
‘தீராகணம்’ மூலம் கவனம் ஈர்க்கும் ‘ஃபேமிலி பாய்’ திரைப்படம் – முதல் பாடலை வெளியிட்ட இயக்குநர் விக்னேஷ் சிவன்!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான மித்துன் மாணிக்கம் கதையின் நாயகனாக நடித்து, இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘ஃபேமிலி பாய்’ (Family Boy). குடும்ப உறவுகள், உணர்வுகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘தீராகணம்’ தற்போது வெளியாகி இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் பாடலையும் அதன் லிரிக்கல் வீடியோவையும் இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.
காதல் உணர்வுகளை மென்மையான இசையுடன் வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ள ‘தீராகணம்’ பாடலுக்கு நிர்மல் JP இசையமைத்துள்ளார். படத்தின் இயக்குநரும் கதாநாயகனுமான மித்துன் மாணிக்கம் பாடல் வரிகளை எழுதியுள்ளார். ஆதித்யா RK, மால்வி சுந்தரேசன், அபர்ணா நாராயணன் ஆகியோர் இணைந்து இப்பாடலைப் பாடியுள்ளனர்.
‘சரியா… சதியா… நீ என் சகி… மதியா… விதியா… நீ கண்மணி…’ எனத் தொடங்கும் பாடல், காதலின் அழகையும் அதன் ஆழமான உணர்வுகளையும் இசை வழியாக வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, ‘அணுவும் அண்டமும்… அவளும் யானும்… அனைத்தும் காதலே… அவள் என் தீராகணமே…’ என்ற கவித்துவமான வரிகளுடன் தொடங்கும் லிரிக்கல் வீடியோ, பாடலுக்கு கூடுதல் அழகு சேர்க்கிறது.
இப்படத்தில் மித்துன் மாணிக்கத்துடன் எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார், நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள் தாஸ், பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
குடும்பப் பின்னணியில் உண்மைச் சம்பவத்தைத் தழுவி, ஃபேமிலி டிராமா, ஆக்ஷன், த்ரில்லர் எனப் பல அம்சங்களைக் கலந்து இப்படம் உருவாகியுள்ளது. கார்த்திக் கே. கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு நிர்மல் JP இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை ஜிஜேந்திரன் V மேற்கொண்டுள்ளார். கலை இயக்குநராக C.K. முஜிபுர் ரஹ்மான் பணியாற்றியுள்ளார்.
மெக்கானிக் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் மித்துன் மாணிக்கம் தயாரித்துள்ள இப்படத்தை, மில்லினியல்ஸ் மூவி புரொடக்ஷன் LLP நிறுவனத்தின் சார்பில் முஹம்மத் கனி ஃபைசல் மற்றும் டாக்டர் கே. அருண் ஆறுமுகம் ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ளனர். தமிழக வெளியீட்டு உரிமையை பலூன் பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
வரும் டிசம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள ‘ஃபேமிலி பாய்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘தீராகணம்’ தற்போது வெளியாகியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. காதல் மெலோடியாக ரசிகர்களைச் சந்தித்துள்ள இந்தப் பாடல், படத்தின் இசைப் பயணத்திற்கான முதல் அறிமுகமாக அமைந்துள்ளது.

Director Vignesh Shivan Unveils ‘Theeraganam’, the First Single from Mithun Manickam’s ‘Family Boy’!
The first single, ‘Theeraganam’, from the upcoming Tamil film ‘Family Boy’, starring and directed by Mithun Manickam, has been officially released. Director Vignesh Shivan unveiled the song along with its lyrical video, creating excitement among music lovers and film audiences.
Mithun Manickam, who has been steadily making his mark in Tamil cinema, plays the lead role in this family drama. The film promises an engaging mix of family emotions, action and thriller elements, with its story inspired by real-life incidents.
Composed by Nirmal JP, ‘Theeraganam’ is a melodious romantic number featuring lyrics penned by the film’s director and lead actor, Mithun Manickam. Playback singer Adithya RK joins voices with Malvi Sundaresan and Aparna Narayanan to bring the song to life.
Beginning with the lines, “Sariya… Sathiya… Nee En Sakhi… Mathiya… Vithiya… Nee Kanmani…”, the song beautifully captures the emotions of love and togetherness. The lyrical video opens with the poetic lines, “Anuvum Andamum… Avalum Yaanum… Anaithum Kaathale… Aval En Theeraganame…”, adding a poetic touch to the overall presentation.
The film features an ensemble cast including Mithun Manickam, M. Sukumar, Saran Sudhakar, Anugraha S. Nambiar, Nikhila Shankar, Anita Sampath, ‘Pasanga’ Sivakumar, Sivam, Arul Doss and P. L. Thenappan, among others.
On the technical front, cinematography is handled by Karthik K Kathiravan, while Nirmal JP takes charge of the music. G. Jendran V is responsible for editing, and C. K. Mujibur Rahman oversees the art direction.
‘Family Boy’ is produced by Mithun Manickam under the banner of Mechanic Pictures, in association with Muhammad Gani Faisal and Dr. K. Arun Arumugam of Millennials Movie Production LLP. Balloon Pictures will distribute the film across Tamil Nadu.
The makers have announced that ‘Family Boy’ will hit theatres worldwide on December 11. With the release of its first single, ‘Theeraganam’, the film has begun building anticipation among audiences. The romantic melody offers a glimpse into the musical world of the film and adds to the curiosity surrounding its theatrical release.
