
நரிக்குறவர் சமூகத்தின் அரசியல் கனவைப் பேசும் ‘சிங்காரம்’ – அக்டோபர் 30-ல் உலகம் முழுவதும் வெளியீடு!
யோகி பாபு நடிப்பில் சமூகச் சிந்தனையும் நகைச்சுவையும் கலந்த புதிய திரைப்படம் – இசை வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு
சென்னை: நகைச்சுவை நடிகராகத் தொடங்கி கதாநாயகனாகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘சிங்காரம்’ திரைப்படம், வரும் அக்டோபர் 30-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ராக் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், கே.வி. கதிர்வேலு இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லர், இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டு கவனம் பெற்றுள்ளது. இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
அரசியலும் சமூக நீதியும் பேசும் கதை!
நரிக்குறவர் சமூகத்தின் வாழ்க்கை முறை, வரலாறு, சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் புறக்கணிப்புகள், உரிமைகளுக்கான போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ‘சிங்காரம்’ உருவாகியுள்ளது. அந்தச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அரசியலில் நுழைந்து சட்டமன்ற உறுப்பினராக உயர்வதை கதையின் மையமாகக் கொண்டுள்ள இப்படம், சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் குறித்த கேள்விகளையும் எழுப்புகிறது. அதே நேரத்தில், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் அளித்து, அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் படத்தை உருவாக்கியுள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். இயக்குநர், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் படத்தின் உருவாக்க அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
ஆய்வுக்குப் பிறகு உருவான திரைக்கதை – இயக்குநர் கே.வி. கதிர்வேலு
இயக்குநர் கே.வி. கதிர்வேலு பேசுகையில், நரிக்குறவர் சமூகத்தின் வரலாறு மற்றும் வாழ்வியல் பின்னணியை அறிந்துகொள்ள விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட பிறகே இப்படத்தை உருவாக்கியதாகத் தெரிவித்தார். சமூகத்தில் அதிகாரம் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் மரியாதையும், மற்றவர்கள் எதிர்கொள்ளும் புறக்கணிப்புகளும் படத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறினார். சமூகக் கருத்துகளை மட்டுமின்றி, குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு அம்சங்களையும் இணைத்து ‘சிங்காரம்’ உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ரசிகர்கள் படத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

படக்குழுவின் நம்பிக்கையே எனக்கு ஊக்கம் – யோகி பாபு
தனக்கு இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் கே.வி. கதிர்வேலு, தயாரிப்பாளர் ரமண பாலாஜி உள்ளிட்ட அனைவருக்கும் நடிகர் யோகி பாபு நன்றி தெரிவித்தார். மறைந்த நடிகர்கள் மனோபாலா மற்றும் மாரிமுத்து ஆகியோரை நினைவுகூர்ந்த அவர், மனோபாலா தனக்கு எப்போதும் ஆதரவாக இருந்தவர் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
தன்னை நம்பி வாய்ப்பளித்த படக்குழுவினரின் ஊக்கமும் நம்பிக்கையும் முக்கியமானவை என்று தெரிவித்த யோகி பாபு, அக்டோபர் 30-ஆம் தேதி வெளியாகும் ‘சிங்காரம்’ திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் பார்த்து ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
27 ஆண்டுகாலத் திரைப் பயணத்தின் அனுபவத்தில் உருவான படம் – தயாரிப்பாளர் ரமண பாலாஜி
தயாரிப்பாளர் ஏ.எஸ். ரமண பாலாஜி பேசுகையில், நடனக் கலைஞராகவும் நடன இயக்குநராகவும் 27 ஆண்டுகளாகத் திரைத்துறையில் பயணித்து வருவதாகக் குறிப்பிட்டார். இந்தப் பயணத்தில் பலரும் அளித்த ஒத்துழைப்பே ராக் புரொடக்ஷன்ஸ் வளர்ச்சிக்குக் காரணம் என்றார்.
ஒரு படைப்பின் நோக்கம் மிகவும் முக்கியமானது என்றும், கலைஞர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திய அவர், ஒரு திரைப்படம் பார்வையாளர்களின் சிந்தனையிலும் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது எனக் கூறினார். பல்வேறு சவால்களைக் கடந்து உருவான ‘சிங்காரம்’ படத்தின் வெற்றி மீது நம்பிக்கை இருப்பதாகவும், யோகி பாபு உள்ளிட்ட கலைஞர்களின் ஒத்துழைப்பு பெரும் பலமாக அமைந்ததாகவும் தெரிவித்தார்.
மூத்த கலைஞர்களின் பங்களிப்பை நினைவுகூர்ந்த படக்குழு
படத்தில் பணியாற்றிய திவாகர், இயக்குநர் கே.வி. கதிர்வேலு, தயாரிப்பாளர் ரமண பாலாஜி மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தார். மறைந்த நடிகர்கள் மாரிமுத்து, மனோபாலா ஆகியோர் படப்பிடிப்பின்போது வழங்கிய ஆலோசனைகளையும் ஆதரவையும் நினைவுகூர்ந்தார். எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ். குமார், படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பையும் பாராட்டினார்.

நடிகர் படவா கோபி பேசுகையில், ஒரு திரைப்படத்தை உருவாக்குவதைவிட அதைச் சரியான முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதே பெரிய சவால் என்றார். நடனத் துறையில் கலைஞர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், நரிக்குறவர் சமூகத்தின் வாழ்க்கையையும் அக்காலச் சூழலையும் இயக்குநர் திரையில் சிறப்பாகப் பதிவு செய்துள்ளதாகப் பாராட்டினார்.
நடிகர் ஜாவா சுந்தரேசன், இதுவரை அதிகம் பேசப்படாத உணர்வுபூர்வமான கதையைத் தேர்ந்தெடுத்த படக்குழுவினரைப் பாராட்டினார். யோகி பாபுவின் நடிப்பையும், பிறருக்கு உதவும் அவரது குணத்தையும் குறிப்பிட்ட அவர், சாம் சி.எஸ். இசையமைத்துள்ள பாடலின் உணர்வுபூர்வமான தன்மையையும் பாராட்டினார்.
நடிகர் கே.எம். கணேஷ்கர், நரிக்குறவர் சமூகத்தின் தோற்றம் மற்றும் வாழ்வியலை இயல்பாக வெளிப்படுத்தும் வகையில் ஆடை, அணிகலன்கள் உள்ளிட்டவற்றில் படக்குழுவினர் கவனம் செலுத்தியதாகத் தெரிவித்தார். கதாபாத்திரங்களுடன் ஒன்றிணைந்து நடித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட அவர், மூத்த கலைஞர்களின் அர்ப்பணிப்பையும் யோகி பாபு சக நடிகர்களுக்கு வழங்கிய ஊக்கத்தையும் பாராட்டினார்.
கலை இயக்குநர் குருராஜ், இப்படத்தில் பணியாற்றிய அனுபவத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டு, டிரெய்லர் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் திரைப்படம் வெற்றிபெற வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
நடிகை சபிதா ராய், தயாரிப்பாளர்கள் ரமண பாலாஜி, பத்மாவதி காந்தி மற்றும் இயக்குநருக்கு நன்றி தெரிவித்தார். நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த கதாபாத்திரத்தில் நடித்தபோது அந்தச் சமூகத்தின் மொழி மற்றும் பேச்சு வழக்கு தன்னிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டார். படப்பிடிப்பு முடிந்த பின்னரும் அந்தப் பேச்சு வழக்கின் தாக்கம் தொடர்ந்ததாகத் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
நடிகர் என்.ஜே. சத்யா, தனக்கு நடிப்பதற்கான வாய்ப்பை வழங்கிய யோகி பாபுவுக்கு நன்றி தெரிவித்தார். மூத்த கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள உதவியதாகக் கூறிய அவர், நகைச்சுவையுடன் உணர்வுபூர்வமான தருணங்களையும் கொண்டுள்ள ‘சிங்காரம்’ படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.
நடிகர் டி.எஸ்.ஆர். ஸ்ரீனிவாசன், குறவர் கதாபாத்திரத்தில் யோகி பாபுவின் நடிப்பைப் பாராட்டியதுடன், அனுபவமுள்ள கலைஞர்களுக்கும் உரிய வாய்ப்புகளும் அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். கலைஞர்களுக்கு முறையான வேலைவாய்ப்பும் உரிய ஊதியமும் கிடைத்தால் தமிழ் சினிமா மேலும் உயரங்களை எட்டும் என்றும் தெரிவித்தார்.
சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சி – ஆர்.வி. உதயகுமார் பாராட்டு
விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், கே.வி. கதிர்வேலு இயக்கியுள்ள ‘சிங்காரம்’ சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துகளைக் கொண்டிருப்பதாகப் பாராட்டினார். நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அரசியலில் ஈடுபட்டு சட்டமன்ற உறுப்பினராக உயர்வதை மையமாகக் கொண்ட கதைக்களம் கவனிக்கத்தக்கது என்றார். கதாநாயகனாக உயர்ந்த பின்னரும் எளிமையுடன் செயல்பட்டு வரும் யோகி பாபுவின் நடிப்பையும் பாராட்டினார். இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., தயாரிப்பாளர்கள் ரமண பாலாஜி, திவாகர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
சமூகத்தின் ஒரு பிரிவினரின் வாழ்வியலையும் உரிமைக்கான குரலையும் நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளுடன் திரையில் பேச முயற்சிக்கும் ‘சிங்காரம்’, வரும் அக்டோபர் 30-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சமூகக் கருத்துகள் கொண்ட கதைக்களமும் யோகி பாபுவின் நடிப்பும் இணைந்துள்ள இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர்கள்
யோகி பாபு, வேல ராமமூர்த்தி, எம்.எஸ். பாஸ்கர், மரியா வின்சென்ட், சார்ம்ஸ், ஆர்த்தி கணேஷ், மனோபாலா, கல்கி, மாரிமுத்து, படவா கோபி, சென்ட்ராயன், டி.எஸ்.ஆர்., தீபா சங்கர், சபிதா ராய், ஜாவா சுந்தரேசன், கே.எம். கணேஷ்கர் மற்றும் பலர்.
தொழில்நுட்பக் கலைஞர்கள்
தயாரிப்பு நிறுவனம்: ராக் புரொடக்ஷன்ஸ்
தயாரிப்பாளர்கள்: ஏ.எஸ். ரமண பாலாஜி, பத்மாவதி காந்தி
எழுத்து மற்றும் இயக்கம்: கே.வி. கதிர்வேலு
இசை: சாம் சி.எஸ்.
பாடல்கள்: விவேகா
ஒளிப்பதிவு: பிரசன்னா எஸ். குமார்
படத்தொகுப்பு: லாரன்ஸ் கிஷோர்
கலை இயக்கம்: குருராஜ்
சண்டைப் பயிற்சி: ஃபேன்டம் பிரதீப்
மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்
வெளியீடு: அக்டோபர் 30 – உலகம் முழுவதும் திரையரங்குகளில்.
Yogi Babu’s ‘Singaram’ to Hit Theatres Worldwide on October 30
A socially relevant entertainer exploring the lives and aspirations of the Narikuravar community; Udhayanidhi Stalin attends the film’s audio launch event.
Yogi Babu, who has carved a niche for himself as both a comedian and a lead actor, is all set to entertain audiences with his upcoming film Singaram, which is scheduled for a worldwide theatrical release on October 30. Produced by Rock Productions and directed by K.V. Kathirvelu, the film features music composed by Sam C.S. Following the release of its teaser, the film’s trailer was unveiled on the occasion of its audio launch event.
At its core, Singaram explores the lifestyle, historical background and social challenges faced by the Narikuravar community, including discrimination, marginalisation and the struggle for equal rights. The film revolves around a member of the community entering politics and rising to become a Member of the Legislative Assembly (MLA). Blending social awareness with humour and family emotions, the film aims to offer a meaningful yet entertaining cinematic experience.
The film’s audio launch event was attended by Udhayanidhi Stalin as the special guest. The director, producers, cast members and technicians shared their experiences of working on the project and discussed the ideas behind the film.
Director K.V. Kathirvelu on the Film’s Social Message
Speaking at the event, director K.V. Kathirvelu revealed that he had undertaken extensive research to understand the history and background of the Narikuravar community before developing the film.
He explained that Singaram addresses social inequalities, questioning why people in positions of power often receive greater respect while marginalised communities continue to face discrimination. The film also incorporates political elements alongside the community’s history. Emphasising that the project combines a strong social message with family-oriented entertainment, the director appealed to audiences to support the film.
Yogi Babu Thanks the Team for Their Trust
Actor Yogi Babu expressed his gratitude to director K.V. Kathirvelu, producer Ramana Balaji and the entire team for giving him the opportunity to be part of the film.
He also fondly remembered late actors Manobala and Marimuthu, recalling that Manobala had always been supportive of him. Yogi Babu acknowledged the encouragement and confidence shown by the filmmakers and urged audiences to watch Singaram in theatres when it releases on October 30.
Producer Ramana Balaji Reflects on His 27-Year Journey
Producer A.S. Ramana Balaji, who has spent 27 years in the film industry as a dancer and choreographer, thanked everyone who had supported him throughout his journey. He credited the collective efforts of numerous individuals for the growth of Rock Productions.
Emphasising the importance of a creative work’s purpose, he stated that artists should continue to receive opportunities to showcase their talents. He also observed that films have the power to influence audiences’ perspectives and inspire them in their lives.
Speaking about the challenges involved in bringing Singaram to the screen, Ramana Balaji appreciated the contributions of the director, actors and technicians. He particularly acknowledged Yogi Babu’s support at several crucial moments and expressed confidence in the film’s success.
Cast and Crew Share Their Experiences
During his speech, Divakar thanked his uncle Karthikeyan, his family, director K.V. Kathirvelu and everyone who contributed to the making of the film. He highlighted producer Ramana Balaji’s encouragement and support, while remembering the guidance offered by late actors Marimuthu and Manobala during the shoot.
He also appreciated the dedication of actor M.S. Bhaskar and other performers, along with music composer Sam C.S., cinematographer Prasanna S. Kumar, editor Lawrence Kishore and the technical team. Divakar acknowledged Yogi Babu’s support throughout the project and appealed to the media and audiences to
