Thursday, November 12
Shadow

மர்ம வீட்டில் காத்திருக்கும் அமானுஷ்யம்! ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – ஜனவரியில் திரைக்கு வருகிறது!

மர்ம வீட்டில் காத்திருக்கும் அமானுஷ்யம்! ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – ஜனவரியில் திரைக்கு வருகிறது!

ஒரு வீடு… அதற்குள் மறைந்திருக்கும் மர்மங்கள்… தாயும் மகனும் எதிர்கொள்ளும் அமானுஷ்ய அனுபவங்கள் என ரசிகர்களைத் திகிலூட்டும் வகையில் உருவாகி வரும் ஹாரர் திரில்லர் திரைப்படம் ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தையும் வரவேற்பையும் பெற்று வருகிறது.

ஆரா டேல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அபய் சங்கர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. வழக்கமான பேய் படங்களின் பாணியிலிருந்து விலகி, திகில், மர்மம், குடும்ப உறவுகள், நகைச்சுவை, காதல் எனப் பல்வேறு உணர்வுகளை ஒரே கதைக்களத்தில் இணைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், இருண்ட பின்னணியில் மர்மம் நிறைந்த கட்டிடத்தின் முன்பாக அச்சத்துடன் மேலே பார்க்கும் தாயும் மகனும் இடம்பெற்றுள்ளனர். அவர்களைச் சுற்றியுள்ள அமானுஷ்யச் சூழலும், போஸ்டரின் காட்சியமைப்பும் படத்தின் கதைக்களம் குறித்த பல கேள்விகளை எழுப்புகின்றன. குறிப்பாக, அந்தக் கட்டிடத்திற்குள் என்ன நடக்கிறது என்ற எதிர்பார்ப்பை உருவாக்கும் வகையில் போஸ்டர் அமைந்துள்ளது.

கனவுடன் சென்னைக்கு வரும் மகன்… அச்சத்தில் உறையும் புதிய வீடு!

கேரளாவிலிருந்து தனது தாயுடன் சென்னைக்கு வரும் நடுத்தர வயது இளைஞர் ஒருவர், திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார். இதற்காகத் தனது தாயுடன் ஒரு புதிய வீட்டில் குடியேறுகிறார். ஆனால், அந்த வீட்டில் அவர்கள் எதிர்பார்த்த அமைதியான வாழ்க்கை அமையவில்லை. அடுத்தடுத்து நிகழும் மர்மமான சம்பவங்களும், விளக்க முடியாத அமானுஷ்ய நிகழ்வுகளும் இருவரையும் அச்சத்தில் ஆழ்த்துகின்றன.

அந்த வீட்டைச் சுற்றி நடக்கும் சம்பவங்களுக்குப் பின்னால் இருக்கும் உண்மை என்ன? தாயும் மகனும் எதிர்கொள்ளும் அமானுஷ்யப் பிரச்சினைகளிலிருந்து எப்படி மீள்கிறார்கள்? என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

திகிலூட்டும் காட்சிகள், எதிர்பாராத திருப்பங்கள் என ஹாரர் ரசிகர்களைக் கவரும் அம்சங்களுடன், குடும்ப உறவுகளின் உணர்வுகள், காதல் மற்றும் நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். இதனால் வெறும் திகில் படமாக மட்டுமல்லாமல், பல்வேறு உணர்வுகளை உள்ளடக்கிய பொழுதுபோக்குத் திரைப்படமாகவும் ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’ உருவாகியுள்ளது.

நட்சத்திரக் கூட்டணியில் வலுவான கதாபாத்திரங்கள்!

இப்படத்தில் கலேஷ் ராமானந்த் கதாநாயகனாகவும், ஷ்ரத்தா கோகுல் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். நடிகை ஊர்வசியின் மூத்த சகோதரியான நடிகை கலாரஞ்சினி, கதாநாயகனின் தாயாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் ரமேஷ் திலக், தலைவாசல் விஜய், சார்மிளா, டிஎஸ்ஆர் ஸ்ரீனிவாசன், கும்கி அஸ்வின், டாக்டர் அமர் ராமச்சந்திரன், பிரதிபா பிரதாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு!

படத்திற்கு ஸ்ரீஜித் எடவானா இசையமைப்பதுடன் பின்னணி இசையையும் கவனிக்கிறார். ஒளிப்பதிவை பிரசாந்த் பிரணவம் மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்புப் பணிகளை ஐயப்பன் நாயர் எம்.எஸ். கவனிக்கிறார். ஜாக்கி ஜான்சன் புராஜெக்ட் டிசைனராகவும், தீபு சந்திரன் விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

ஹேஷாம் அப்துல் வஹாப், வினீத் ஸ்ரீனிவாசன், அனிலா ராஜீவ் ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர். நவீன் கண்ணன், பீம் ஜி, நவீன் மாரார், ரஞ்சித் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

சி.எம். சாதிக் ஒலி வடிவமைப்பு மற்றும் ஒலிக்கலவைப் பணிகளையும், சரண் விநாயக் ஒலி எடிட்டிங் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். எஸ்.பி. நாகராஜ் கலை இயக்குநராகவும், கே. மகேந்திரன் தயாரிப்பு மேலாளராகவும், கே. ராமு ஆடை வடிவமைப்பாளராகவும், ரோகிணி கே.எஸ். ஒப்பனைக் கலைஞராகவும் பணியாற்றியுள்ளனர்.

சென்னை மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. மொத்தம் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ள இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அனைத்துப் பணிகளையும் முடித்து, வரும் ஜனவரி 2027-ல் இப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’, தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் வெளியாகி ஹாரர் திரில்லர் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Mystery and Supernatural Thrills Await in ‘F6 Building Ivory Street’; First Look Poster Released, Film Set for January 2027 Release!

A mysterious house, unexplained supernatural occurrences and a mother and son caught in a series of terrifying situations – these elements form the intriguing premise of the upcoming horror thriller ‘F6 Building Ivory Street’. The film’s first-look poster has been released and is already attracting attention among movie lovers.

Produced by Aura Tale Studios, the film is written and directed by debutant filmmaker Abhay Shankar. Being made simultaneously in Tamil and Malayalam, the film promises a distinctive horror experience by blending suspense, supernatural elements, family emotions, comedy and romance.

The recently unveiled first-look poster features a mother and son looking upwards in fear against the backdrop of a mysterious building surrounded by darkness. The eerie atmosphere and intriguing visual presentation offer a glimpse into the film’s supernatural world, raising several questions about the secrets hidden within the building.

A New Beginning Turns into a Terrifying Experience!

The story revolves around a middle-aged man who moves from Kerala to Chennai with his mother, hoping to begin a new chapter in life while pursuing his dream of becoming a film director. However, their decision to settle into a new house soon turns into a frightening experience.

Strange and unexplained incidents begin to occur inside the house, leaving both of them terrified. What is the mystery surrounding the building? What lies behind the supernatural occurrences? And how will the mother and son deal with the frightening experiences? These questions form the intriguing foundation of the film.

Combining spine-chilling horror sequences with unexpected thriller twists, the film also explores family relationships, romance, comedy and emotionally engaging moments. Rather than being a conventional horror film, ‘F6 Building Ivory Street’ aims to offer audiences a complete cinematic experience with a blend of different emotions.

Prominent Cast in Key Roles

Kalesh Ramanand plays the lead role, while Shraddha Gokul is paired opposite him as the female lead. Actress Kalaranjini, elder sister of renowned South Indian actress Urvashi, plays a significant role as the protagonist’s mother.

The supporting cast includes Ramesh Thilak, Thalaivasal Vijay, Sharmila, TSR Srinivasan, Kumki Ashwin, Dr. Amar Ramachandran and Pratibha Pratap, among others.

Strong Technical Team Behind the Film

Sreejith Edavana has composed the music and is also handling the background score. Prashanth Pranavam is the cinematographer, while Ayyappan Nair M.S. is in charge of editing. Jackie Johnson serves as the project designer, and Deepu Chandran handles the VFX work.

The songs have been rendered by Hesham Abdul Wahab, Vineeth Sreenivasan and Anila Rajeev, while Naveen Kannan, Bheem G, Naveen Marar and Ranjith have penned the lyrics.

C.M. Sadiq is responsible for sound design and sound mixing, while Charan Vinayak handles sound editing. S.P. Nagaraj serves as the art director, K. Mahendran as the production manager, K. Ramu as the costume designer and Rohini K.S. as the makeup artist.

Theatrical Release Planned for January 2027

The film was shot extensively in Chennai and Thiruvananthapuram and features a total of four songs. The post-production work is currently progressing at a brisk pace.

The makers are planning to complete all the remaining work and bring ‘F6 Building Ivory Street’ to theatres in January 2027.

With its intriguing first-look poster already generating curiosity, this Tamil-Malayalam bilingual horror thriller is expected to offer a fresh cinematic experience for fans of the horror and thriller genres.