
அதிகாரத்துக்கு அடிபணியாத ருத்ரா! ‘அக்கா’ தொடரில் இதுவரை பார்க்காத ராதிகா ஆப்தே!
“ஏற்கெனவே இருக்கும் விதிகளுக்குள் அடங்கிப் போகாமல், தனக்கென ஒரு பாதையைத் தேர்ந்தெடுக்கும் ருத்ரா கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தமானது” என்கிறார் நடிகை ராதிகா ஆப்தே.
பெண்களின் ஆதிக்கம் வலுவாக இருக்கும் பெர்னூரு நகரம். அங்கு பல காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் அதிகார நடைமுறைகளும் விதிமுறைகளும் இருக்கின்றன. ஆனால், அந்தக் கட்டுப்பாடுகளுக்குள் தன்னைப் பொருத்திக்கொள்ள விரும்பாத ஒரு பெண் அந்த நகருக்குள் நுழைந்தால் என்ன நடக்கும்? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும் வகையில் உருவாகியிருக்கிறது ‘அக்கா’ தொடர். இதில் ருத்ரா என்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ராதிகா ஆப்தே.
‘ஃபோபியா’, ‘அந்தாதுன்’, ‘ஸ்கேர்ட் கேம்ஸ்’, ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ போன்ற படைப்புகளில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்த ராதிகா ஆப்தே, ருத்ரா கதாபாத்திரம் தனக்கு ஒரு புதிய அனுபவமாக அமைந்துள்ளதாகக் கூறுகிறார்.
“ஒருவர் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் அவருடைய அடையாளத்தைத் தீர்மானிக்கக் கூடாது என்பதில் ருத்ரா உறுதியாக இருக்கிறாள். அவள் துணிச்சலானவள்; தனக்கென இலக்குகளை வைத்திருப்பவள். ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருக்கும் அதிகார அமைப்பைக் கேள்வி கேட்கவும் தயங்க மாட்டாள். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைவிட, தான் எதை நம்புகிறோம் என்பதற்கே முக்கியத்துவம் கொடுப்பவள். இதுபோன்ற குணங்கள்தான் ருத்ராவைச் சுவாரஸ்யமான கதாபாத்திரமாக மாற்றுகின்றன” என்கிறார் அவர்.
அதிகாரப் போட்டிக்கு அப்பால் ஒரு மோதல்!
‘அக்கா’ தொடரின் டிரெய்லர், ராதிகா ஆப்தேவின் ருத்ராவுக்கும் கீர்த்தி சுரேஷின் பவானிக்கும் இடையிலான மோதலை முக்கியமாகக் காட்டுகிறது. ஆனால், இந்த மோதலை யார் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்ற ஒற்றைக் கோணத்தில் மட்டும் பார்க்க முடியாது என்கிறார் ராதிகா.
“இந்தத் தொடரில் எனக்குப் பிடித்த விஷயம், கதாபாத்திரங்களுக்கு இடையிலான மோதல் வெறும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போட்டியாக இல்லாததுதான். ஒவ்வொருவருக்கும் தனித்தனி நம்பிக்கைகள் இருக்கின்றன. அவரவர் விசுவாசங்களும், வாழ்க்கையில் முக்கியம் என்று கருதும் விஷயங்களும் வேறுபடுகின்றன. அந்த வேறுபாடுகள்தான் கதையில் மோதல்களை உருவாக்குகின்றன” என்று அவர் விளக்குகிறார்.
சரி, தவறு என்று மற்றவர்கள் வகுத்து வைத்திருக்கும் வரையறைகளுக்கு ஏற்ப ருத்ரா வாழ விரும்பவில்லை. தனது நம்பிக்கைகளுக்கும் கொள்கைகளுக்கும் ஏற்றபடியே அவள் முடிவுகளை எடுக்கிறாள். பவானியின் அணுகுமுறையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ருத்ராவின் செயல்பாடுகள், இருவருக்கும் இடையிலான முரண்பாட்டை மேலும் சுவாரஸ்யமாக்குகின்றன. இந்த இரண்டு பெண்களின் பார்வைகளும் முடிவுகளும் மோதுவதுதான் தொடரின் முக்கியமான கதைக்களமாக அமைகிறது.
வலுவான நட்சத்திரக் கூட்டணியில் ‘அக்கா’!
தர்மராஜ் ஷெட்டி எழுதி இயக்கியுள்ள ‘அக்கா’ தொடரை யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. ஆதித்யா சோப்ரா, யோகேந்திர மோக்ரே, அக்ஷய் விதானி ஆகியோர் நிர்வாகத் தயாரிப்புப் பொறுப்புகளை ஏற்றுள்ளனர்.
ராதிகா ஆப்தே, கீர்த்தி சுரேஷ், தன்வி ஆஸ்மி, மகேஷ் மஞ்ச்ரேக்கர், அன்ஷுமன் புஷ்கர், மோனிகா பன்வார் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹுசைன் தலால், அப்பாஸ் தலால் ஆகியோர் வசனங்களை எழுதியுள்ளனர். ஜான் ஸ்டீவர்ட் எடுரி இசையமைத்துள்ளார். சங்க்யுக்தா காஸா, சாஹீப் பாக்சி ஆகியோர் படத்தொகுப்பையும், லக்ஷ்மி கேலுஸ்கர் தயாரிப்பு வடிவமைப்பையும் கவனித்துள்ளனர். ஷீட்டல் இக்பால் ஷர்மா ஆடை வடிவமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். சுனில் ரோட்ரிக்ஸ் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
விதிகளைப் பின்பற்றுவதா, அவற்றையே கேள்விக்குள்ளாக்குவதா என்ற முரண்பாட்டை மையமாகக் கொண்டுள்ள ‘அக்கா’ தொடரில், ருத்ராவாக ராதிகா ஆப்தே எந்த அளவுக்கு ரசிகர்களைக் கவரப்போகிறார் என்பதே இப்போது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Radhika Apte on ‘Akka’: “Rudra Is Fascinating Because She Refuses to Play by the Rules”
Radhika Apte opens up about playing Rudra, a bold and unpredictable woman who challenges established power structures in the upcoming series ‘Akka’.
What happens when a woman who refuses to conform enters a city where power has been controlled by women for generations? This is the intriguing premise of Akka, a series set in the fictional city of Pernuru, where long-standing hierarchies and established rules shape the lives of its people. At the heart of the story is Rudra, played by Radhika Apte, a woman who has little interest in accepting the system as it is.
Known for her performances in Phobia, Andhadhun, Sacred Games and Lust Stories, Radhika Apte describes Rudra as a character unlike any she has portrayed before.
“Rudra never allows the circumstances she faces to define her identity. She is fearless, ambitious and unafraid to question an established power structure. That is what makes her such a fascinating character,” says the actress.
A Clash Driven by Beliefs, Not Just Power
The trailer for Akka highlights the conflict between Rudra and Bhavani, played by Keerthy Suresh. While their rivalry appears to be at the centre of the story, Apte believes the conflict goes far beyond a straightforward struggle for power.
“One of the things I really enjoyed about Akka is that the conflict is not simply about who gets to seize power. Each character is driven by a different set of beliefs and loyalties, as well as things that matter to them personally. These differences are what make the conflicts interesting,” she explains.
Unlike those who measure their actions against conventional ideas of right and wrong, Rudra follows her own beliefs and principles. Her approach stands in sharp contrast to Bhavani’s, creating a clash between two women with distinctly different perspectives and ways of navigating the world.
This ideological divide forms a central part of the series, adding depth to the rivalry and making the conflict more than just a battle for control.
A Strong Ensemble Cast Powers ‘Akka’
Written and directed by Dharmaraj Shetty, Akka is produced by Yash Raj Films Entertainment. Aditya Chopra, Yogendra Mogre and Akshay Widhani serve as executive producers.
The series features an ensemble cast that includes Radhika Apte, Keerthy Suresh, Tanvi Azmi, Mahesh Manjrekar, Anshumaan Pushkar and Monica Panwar.
Hussain Dalal and Abbas Dalal have penned the dialogues, while John Stewart Eduri has composed the music. Sanyukta Kaza and Sahib Baxi are responsible for editing, with Lakshmi Keluskar handling production design and Sheetal Iqbal Sharma overseeing costume design. Sunil Rodrigues has choreographed the action sequences.
With its exploration of power, personal convictions and resistance to established rules, Akka promises a compelling clash of characters. All eyes will be on Radhika Apte as she steps into the role of Rudra, a woman determined to challenge the system rather than surrender to it.
