
அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் ஆயுதமாக்கி எழும் கே. மணிகண்டன்! – ‘மக்கள் காவலன்’ படத்தின் முதல் பாடல் ‘IGNORE’ வெளியீடு!
**யோகி பி, அதிதி ஷங்கர், நிவாஸ் கே. பிரசன்னா குரலில் அதிரடி ராப் பாடல் – டிசம்பர் 4-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது ‘மக்கள் காவலன்’!**
ஒரு மனிதனைத் தொடர்ந்து புறக்கணிப்புகளும் அவமானங்களும் சூழ்ந்தால், அவன் முடங்கிப் போக வேண்டுமா? அல்லது அந்த அவமானங்களையே தனது பலமாக மாற்றிக்கொண்டு எதிர்த்து நிற்க வேண்டுமா? இத்தகைய அழுத்தமான கேள்வியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்தான் கே. மணிகண்டன் நடிப்பில் உருவாகும் ‘மக்கள் காவலன்’.
பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் பா. ரஞ்சித், அதிதி ஆனந்த் ஆகியோரின் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் முதல் பாடலான ‘IGNORE’ தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘குட்ஃபாதர் ஆஃப் தமிழ் ஹிப்-ஹாப்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் மலேசிய ராப் பாடகர் யோகி பி, நடிகையும் பாடகியுமான அதிதி ஷங்கர் மற்றும் இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா ஆகியோர் இணைந்து இந்தப் பாடலைப் பாடியுள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்து, இசை ஒருங்கிணைப்பு மற்றும் நிரலாக்கப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். பாடல் வரிகளை எம்.கே. பாலாஜி எழுதியுள்ளார். இப்படத்தின் இசை உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
வெறும் கொண்டாட்டத்திற்கான பாடலாக மட்டுமல்லாமல், கதாநாயகனின் மனநிலையையும் போராட்டக் குணத்தையும் வெளிப்படுத்தும் விதமாக ‘IGNORE’ உருவாகியுள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும் புறக்கணிப்பையும் அவமானத்தையும் சந்திக்கும் காவல்துறை அதிகாரி ஒருவர், அந்த வலிகளிலிருந்து மீண்டு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் தருணங்களை அதிரடியான ராப் இசையின் வழியாகப் பாடல் எடுத்துரைக்கிறது.
காயங்களால் தளர்ந்து போகாமல், அவற்றையே வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றிக்கொள்ளும் மன உறுதியை பாடல் அழுத்தமாகப் பதிவு செய்கிறது. ராப் இசையின் வேகத்துடன் தொடங்கும் பாடல், இடையிடையே இடம்பெறும் நாட்டுப்புறச் சடங்கு இசையின் மூலம் மண்ணின் இயல்பான இசை உணர்வையும் வெளிப்படுத்துகிறது. தொடர்ந்து ஒலிக்கும் பறை இசை பாடலுக்கு மேலும் வலிமை சேர்த்து, எதிர்ப்பையும் துணிச்சலையும் உச்சத்திற்குக் கொண்டு செல்கிறது.
**சாதாரண மனிதனின் அசாதாரணப் போராட்டம்!**
கண்ணியத்துடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒரு சாதாரண மனிதன், ஊழல் நிறைந்த அதிகார அமைப்பின் அழுத்தத்தால் சரணடைவதா அல்லது எதிர்த்து நிற்பதா என்ற இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படுகிறான். ஆரம்பத்தில் தனது உயிரையும் வாழ்க்கையையும் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தொடங்கும் அவனது போராட்டம், நாளடைவில் பலரின் உரிமைகளுக்கான பெரும் போராட்டமாக உருவெடுக்கிறது.
தான் ஒருபோதும் விரும்பாத தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டிய கட்டாயத்திற்கு அவன் தள்ளப்படுகிறான். எதிர்ப்பு வலுப்பெறும்போது அதற்கான விலையும் அதிகரிக்கிறது. ஒரு கட்டத்தில் சாதாரண மனிதனுக்கும் மக்களின் காவலனுக்கும் இடையிலான வேறுபாடு மறைந்து போகிறது. இவ்வாறு ஒரு தனிமனிதனின் போராட்டம் மக்கள் இயக்கமாக மாறும் கதைக்களத்துடன் ‘மக்கள் காவலன்’ உருவாகியுள்ளது.
எழுதி இயக்கியிருப்பவர் சந்தோஷ்குமார். கே. மணிகண்டன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வலுவான கதைக்களத்துடன் சமூகப் பார்வையையும் அதிரடி அம்சங்களையும் இணைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலாக வெளியாகியிருக்கும் ‘IGNORE’, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஒரு மனிதன் எதிர்கொள்ளும் அவமானம் எப்படி அவனது எழுச்சிக்கான காரணமாக மாறுகிறது என்பதைக் கூறும் ‘மக்கள் காவலன்’ திரைப்படம், வரும் டிசம்பர் 4-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
பாடலைப் பார்க்க: [‘IGNORE’ – YouTube
K. Manikandan Turns Humiliation into Strength in ‘Makkal Kaavalan’; First Single ‘IGNORE’ Released!
Yogi B, Aditi Shankar and Nivas K Prasanna lend their voices to the powerful rap anthem; the film is set for a worldwide theatrical release on December 4, 2026.
What happens when a person is repeatedly humiliated, ignored and pushed to the margins? Does he surrender to the circumstances or turn those very experiences into the strength to fight back? Exploring this compelling question is ‘Makkal Kaavalan’, an upcoming action drama starring K. Manikandan in the lead role.
Produced jointly by Birla Studios and Pa. Ranjith and Aditi Anand’s Neelam Studios, the film has unveiled its first single, ‘IGNORE’, which captures the protagonist’s pain, determination and fighting spirit through powerful rap music.
The song features vocals by Malaysian rapper Yogi B, popularly known as the ‘Godfather of Tamil Hip-Hop’, actor and singer Aditi Shankar, and music composer Nivas K Prasanna. Nivas K Prasanna has composed, arranged and programmed the track, while M.K. Balaji has penned the lyrics. Think Music has acquired the audio rights of the film.
More than just a musical number, ‘IGNORE’ reflects the emotional journey and fighting spirit of the protagonist. The song revolves around a police officer who faces constant rejection, humiliation and neglect at every stage of his life. Instead of allowing these experiences to defeat him, he draws strength from his wounds and rises to confront the challenges before him.
Driven by energetic rap beats, the track beautifully captures the transition from pain to determination. A section inspired by traditional folk ritual music brings an earthy flavour to the composition. This is followed by the powerful beats of the parai, which elevate the song into an intense expression of courage, resistance and defiance.
The song ultimately celebrates resilience and self-belief, portraying how a person who has been repeatedly victimised can rise above adversity and emerge victorious.
An ordinary man’s extraordinary fight!
‘Makkal Kaavalan’ follows an ordinary man who dreams of living with dignity but finds himself trapped in a corrupt system that leaves him with only two choices: surrender or resist.
What begins as an individual’s struggle for survival gradually develops into a much larger fight. Circumstances force him to take up a leadership role that he never desired. As the battle intensifies and the cost of resistance continues to rise, the distinction between an ordinary man and a protector of the people begins to disappear.
Written and directed by Santhosh Kumar, the film features K. Manikandan in the lead role. Blending an engaging storyline, social themes and action elements, the film explores how an ordinary individual is transformed into a people’s protector through circumstances and personal struggle.
Serving as the first musical introduction to the film, ‘IGNORE’ offers a glimpse into the protagonist’s journey and sets the tone for the intense narrative.
‘Makkal Kaavalan’ is scheduled for a worldwide theatrical release on December 4, 2026.
