Saturday, November 14
Shadow

காளிதாஸ் ஜெயராமின் ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’ டிசம்பர் 4-ல் திரைக்கு வருகிறது!

காளிதாஸ் ஜெயராமின் ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’ டிசம்பர் 4-ல் திரைக்கு வருகிறது!

தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் வெளியாகிறது… அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவிப்பு!

நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில், இயக்குநர் அகமது கபீர் இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’ (Many Many Happy Returns). காதல், நகைச்சுவை, நட்பு, குடும்ப உறவுகள் என அனைத்து அம்சங்களும் கலந்த ஜனரஞ்சகமான பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம், வரும் டிசம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியுடன் கூடிய போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தைத் தமிழகத்தில் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் அதன் நிறுவனர் ராகுல் வெளியிடுகிறார்.

காதல், நட்பு, குடும்ப உறவுகள் மற்றும் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத நினைவுகள் என மனித உணர்வுகளின் பல்வேறு பரிமாணங்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. அன்றாட வாழ்க்கையில் நம்மைக் கடந்து செல்லும் உறவுகள், நம் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்கள், காலத்தால் பிரிந்துவிட்டாலும் நினைவுகளில் நீங்காமல் தொடரும் மனிதர்கள், முற்றுப்பெறாத உறவுகளின் நினைவுகள் என உணர்வுப்பூர்வமான அம்சங்களுடன் நகைச்சுவை, காதல், இசை ஆகியவற்றையும் கலந்து இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் அகமது கபீர்.

இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், லட்சுமி ஜோதிஷ், லால், போபண்ணா அலும்மூடன், சஞ்சு சனிச்சென், சோசம்மா, ரஞ்சித் சேகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அகமது கபீர் மற்றும் ஹசன் ரஷீத் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். கதையை அகமது கபீர் எழுதியிருக்க, ஜாபின் ஜான் மற்றும் அகமது கபீர் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளனர்.

ஜிதின் ஸ்டானிஸ்லாஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு மகேஷ் புவனேந்த் படத்தொகுப்பு செய்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். விஷ்ணு கோவிந்த் ஒலிப்பதிவுப் பணிகளையும், மஷர் ஹம்சா ஆடை வடிவமைப்புப் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். ரோனெக்ஸ் சேவியர் ஒப்பனைப் பணிகளைக் கவனித்துள்ளார். அனு விஸ்வநாதன் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

ஏற்கெனவே ‘ஜூன்’ (2019), ‘மதுரம்’ (2021) ஆகிய திரைப்படங்களை இயக்கிய அகமது கபீர், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான ‘கேரளா கிரைம் ஃபைல்ஸ்’ இணையத் தொடரின் முதல் மற்றும் இரண்டாவது சீசன்களையும் இயக்கியுள்ளார். இந்த வரிசையில், தற்போது ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் மூலம் காதல், நட்பு, குடும்ப உறவுகள் மற்றும் மலரும் நினைவுகளை மையமாகக் கொண்ட வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கத் தயாராகியுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் தயாரிப்பு மற்றும் திரைப்பட விநியோகப் பணிகளில் ஈடுபட்டு வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், இப்படத்தைத் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.

காதலும் நகைச்சுவையும் உணர்வுகளும் கலந்த ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

Kalidas Jayaram’s ‘Many Many Happy Returns’ Set for December 4 Release!

The makers unveil the official poster, confirming the film’s theatrical release in Tamil and Malayalam.

Actor Kalidas Jayaram’s upcoming film, Many Many Happy Returns, directed by Ahmed Kabir, is all set to hit theatres on December 4. Blending romance, humour and emotions, the film promises an engaging cinematic experience centred on love, friendship and family relationships. The makers have officially announced the release date with the unveiling of the film’s poster.

The film will be released in both Tamil and Malayalam. Romeo Pictures, headed by Rahul, will handle the film’s distribution across Tamil Nadu.

Exploring the many dimensions of human relationships, Many Many Happy Returns revolves around love, friendship, family bonds and the cherished memories that remain with us throughout life. The film beautifully captures the impact of relationships on our everyday lives, along with the memories of people who may have drifted away but continue to remain close to our hearts. It also explores unfinished chapters and relationships that live on through memories. Blending these emotional elements with romance, humour and music, the film promises a heartwarming narrative.

The film features Kalidas Jayaram, Lakshmi Jyothish, Lal, Bopanna Alummoodan, Sanju Sanichen, Sosamma and Renjith Shekar in prominent roles.

The project is jointly produced by Ahmed Kabir and Hassan Rasheed. The story is written by Ahmed Kabir, while the screenplay has been jointly penned by Jabin Jan and Ahmed Kabir.

Jithin Stanislaus is handling the cinematography, with Mahesh Bhuvanend in charge of editing. The music is composed by Govind Vasantha. Vishnu Govind is responsible for sound recording, while Mashar Hamsa handles costume design. Ronex Xavier is the makeup artist, and Anu Viswanathan has choreographed the dance sequences.

Ahmed Kabir, who previously directed films such as June (2019) and Madhuram (2021), has also directed the first and second seasons of the JioHotstar web series Kerala Crime Files. With Many Many Happy Returns, the filmmaker is set to explore the world of romance, friendship, family bonds and nostalgia through an entertaining romantic comedy.

Romeo Pictures, a prominent production and distribution banner in the Tamil film industry, is bringing the film to audiences across Tamil Nadu. Headed by Rahul, the company will oversee the film’s Tamil Nadu theatrical release.

With its blend of romance, humour and heartfelt emotions, Many Many Happy Returns is scheduled to arrive in theatres on December 4 in both Tamil and Malayalam.