Friday, November 6
Shadow

ஷாருக்கான் பிறந்தநாள் கொண்டாட்டத்தை களைகட்டிய ‘கிங்’ படத்தின் முதல் பாடல்!

ஷாருக்கான் பிறந்தநாள் கொண்டாட்டத்தை களைகட்டிய ‘கிங்’ படத்தின் முதல் பாடல்!

ஷாருக்கான் – தீபிகா படுகோன் மீண்டும் இணையும் ‘தூ மில் ஜாயே’ பாடலில் எட் ஷீரன், அர்ஜித் சிங் இசைச் சங்கமம்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்களுக்கு சிறப்பான இசைப் பரிசாக வெளியாகியுள்ளது வரவிருக்கும் பிரம்மாண்ட திரைப்படமான ‘கிங் – KING’ படத்தின் முதல் பாடல் ‘தூ மில் ஜாயே – Tu Mil Jaaye’.

காதல், அதிரடி, பிரம்மாண்டம் மற்றும் ஷாருக்கானுக்கே உரித்தான மிரட்டலான திரை ஆளுமை ஆகியவற்றை ஒரே பாடலில் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல், வெளியானதுமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘கிங்’ திரைப்படத்தின் உலகம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் உருவாகியுள்ள இந்தப் பாடல் வீடியோ, ஷாருக்கானின் அதிரடியான வசனத்துடன் தொடங்குகிறது. காதலையும் தனது தனித்துவமான மிரட்டல் பாணியையும் இணைத்து அவர் பேசும் அந்தத் தொடக்கம், படத்தின் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கிறது.

இதனைத் தொடர்ந்து உற்சாகமான காதல் பாடலாக நகரும் ‘தூ மில் ஜாயே’, இந்திய இசை உலகின் பிரபல பாடகர் அர்ஜித் சிங், உலகப் புகழ்பெற்ற பாப் இசைக் கலைஞர் எட் ஷீரன், பாடகி மதுபந்தி பாக்சி ஆகியோரின் இசைச் சங்கமத்தால் தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. அர்ஜித் சிங்கின் மென்மையான குரலும், எட் ஷீரனின் ஆங்கில ராப் பாணியும் இணைந்திருப்பது பாடலின் முக்கிய சிறப்பாக அமைந்துள்ளது.

மேலும், ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட ஷாருக்கான் – தீபிகா படுகோன் ஜோடி மீண்டும் திரையில் இணைந்திருப்பது இந்தப் பாடலுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. காதல் காட்சிகள், பிரம்மாண்டமான பின்னணிகள் மற்றும் இருவரின் திரை கெமிஸ்ட்ரி ஆகியவை ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளன.

சாதாரண காதல் பாடலாக மட்டுமல்லாமல், அதிரடி காட்சிகள், வேகமான காட்சி மாற்றங்கள் மற்றும் படத்தின் சூழலை வெளிப்படுத்தும் வசனங்களுடன் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ‘கிங்’ திரைப்படம் ரசிகர்களுக்காக உருவாக்கி வைத்திருக்கும் பிரம்மாண்ட உலகத்தின் ஒரு சிறிய முன்னோட்டமும் கிடைக்கிறது.

சச்சின் – ஜிகர் இசையமைத்துள்ள இந்தப் பாடலுக்கு குமார் பாடல் வரிகளை எழுதியுள்ளார். பியூஷ் – ஷாஜியா நடன அமைப்பில் உருவாகியுள்ள பாடலில், எட் ஷீரனின் ஆங்கில ராப் வரிகளும் இடம்பெற்றுள்ளன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இசை மற்றும் படைப்பாற்றல் மிக்க கலைஞர்களை ஒன்றிணைத்துள்ள இந்த முயற்சி, பாடலுக்கு சர்வதேசத் தன்மையை அளித்துள்ளது.

பாடலின் இறுதியில் இடம்பெறும் ஷாருக்கானின் மற்றொரு தீவிரமான வசனம், ‘கிங்’ திரைப்படத்தின் அதிரடியான கதைக்களம் மற்றும் அவரது கதாபாத்திரத்தின் ஆவேசமான தன்மையை வெளிப்படுத்துகிறது.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கிங் – KING’ திரைப்படத்தை ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மெண்ட் மற்றும் மார்ஃப்ளிக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.

ஷாருக்கானின் அதிரடி அவதாரம், தீபிகா படுகோனுடனான மீண்டும் இணைவு மற்றும் சர்வதேச இசைக் கலைஞர்களின் கூட்டணி என பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ‘கிங்’ திரைப்படம், வரும் டிசம்பர் 24, 2026 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தற்போது ‘தூ மில் ஜாயே – Tu Mil Jaaye’ பாடல் அனைத்து முக்கிய இசைத் தளங்களிலும் வெளியாகியுள்ளது. இதன் இசை வீடியோவை Zee Music Company மற்றும் T-Series யூடியூப் சேனல்களிலும் ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம்.

Shah Rukh Khan’s Birthday Surprise: ‘Tu Mil Jaaye’, the First Song from ‘KING’, Takes Fans into a World of Romance and Action

Shah Rukh Khan and Deepika Padukone reunite as Arijit Singh and Ed Sheeran come together for a global musical collaboration!

Bollywood superstar Shah Rukh Khan has given his fans a special musical treat on his birthday with the release of ‘Tu Mil Jaaye’, the first song from his highly anticipated upcoming film, ‘KING’.

Blending romance, action, grandeur and Shah Rukh Khan’s trademark intense screen presence, the song has captured the attention of fans soon after its release.

Offering audiences a glimpse into the world of KING, the music video opens with a powerful dialogue by Shah Rukh Khan. The striking introduction, which combines romance with his signature intense style, sets the tone for his character and builds excitement around the film.

The energetic romantic track brings together some of the biggest names in music. Bollywood’s celebrated singer Arijit Singh, global pop sensation Ed Sheeran, and singer Madhubanti Bagchi have joined forces to create a distinctive musical experience. Arijit Singh’s soulful vocals combined with Ed Sheeran’s English rap add a unique international flavour to the song.

Adding to the excitement is the much-loved on-screen reunion of Shah Rukh Khan and Deepika Padukone. Their chemistry, romantic moments and the song’s grand visuals are among the major highlights, bringing back the magic that audiences have always enjoyed watching on screen.

More than just a conventional romantic track, ‘Tu Mil Jaaye’ incorporates action sequences, slick transitions and powerful dialogues, offering viewers an early preview of the larger-than-life world that KING promises to bring to the big screen.

The song has been composed by the acclaimed music duo Sachin-Jigar, with lyrics by Kumaar and choreography by Piyush-Shazia. Ed Sheeran has also contributed the English rap lyrics, making the track a unique coming together of talented artists from different parts of the world.

The video concludes with another intense dialogue from Shah Rukh Khan, further highlighting the powerful and action-packed atmosphere of KING and giving fans a glimpse of the fierce character he is set to portray.

Directed by Siddharth Anand, KING is produced by Red Chillies Entertainment and Marflix Pictures.

With Shah Rukh Khan in an action-packed avatar, his much-awaited reunion with Deepika Padukone, and an exciting global musical collaboration, KING has already generated significant anticipation among fans.

KING is set to hit theatres worldwide on December 24, 2026.

Meanwhile, ‘Tu Mil Jaaye’ is now available across major music streaming platforms, while its official music video can be watched on the YouTube channels of Zee Music Company and T-Series.