Saturday, November 14
Shadow

வில்லனாக கவனம் ஈர்த்த அஜித் விக்னேஷ்… இனி ஹீரோ அவதாரம்! இரண்டு படங்களில் கதாநாயகனாக ஒப்பந்தம்!

வில்லனாக கவனம் ஈர்த்த அஜித் விக்னேஷ்… இனி ஹீரோ அவதாரம்! இரண்டு படங்களில் கதாநாயகனாக ஒப்பந்தம்!

தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற இலக்குடன் தொடர்ந்து பயணித்து வரும் இளம் நடிகர் அஜித் விக்னேஷ், தற்போது ‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளார். படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், கதாநாயகனுக்கு இணையாக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் தனது நடிப்பால் தனி முத்திரை பதித்துள்ளார். இதையடுத்து அவருக்கு அடுத்தடுத்து புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.

மதுரையைச் சேர்ந்த அஜித் விக்னேஷுக்கு சிறு வயது முதலே சினிமா மீது ஆர்வம் இருந்துள்ளது. சென்னையில் உள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர், தனது படிப்பைத் தாண்டி சினிமா கனவுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரையுலகில் நுழைந்தார். நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் சிலம்பம், பாக்ஸிங் உள்ளிட்ட தற்காப்புக் கலைகளிலும் பயிற்சி பெற்றுள்ளார். முறையான நடிப்புப் பயிற்சியும் மேற்கொண்ட அவர், ஆரம்பத்தில் கிடைத்த சிறிய வாய்ப்புகளைக்கூட தனது திறமையை வெளிப்படுத்துவதற்கான களமாகப் பயன்படுத்திக்கொண்டார்.

இதன் பலனாக இதுவரை 40 முதல் 50-க்கும் மேற்பட்ட குறும்படங்களில் நடித்துள்ளார். குறும்படங்கள் மூலம் தனது நடிப்பை மெருகேற்றிக்கொண்ட அவருக்கு, விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மறைந்த நடிகர் விவேக் அளித்த ஊக்கமும், அவர் மூலமாகக் கிடைத்த அந்த வாய்ப்பும் அஜித் விக்னேஷின் திரைப்பயணத்தில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.

‘பிகில்’ படத்தில் நடித்தபோது அவரது நடிப்பைப் பார்த்து இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டியது மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது. தொடர்ந்து ‘தமிழ் ராக்கர்ஸ்’ இணையத் தொடரிலும் நடித்த அவர், தற்போது ‘பிளாக் கோல்டு’ படத்தின் மூலம் தனது நடிப்புத் திறனை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அஜித் விக்னேஷ் பேசுகையில், சினிமா மீதான ஆர்வத்தால் கல்லூரிப் பருவத்திலேயே சென்னைக்கு வந்ததாகவும், ஆரம்பத்தில் கிடைத்த சிறிய வாய்ப்புகளையும் தவறவிடாமல் பயன்படுத்திக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். குறும்படங்களில் நடித்த அனுபவம் தனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுத்ததாகக் குறிப்பிட்ட அவர், விவேக் மூலமாக ‘பிகில்’ படத்தில் கிடைத்த வாய்ப்பு தனது பயணத்தில் மறக்க முடியாத ஒன்று என்றும் கூறியுள்ளார்.

மேலும், ‘பிகில்’ படத்தில் தனது நடிப்பை வெற்றிமாறன் பாராட்டியது மிகப்பெரிய நம்பிக்கையை அளித்ததாகவும், தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகள் தன்னை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது ரசிகர்கள் தன்னை அடையாளம் கண்டு பாராட்டுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, அஜித் விக்னேஷின் அடுத்தகட்டப் பயணம் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. இதுவரை வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், தற்போது இரண்டு திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் கிடைத்தாலும் அதற்கேற்பத் தயாராகி நடிக்க விரும்புவதாகக் கூறும் அஜித் விக்னேஷ், வழக்கமான கதைகளைவிட வித்தியாசமான கதைகளிலும் சவாலான கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஒரு பொறியியல் பட்டதாரியாகத் தொடங்கி, குறும்படங்கள் வழியாகத் தனது நடிப்புத் திறனை வளர்த்து, ‘பிகில்’, ‘தமிழ் ராக்கர்ஸ்’, ‘பிளாக் கோல்டு’ எனப் படிப்படியாகத் திரையில் வளர்ந்து வந்துள்ள அஜித் விக்னேஷுக்கு இப்போது கதாநாயகனாகும் வாய்ப்புகளும் தேடி வந்துள்ளன. வில்லனாகத் தனது இருப்பை உணர்த்தியவர், ஹீரோவாக எந்த மாதிரியான கதைகளைத் தேர்வு செய்யப் போகிறார் என்பதுதான் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்பார்ப்பு. விரைவில் வெளியாகவுள்ள அவரது புதிய பட அறிவிப்புகள் இந்த எதிர்பார்ப்புக்கு விடை கொடுக்கும் என நம்பலாம்.

Ajith Vignesh Makes a Mark as a Villain in Black Gold; Set to Play Lead Roles in Two Upcoming Films!

Young actor Ajith Vignesh, who has been steadily working towards establishing his identity in the Tamil film industry, is now gaining attention for his performance in the recently released film Black Gold. Although he appears in a negative role, his character carries considerable weight in the story. His screen presence and performance have earned him appreciation from audiences, making him one of the performers to watch out for.

Hailing from Madurai, Ajith Vignesh developed a passion for cinema during his college days. He completed his Civil Engineering degree at Sri Sairam Engineering College in Chennai. However, driven by his interest in acting, he decided to pursue his dream of becoming an actor and entered the film industry.

Alongside acting, he trained in traditional martial arts such as Silambam and boxing. He also underwent professional acting training to improve his skills. Rather than waiting for major opportunities, he made use of every small opportunity that came his way. As part of his journey, he has acted in more than 40 to 50 short films, gaining valuable experience and confidence as a performer.

His efforts eventually opened the doors to mainstream cinema, with an opportunity to act in Vijay’s Bigil. The opportunity came through the late actor Vivek, who noticed Ajith Vignesh’s acting talent and encouraged him by helping him secure a role in the film. This became an important milestone in his career.

Ajith Vignesh also received appreciation from acclaimed filmmaker Vetrimaaran for his performance in Bigil, which further motivated him to pursue acting with greater confidence. He subsequently appeared in the web series Tamil Rockerz and has now attracted attention once again through his performance in Black Gold.

Speaking about his journey, Ajith Vignesh said that his interest in cinema began during his college days and that he moved to Chennai with the ambition of becoming an actor. He explained that he was always willing to take up even small roles, believing that every opportunity would help him improve as a performer.

He also recalled how the late actor Vivek helped him get an opportunity in Bigil after appreciating his acting. The appreciation he received from Vetrimaaran for his performance in the film was another major source of encouragement. He added that his journey, which began with Bigil and continued through Tamil Rockerz, has now reached another important stage with Black Gold. The recognition and appreciation he receives from audiences today bring him immense happiness.

Interestingly, Ajith Vignesh is now preparing for an exciting new phase in his career. The actor has revealed that he has signed two films as a lead hero. Official announcements regarding both projects are expected to be made soon.

Expressing his aspirations, he said that he wants to explore a variety of challenging roles and establish a distinct identity for himself in the industry. He is also keen to take up different kinds of characters and prepare himself according to the demands of each role. He is currently looking forward to working on promising scripts and characters that will offer him opportunities to showcase his versatility.

From making his beginnings in short films to appearing in Bigil, Tamil Rockerz and Black Gold, Ajith Vignesh has gradually built his career through determination and consistent effort. Having made an impression with his negative role, he is now ready to take on the responsibility of leading films as a hero.

With two projects already signed, expectations are building around his upcoming announcements. It remains to be seen what kind of stories and characters he will choose for his debut as a lead actor. His journey from short-film performer to a promising face in Tamil cinema marks an encouraging new chapter in his career.