
69 வயதில் தொடங்கிய ஆன்மிகப் பயணம்… உலகம் முழுவதும் ஒலித்த கிருஷ்ண பக்தியின் கதை!
‘சரணாகதி’ – ஸ்ரீல பிரபுபாதரின் வாழ்க்கையை அனிமேஷன் திரைப்படமாக்கும் ஹோம்பாலே ஃபிலிம்ஸ்; ஆகஸ்ட் 2027-ல் உலகளாவிய வெளியீடு!
சென்னை: வயது என்பது சாதனைகளுக்குத் தடையல்ல; உறுதியான நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் இருந்தால் ஒரு தனிமனிதனின் பயணம் உலகையே மாற்றும் என்பதற்கு வாழும் சாட்சியாகத் திகழ்ந்தவர் ஸ்ரீல ஏ.சி. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர். அவரது வாழ்க்கை வரலாற்றையும், உலகம் முழுவதும் கிருஷ்ண பக்தியைப் பரப்ப அவர் மேற்கொண்ட மகத்தான ஆன்மிகப் பணிகளையும் மையமாகக் கொண்டு ‘சரணாகதி – தி லைஃப் ஆஃப் எ சரண்டர்ட் சோல்’ (ŚARAṆĀGATI – The Life of a Surrendered Soul) என்ற புதிய அனிமேஷன் திரைப்படம் உருவாகிறது.
‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’, ‘காந்தாரா’, ‘மஹாவதார் நரசிம்மா’ என வித்தியாசமான கதைகளையும் பிரம்மாண்டமான படைப்புகளையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ், இந்தப் படத்தை டிரான்சென்டென்டல் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்குகிறது. இஸ்கான் அமைப்பின் நிறுவனர் ஆச்சார்யரான ஸ்ரீல பிரபுபாதரின் வாழ்க்கையைப் புதிய தலைமுறையினருக்கும் உலகளாவிய ரசிகர்களுக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்தப் படைப்பு உருவாக்கப்படுகிறது.
69 வயதில் தொடங்கிய உலகளாவிய பயணம்!
இந்தப் படத்தின் கதைக்களமே பலருக்கும் வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 1965-ஆம் ஆண்டு தனது 69-வது வயதில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குக் கப்பலில் பயணமானார் ஸ்ரீல பிரபுபாதர். பகவத் கீதையின் உன்னதக் கருத்துகளையும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் போதனைகளையும் உலக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே அவரது பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.
தனது ஆன்மிக குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாக்குரரின் வழிகாட்டுதலை ஏற்று, பல்வேறு சவால்களையும் கடந்து கிருஷ்ண உணர்வு இயக்கத்தை உலகம் முழுவதும் பரப்பினார். அவரது விடாமுயற்சி, இறை நம்பிக்கை, தன்னலமற்ற சேவை ஆகியவற்றின் மூலம் உருவான ஆன்மிக இயக்கம் இன்று பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மனிதரின் தனிப்பட்ட ஆன்மிக அர்ப்பணிப்பு எவ்வாறு உலகளாவிய இயக்கமாக உருவெடுத்தது என்பதை உணர்வுபூர்வமாகச் சொல்லவிருக்கிறது ‘சரணாகதி’.
அனிமேஷனில் புதிய தொழில்நுட்ப முயற்சி!
வெறும் வாழ்க்கை வரலாற்றுப் படமாக மட்டுமின்றி, தொழில்நுட்ப ரீதியாகவும் தனித்துவமான அனுபவத்தை வழங்கும் வகையில் இப்படம் தயாராகி வருகிறது. இதற்காக செயற்கை நுண்ணறிவு சார்ந்த மோஷன் கேப்சர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
மனிதர்களின் உடல் அசைவுகள், முகபாவனைகள், சைகைகள் உள்ளிட்டவற்றைக் கேமராக்கள் மூலம் பதிவு செய்து, செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் அவற்றை டிஜிட்டல் வடிவமாக மாற்றி அனிமேஷன் கதாபாத்திரங்களுக்குப் பொருத்துவதே இந்தத் தொழில்நுட்பத்தின் சிறப்பம்சமாகும். இதன் மூலம் கதாபாத்திரங்களின் அசைவுகளும் உணர்ச்சிகளும் இயல்பாக வெளிப்படுவதுடன், பார்வையாளர்களுக்கு நெருக்கமான திரை அனுபவத்தையும் உருவாக்க முடியும்.
ஆன்மிகத்தின் ஆழத்தையும் நவீன அனிமேஷன் தொழில்நுட்பத்தின் சாத்தியங்களையும் இணைக்கும் முயற்சியாக இப்படம் உருவாகி வருகிறது.
இந்தியக் கலாச்சாரக் கதைகளுக்கு முக்கியத்துவம்!
இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் ஆன்மிகக் கதைகளுக்கு சர்வதேச அளவில் கவனம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ‘காந்தாரா’ மூலம் கர்நாடகத்தின் பாரம்பரிய பூத கோலா கலாச்சாரத்தைப் பரந்த ரசிகர் வட்டத்திற்குக் கொண்டு சென்றது. தொடர்ந்து ‘மஹாவதார் நரசிம்மா’ மூலம் அனிமேஷன் திரைப்படத் துறையிலும் தனது கவனத்தைப் பதிவு செய்தது.
அந்தப் பயணத்தின் அடுத்த கட்டமாக, இந்தியாவின் ஆன்மிகச் சிந்தனைகள், நம்பிக்கைகள் மற்றும் சனாதன தர்மத்தின் அடிப்படைக் கருத்துகளை நவீனத் திரைப்பட வடிவில் உலக மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக ‘சரணாகதி’ அமைந்துள்ளது.
படைப்புக் குழுவினர் விவரம்!
கௌர சக்தி தாஸ் எழுதி இயக்கும் இப்படத்தை ராஜேஷ் சிங் மற்றும் லோஹித் ராவ் தயாரிக்கின்றனர். ஸ்ரீதர் ஷிகாரிபுரா விஷுவல் டைரக்டராகப் பணியாற்றுகிறார். டிரான்சென்டென்டல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், டைவ் டீப் ஏஐ ஸ்டுடியோவுடன் இணைந்து உருவாகும் இப்படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் உலகம் முழுவதும் வழங்கி வெளியிடுகிறது.
ஸ்ரீரங்கப்பட்டணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நரசிம்ம சைதன்ய மடம், இஸ்கான் பெங்களூரு, இஸ்கான் அமைப்பு மற்றும் பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளை (BBT) ஆகியவற்றின் ஆசியுடன் திரைப்படம் உருவாகி வருகிறது.
ஸ்ரீல பிரபுபாதரின் வியாச பூஜை திருநாளை முன்னிட்டு, 2027 ஆகஸ்ட் மாதத்தில் இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மனிதரின் இறை நம்பிக்கை, அர்ப்பணிப்பு, தன்னலமற்ற சேவை ஆகியவை காலத்தைக் கடந்து எத்தகைய மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதைச் சொல்லும் ‘சரணாகதி’, ஆன்மிகத்தையும் சினிமாவையும் இணைக்கும் குறிப்பிடத்தக்க படைப்பாக அமையும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

From a 69-Year-Old’s Voyage to a Global Spiritual Movement: Hombale Films Announces Animated Film ‘ŚARAṆĀGATI’
The film chronicles the extraordinary life and worldwide mission of ISKCON founder-ācārya Śrīla Prabhupāda; set for a global theatrical release in August 2027.
A journey that began at the age of 69 went on to inspire millions across the world. The remarkable life and spiritual legacy of His Divine Grace A. C. Bhaktivedanta Swami Śrīla Prabhupāda, the Founder-Ācārya of the International Society for Krishna Consciousness (ISKCON), is set to come alive on the big screen through an ambitious animated feature titled ŚARAṆĀGATI – The Life of a Surrendered Soul.
Hombale Films, the production house behind acclaimed pan-Indian blockbusters such as KGF, Salaar and Kantara, has joined hands with Transcendental Films to present this distinctive cinematic tribute. The film aims to introduce the extraordinary life, spiritual journey and global mission of Śrīla Prabhupāda to audiences across generations and around the world.
A Journey That Transformed Millions
One of the most compelling aspects of Śrīla Prabhupāda’s life was his decision to travel from India to the United States in 1965, at the age of 69. Carrying the timeless wisdom of the Bhagavad-gītā and the divine message of Lord Śrī Kṛṣṇa, he embarked on a mission to share the teachings of Kṛṣṇa consciousness with people across the world.
Guided by the instructions of his spiritual master, Śrīla Bhaktisiddhānta Sarasvatī Ṭhākura, he dedicated his life to spreading Kṛṣṇa consciousness beyond geographical and cultural boundaries. Through unwavering faith, extraordinary perseverance and selfless service, he established a spiritual movement that eventually reached millions of people across different countries.
ŚARAṆĀGATI seeks to bring this extraordinary transformation to the screen, portraying how the complete surrender and conviction of one individual evolved into a worldwide spiritual movement.
Blending Spiritual Storytelling with Next-Generation Technology
Beyond its powerful subject, the film is also drawing attention for its innovative approach to animation. The makers are employing advanced Artificial Intelligence-based Motion Capture technology to create realistic character movements and expressive performances.
The technology records human body movements, gestures, facial expressions and joint positions through cameras. Artificial intelligence and computer vision then process this information into digital animation data, which is mapped onto 3D animated characters.
This approach enables animated characters to recreate natural human movements and emotions, offering audiences a more immersive visual experience. By combining emerging technology with spiritually rooted storytelling, the film aims to explore new possibilities in Indian animation filmmaking.
Hombale Films Continues Its Focus on Distinctive Indian Stories
Over the years, Hombale Films has established itself as one of India’s prominent production houses, backing ambitious projects and stories that have connected with audiences across the country.
From the blockbuster KGF franchise and Salaar to Kantara, the banner has consistently championed distinctive narratives and culturally rooted storytelling. Through Kantara, it introduced the traditional Bhoota Kola heritage of Karnataka to a much wider audience, bringing regional folklore into the mainstream.
The production house also ventured further into animation with Mahavatar Narsimha. Following the film’s success, Hombale Films is continuing its focus on stories inspired by India’s spiritual wisdom, cultural identity and civilisational heritage.
With ŚARAṆĀGATI, the banner takes another step towards presenting India’s spiritual traditions through contemporary cinematic formats, making them accessible and engaging for younger generations and international audiences.
Meet the Creative Team Behind the Film
Written and directed by Gaura Shakti Dasa, ŚARAṆĀGATI is produced by Rajesh Singh and Lohith Rao, with Sridhar Shikaripura serving as the Visual Director.
The film is a Transcendental Films production in association with Dive Deep AI Studio. Hombale Films will present and distribute the film worldwide.
The project is being made with the blessings of Sri Narasingha Chaitanya Matha, Srirangapatna, ISKCON Bangalore, ISKCON and the Bhaktivedanta Book Trust (BBT).
A Global Theatrical Release in August 2027
With its official title announcement, ŚARAṆĀGATI – The Life of a Surrendered Soul sets the stage for a cinematic celebration of a life defined by faith, surrender and selfless service.
Scheduled for a worldwide theatrical release in August 2027, coinciding with the auspicious occasion of Śrīla Prabhupāda’s Vyāsa-pūjā, the film aims to take his extraordinary life story and enduring spiritual legacy to audiences across the globe.
More than a biographical account, ŚARAṆĀGATI promises to explore the power of an individual’s faith and dedication to inspire a movement that transcends generations, cultures and geographical boundaries.
