Saturday, November 14
Shadow

நான்கு ஹீரோக்கள்… ஆறு ஹீரோயின்கள்… நட்பு, காதல், ஆக்‌ஷன் என அசத்த வரும் புதிய திரைப்படம்! பாடல் பணிகள் நிறைவு!

நான்கு ஹீரோக்கள்… ஆறு ஹீரோயின்கள்… நட்பு, காதல், ஆக்‌ஷன் என அசத்த வரும் புதிய திரைப்படம்! பாடல் பணிகள் நிறைவு!

தமிழ் சினிமாவில் நட்பை மையமாகக் கொண்டு பல திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும், நான்கு கதாநாயகர்கள், ஆறு கதாநாயகிகள் என வித்தியாசமான நட்சத்திரக் கூட்டணியுடன் உருவாகி வரும் புதிய திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தயாராகி வருகிறது. இப்படத்தின் பாடல் பணிகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்துள்ளன.

18 ஸ்டெப்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் பிரியங்கா நாராயணன் தயாரிக்கும் இப்படத்தில் பிக் பாஸ் புகழ் ராணவ், ‘சிறகடிக்க ஆசை’ தொடர் மூலம் பிரபலமான மனோஜ் ஸ்ரீதேவா, சீயானே வினோத், ஹர்ஷித் ரெட்டி ஆகிய நான்கு பேர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். நண்பர்களின் வாழ்க்கை, அவர்களுக்குள் இருக்கும் பாசம், புரிதல், காதல், மோதல் என நட்பின் பல பரிமாணங்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

‘டகால்டி’ படத்தின் நாயகி ரித்திகா சென், ‘சபாபதி’ படத்தின் நாயகி ப்ரீத்தி வர்மா, பாலிவுட் மாடல் இஷாத்தா சிங் உள்ளிட்டோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் இயக்குநர் பாண்டியராஜன், கஜராஜ், தயாரிப்பாளர் மூர்த்தி, பரிவு சக்திவேல், ஊமை விழிகள் அரவிந்ராஜ், ஆர்யன், அனுபாமா குமார், ரஞ்சனா நாச்சியார், காயத்திரி, ஹாரிஸ் மூசா, மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் சகோதரி மகன் அஸ்கர் சவுதன், சேரன்ராஜ், ஜாஷ் பாலா என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.

இப்படத்தை எம்.ஜி.ஆர். அரசு திரைப்படக் கல்லூரியில் பயின்ற இயக்குநர் ஸ்ரீ இயக்குகிறார். இது இவரது இரண்டாவது திரைப்படமாகும். இவரது முதல் திரைப்படம் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகி, விரைவில் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்பக் கலைஞர்களைப் பொறுத்தவரை படக்குழு வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. தேசிய விருது பெற்ற ‘கேப்டன் மில்லர்’ படத்தின் எடிட்டர் நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்புப் பணியை மேற்கொள்கிறார். ‘ஜிகர்தண்டா’, ‘சூது கவ்வும்’, ‘ஓநாய் ஆட்டுக்குட்டி’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ஸ்டண்ட் இயக்குநர் பில்லா ஜெகன், இப்படத்தின் சண்டைக் காட்சிகளை வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்டு வடிவமைத்துள்ளார். ‘RRR’ திரைப்படத்தில் பணியாற்றிய நடன இயக்குநர் ஹரிகிரண் நடனக் காட்சிகளை அமைத்துள்ளார். பிரன்டன் சுஷாந்த் ஒளிப்பதிவைக் கவனிக்கிறார்.

பாடல்களிலும் தனி கவனம் செலுத்தியிருக்கிறது படக்குழு. ‘பேட்ட’, ‘பீஸ்ட்’, ‘ரெமோ’, ‘பட்டாஸ்’, ‘டோரா’, ‘டக்கர்’ உள்ளிட்ட படங்களில் பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் கு. கார்த்திக் இப்படத்திற்குப் பாடல்கள் மட்டுமின்றி வசனம், திரைக்கதையையும் எழுதியுள்ளார். 80-களின் இசை ரசனையில் தொடங்கி இன்றைய இளைய தலைமுறையின் விருப்பம் வரை அனைவரையும் கவரும் வகையில் பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

‘போடா போடி’ தொடங்கி ‘காக்கும் கடவுள்’ வரை பல படங்களுக்கு இசையமைத்த தரண்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆதித்யா ஆர்கே, சாம் விஷால், விவசாயி மகன் ராவணா ராம் உள்ளிட்ட முன்னணி பாடகர்கள் பாடல்களைப் பாடியுள்ளனர். இதன் மூலம் படத்தின் அனைத்துப் பாடல் பணிகளும் நிறைவடைந்துள்ளன. படத்தின் மக்கள் தொடர்புப் பணிகளை கேப்டன் ஆனந்த் கவனிக்கிறார்.

தற்போது படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் ஒரு பாடலை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இன்றைய திரைப்படங்களில் நட்பு என்பது பெரும்பாலும் கதையின் ஒரு பகுதியாக மட்டுமே இருக்கும் நிலையில், உண்மையான நட்பின் அர்த்தத்தையும், காலம் கடந்தாலும் மாறாத நண்பர்களின் பாசத்தையும் மையமாக வைத்து இப்படம் உருவாகி வருவது இதன் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. காதல், ஆக்‌ஷன், சென்டிமென்ட், எமோஷன் என அனைத்து அம்சங்களையும் கலந்து குடும்பத்தோடும் நண்பர்களோடும் ரசிக்கும் வகையில் படத்தை உருவாக்கி வருகின்றனர்.

ஒரு காலத்தில் நம்முடன் பயணித்த நண்பனை, காலப்போக்கில் எங்கோ தொலைத்துவிட்டு மீண்டும் அவனை நினைத்துப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இந்தப் படம் ஏதோ ஒரு உணர்வைத் தரும் என்ற நம்பிக்கையுடன் படக்குழு பணியாற்றி வருகிறது. நான்கு நாயகர்களின் கூட்டணியும், நட்பை மையமாகக் கொண்ட கதைக்களமும் ரசிகர்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Four Heroes, Six Heroines and a Story of Friendship! Upcoming Tamil Film Wraps Up Its Song Works

A promising new Tamil film featuring four male leads and six female leads is gearing up to entertain audiences with a refreshing blend of friendship, romance, action, emotions and family sentiment. The film has now successfully completed its song-related work, marking an important milestone in its production journey.

Produced by Priyanka Narayanan under the banner of 18 Steps Studios, the film brings together an interesting ensemble of actors. Bigg Boss fame Ranav, Manoj Srideva, who gained popularity through the television serial Siragadikka Aasai, along with Seeyane Vinoth and Harshith Reddy, play the four lead characters. The film revolves around friendship and the unique bond shared by friends as they navigate the different phases of life.

Rithika Sen, known for Dagaalty, Preethi Varma of Sabapathy fame, and Bollywood model Ishatta Singh are among the female leads. The film also features an impressive supporting cast comprising director Pandiarajan, Gajaraj, producer Moorthy, Parivu Sakthivel, Oomai Vizhigal Aravind Raj, Aryan, Anupama Kumar, Ranjana Nachiyar, Gayathri, Harris Moosa, Askar Soudhan (nephew of Malayalam superstar Mammootty’s sister), Cheran Raj and Jash Bala, along with several other actors.

The film is directed by Sri, an alumnus of the M.G.R. Government Film and Television Training Institute. This is his second directorial venture. His debut film, starring Santhosh Prathap, is also gearing up for theatrical release soon.

The technical team is equally impressive. National Award-winning editor Nagooran Ramachandran, known for his work in Captain Miller, is handling the editing. Stunt choreographer Billa Jagan, who has worked on acclaimed films such as Jigarthanda, Soodhu Kavvum and Onaayum Aattukkuttiyum, has designed the action sequences with a distinctive approach. National Award-winning dance choreographer Harikiran, who was part of the technical team of RRR, is handling the dance choreography. Brandon Sushanth is the cinematographer.

Music is another major highlight of the project. Popular lyricist Ku. Karthik, who has penned songs for successful films including Petta, Beast, Remo, Pattas, Dora and Takkar, has contributed not only the lyrics but also the dialogues and screenplay for the film. The songs have been crafted to appeal to audiences across generations, from those who grew up enjoying the music of the 1980s to today’s Gen Z listeners.

Music composer Dharan Kumar, known for his work in films ranging from Poda Podi to Kaakkum Kadavul, has composed the music. Popular singers Adithya RK, Sam Vishal and Raavana Ram, popularly known as Vivasayi Magan, have lent their voices to the songs. With the recording and other song-related works now completed, the musical portions of the film are ready.

Captain Anand is handling the film’s public relations.

The makers are currently planning to unveil the film’s first-look poster along with one of its songs, offering audiences their first glimpse into the project.

At a time when friendship often serves as just another element in commercial cinema, this film aims to place genuine friendship and lasting emotional bonds at the centre of its narrative. With romance, action, sentiment and emotion woven into the storyline, the makers are confident of delivering an entertaining experience for audiences of all age groups.

Friendships may fade with time, distances may grow, and people may lose touch, but the memories of true friends never disappear. With this heartfelt idea at its core, the film hopes to strike an emotional chord with audiences and find a special place in their hearts.