் ரக்ஷித்
- ஆடை வடிவமைப்பு – ஷீத்தல் இக்பால் சர்மா, டி. விஜய் பாஸ்கர்
- விளம்பர வடிவமைப்பு – அனில் – பானு
- மக்கள் தொடர்பு – யுவராஜ்
‘ஃபௌஜி’ முன்னோட்டத்தைக் காண:
Prabhas’ ‘Fauzi’ Unveils ‘File No. 25’ Glimpse, Promising an Epic Tale of Patriotism and Espionage
Prabhas takes on a never-before-seen avatar as a mysterious revolutionary who challenges British intelligence in Hanu Raghavapudi’s highly anticipated period action drama.
The makers of Fauzi, starring Rebel Star Prabhas, have unveiled a powerful new glimpse titled File No. 25, offering a fascinating insight into the world of a mysterious Indian revolutionary who takes on the British Empire. Directed by Hanu Raghavapudi and produced by Mythri Movie Makers, with T-Series presenting the film, this ambitious pan-Indian period action drama is scheduled to release in theatres on March 19, 2027.
Released on the occasion of Prabhas’ birthday, the glimpse introduces audiences to an intriguing character whose identity, intelligence, and extraordinary mission form the core of the narrative. Following the release of the film’s title and release date posters, File No. 25 further raises expectations by presenting Prabhas in a strikingly different avatar.
Netaji Subhas Chandra Bose and Hitler’s Historic Meeting Sets the Stage
Set against the backdrop of World War II, the glimpse opens in Berlin on May 29, 1942, depicting a meeting between Netaji Subhas Chandra Bose and Adolf Hitler. Bose seeks Germany’s support in India’s struggle against British colonial rule, leading to a compelling discussion about the possibility of achieving independence after nearly two centuries of oppression.
When Hitler questions whether India can overcome the might of the British Empire, Bose firmly expresses his belief that the determination to achieve freedom can never be extinguished.
The conversation takes an unexpected turn when Bose argues that intelligence and carefully planned covert operations can prove more effective than military strength. He then introduces the story of an extraordinary Indian operative who has repeatedly disrupted British intelligence operations without revealing his identity.
A Mysterious Revolutionary Who Outsmarts the British
According to Bose, this elusive operative has successfully diverted military forces, disrupted strategic missions, and repeatedly outsmarted the colonial administration through meticulously planned operations.
Adding another intriguing layer to the story is the operative’s unique communication system. Inspired by the Bhagavad Gita, his secret code is described as even more difficult to decipher than Germany’s famed Enigma code. Despite the operative’s growing influence, the British remain unaware of his true identity, establishing him as a formidable force working from the shadows.
One of the most compelling moments in File No. 25 revolves around the revelation that the British know this mysterious revolutionary only as Fauzi. His real name and background remain undisclosed, adding to the suspense surrounding the character.
Wanted by the colonial authorities since 1932, Fauzi is portrayed as a fearless revolutionary whose mission is to protect his motherland. Bose further reveals that the elusive operative is currently in Calcutta, continuing his fight against British rule.
Prabhas Makes a Powerful Entry as a Fearless Rebel
The glimpse reaches its high point with Prabhas’ explosive appearance. Sporting a cigarette between his lips and wielding a massive firearm, the actor appears as a fierce revolutionary who refuses to surrender to colonial authority.
His commanding screen presence, intense expressions, and aggressive demeanour bring the glimpse to a powerful conclusion, offering a taste of the high-impact action audiences can expect from the film.
What makes File No. 25 particularly intriguing is its focus on more than physical strength and battlefield heroics. The narrative places considerable emphasis on intelligence warfare, covert missions, coded communication, and the mystery surrounding the protagonist’s identity.
By combining the backdrop of World War II with the Indian freedom struggle, director Hanu Raghavapudi appears to be crafting an unconventional role for Prabhas, blending historical references, patriotism, espionage, and large-scale action.
While the glimpse offers a brief introduction to Fauzi’s world, several questions about his origins, methods, and transformation into one of the British Empire’s most elusive adversaries remain unanswered.
Star-Studded Cast and Technical Team
Fauzi features Imanvi as the female lead, alongside veteran actors Mithun Chakraborty, Anupam Kher, Jaya Prada, and Bhanu Chandar in pivotal roles.
The film is produced by Naveen Yerneni, Y. Ravi Shankar, and Bhushan Kumar under the banner of Mythri Movie Makers and presented by Gulshan Kumar, Bhushan Kumar, and T-Series.
The technical team includes cinematographer Sudeep Chatterjee ISC, music composer Vishal Chandrasekhar, editor Kotagiri Venkateswara Rao, and production designer Anil Vilas Jadhav. R. C. Kamalakannan is handling the visual effects, while Prem Rakshith is the choreographer. Lyrics are penned by Krishna Kanth, and the costumes are designed by Sheetal Iqbal Sharma and T. Vijay Bhaskar. Publicity designs are by Anil-Bhanu, with Yuvraaj handling public relations.
With its blend of historical intrigue, patriotism, espionage, and intense action, Fauzi is shaping up to be an ambitious period action spectacle. The film is set to arrive in cinemas worldwide on March 19, 2027, in Telugu, Hindi, Kannada, Malayalam, Tamil, and Bengali.
Cast
Prabhas, Imanvi, Mithun Chakraborty, Anupam Kher, Jaya Prada, Bhanu Chandar, and others.
Technical Crew
- Writer and Director: Hanu Raghavapudi
- Production House: Mythri Movie Makers
- Presented by: Gulshan Kumar, Bhushan Kumar, and T-Series
- Producers: Naveen Yerneni, Y. Ravi Shankar, and Bhushan Kumar
- Cinematography: Sudeep Chatterjee ISC
- Music: Vishal Chandrasekhar
- Lyrics: Krishna Kanth
- Editing: Kotagiri Venkateswara Rao
- Production Design: Anil Vilas Jadhav
- VFX: R. C. Kamalakannan
- Choreography: Prem Rakshith
- Costume Designers: Sheetal Iqbal Sharma and T. Vijay Bhaskar
- Publicity Designers: Anil-Bhanu
- PRO: Yuvraaj
Watch the ‘Fauzi – File No. 25’ Glimpse:
