Thursday, November 12
Shadow

பொங்கல் ரேசில் இருந்து விலகிய ‘இஞ்சி வெல்லம்’ – ஜனவரி 29-ல் உலகம் முழுவதும் வெளியாகிறது!

பொங்கல் ரேசில் இருந்து விலகிய ‘இஞ்சி வெல்லம்’ – ஜனவரி 29-ல் உலகம் முழுவதும் வெளியாகிறது!

விஜய் சேதுபதி – சாய் பல்லவி இணையும் மணிரத்னத்தின் காதல் திரைப்படம் வெளியீட்டுக்குத் தயார்!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘இஞ்சி வெல்லம்’ வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முதன்மைக் கதாபாத்திரங்களில் இணைந்துள்ள இப்படம், வரும் ஜனவரி 29-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

‘தக் லைஃப்’ திரைப்படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் இப்படம், காதலை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி – சாய் பல்லவி என்ற வித்தியாசமான திரை இணைவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

கடந்த ஜூலை மாதம் கொல்கத்தாவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. குறிப்பாக, புகழ்பெற்ற ஹவுரா பாலத்தின் பின்னணியில் விஜய் சேதுபதியும் சாய் பல்லவியும் இணைந்து பாடல் காட்சியில் நடித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து, படத்தின் தலைப்பான ‘இஞ்சி வெல்லம்’ என்பதை கிளிம்ப்ஸ் வீடியோ மூலம் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு வெறும் 90 நாட்களில் முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, படத்தின் வெளியீட்டுப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், பொங்கல் வெளியீட்டுப் போட்டியில் இருந்து விலகியுள்ள படக்குழு, ஜனவரி 29-ம் தேதியை வெளியீட்டுக்காகத் தேர்வு செய்துள்ளது.

மணிரத்னத்தின் தனித்துவமான கதை சொல்லும் பாணி, விஜய் சேதுபதியின் இயல்பான நடிப்பு, சாய் பல்லவியின் திரை ஆளுமை எனப் பல அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘இஞ்சி வெல்லம்’, ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான காதல் அனுபவத்தை வழங்குமா என்ற எதிர்பார்ப்பு இப்போதே உருவாகியுள்ளது.

‘Inji Vellam’ Moves Out of the Pongal Race; Vijay Sethupathi–Sai Pallavi Starrer to Release on January 29!

Mani Ratnam’s Upcoming Romantic Drama Completes Shooting in 90 Days

Director Mani Ratnam’s upcoming film, ‘Inji Vellam’, starring Vijay Sethupathi and Sai Pallavi in the lead roles, is gearing up for its theatrical release. The makers have officially announced that the film will hit theatres worldwide on January 29.

Following ‘Thug Life’, Mani Ratnam has taken up this new project, which is said to be a romantic drama. The combination of Vijay Sethupathi and Sai Pallavi has already generated considerable excitement among movie lovers.

The shooting of the film commenced in Kolkata in July. A video featuring Vijay Sethupathi and Sai Pallavi performing a song sequence against the iconic Howrah Bridge backdrop went viral on social media, attracting widespread attention. Subsequently, the makers unveiled the film’s title, ‘Inji Vellam’, through an intriguing glimpse video.

The film’s shooting was successfully wrapped up in just 90 days, and the project is now gearing up for its theatrical release.

Initially, ‘Inji Vellam’ was expected to arrive in theatres during the upcoming Pongal festival. However, the makers have now opted out of the Pongal release race and confirmed January 29 as the film’s worldwide theatrical release date.

With Mani Ratnam’s distinctive storytelling, Vijay Sethupathi’s naturalistic performance and Sai Pallavi’s screen presence, ‘Inji Vellam’ has already raised expectations among audiences. Moviegoers are eagerly looking forward to witnessing this fresh on-screen combination in what promises to be an engaging romantic entertainer.