Thursday, November 19
Shadow

ராம் நிதின் ஜோடியாக பிராத்தனா நாதன், தேஜு அஸ்வினி! தெலுங்கு – தமிழில் உருவாகும் புதிய காதல் படம்!

ராம் நிதின் ஜோடியாக பிராத்தனா நாதன், தேஜு அஸ்வினி! தெலுங்கு – தமிழில் உருவாகும் புதிய காதல் படம்!

‘பார்க்கிங்’ படத்தைத் தயாரித்த சோல்ஜர்ஸ் ஃபேக்டரி – ரெடாக்டட் ஸ்டுடியோஸ் இணையும் புதிய முயற்சி; வெங்கட் பிரபுவிடம் பணியாற்றிய கார்த்திக் ஜெய் பழனி இயக்குநராக அறிமுகம்!

தெலுங்குத் திரையுலகில் ‘MAD’, ‘MAD Square’ படங்களின் மூலம் இளம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நடிகர் ராம் நிதின், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் புதிய காதல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் மூலம் கார்த்திக் ஜெய் பழனி இயக்குநராக அறிமுகமாகிறார். வெங்கட் பிரபுவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், தனது முதல் படத்திலேயே இரு மொழி ரசிகர்களைக் குறிவைத்துக் களமிறங்குகிறார்.

இப்படத்தில் பிராத்தனா நாதன் மற்றும் தேஜு அஸ்வினி என இருவர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ‘பார்க்கிங்’, ‘TTT’ உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்த பிராத்தனா நாதன், தற்போது ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘நின்ஜா’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதேபோல், ‘என்ன சொல்லப் போகிறாய்’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற தேஜு அஸ்வினி, அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்தப் புதிய திரைப்படத்தை, தேசிய விருது பெற்ற ‘பார்க்கிங்’ படத்தைத் தயாரித்த சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனமும், ரெடாக்டட் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. இயக்குநராக இருந்து தயாரிப்பாளராக மாறிய கே.எஸ். சினிஷ் தொடங்கிய சோல்ஜர்ஸ் ஃபேக்டரி, வித்தியாசமான கதைகளைக் கொண்ட திரைப்படங்களைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘பார்க்கிங்’ திரைப்படம் மூன்று தேசிய விருதுகளைப் பெற்றது இந்நிறுவனத்தின் முக்கியமான சாதனையாகும். இதுதவிர, சத்யா, சந்தீப் கிஷன் நடித்த தெலுங்குப் படமான ‘விவாஹ போஜனம்பு’, சந்தானம் நடித்த ‘டிக்கிலோனா’ உள்ளிட்ட படங்களையும் இந்நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’, ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘நின்ஜா’ உள்ளிட்ட படங்களையும் தயாரித்து வருகிறது.

மறுபுறம், சஞ்சன் ஜி. தொடங்கிய ரெடாக்டட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படத் தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகிறது. ‘சூப்பர் ஹீரோ’, ‘ஃபேமிலி ட்ரிப்’ உள்ளிட்ட படங்களுடன், ஜெயராம் – சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய படத்தையும் தயாரித்து வருகிறது. தற்போது சோல்ஜர்ஸ் ஃபேக்டரியுடன் கைகோர்த்திருப்பதன் மூலம் தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பிலும் இந்நிறுவனம் தனது பயணத்தைத் தொடங்குகிறது.

இந்தக் கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் கே.எஸ். சினிஷ், “எங்களின் அடுத்த தெலுங்கு – தமிழ் திரைப்படத்திற்காக ரெடாக்டட் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. திறமையான நடிகர்கள் மற்றும் புதிய படைப்பாற்றல் கொண்ட தொழில்நுட்பக் குழுவினருடன் இணைந்து ஒரு சுவாரஸ்யமான காதல் கதையை உருவாக்கவிருக்கிறோம்.

புதிய திறமைகள், புதுமையான சிந்தனைகள் மற்றும் சினிமா மீதான ஆர்வம் கொண்டவர்களுடன் இணைந்து பணியாற்றுவதை எப்போதும் விரும்புகிறோம். இந்தப் படத்திற்காகச் சிறந்த குழுவை ஒன்றிணைத்திருப்பதில் மகிழ்ச்சி. எங்களின் பயணத்தில் இது மற்றுமொரு உற்சாகமான தொடக்கம். பல்வேறு மொழிகளில் இன்னும் பல சுவாரஸ்யமான கதைகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க ஆவலாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகும் இப்படம், காதலை மையமாகக் கொண்ட கதையுடன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகவுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படம் தற்போது ‘புரொடக்ஷன் நம்பர் 7’ என்று அழைக்கப்படுகிறது. படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு, மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ram Nitin Teams Up with Prathana Nathan and Teju Ashwini for a New Telugu-Tamil Romantic Entertainer!

‘Parking’ fame Soldiers Factory joins hands with Redacted Studios for a bilingual venture; Karthikk Jai Palani, who previously worked with Venkat Prabhu, makes his directorial debut!

Young Telugu actor Ram Nitin, who gained popularity among audiences through the successful films ‘MAD’ and ‘MAD Square’, is all set to headline a new Telugu-Tamil bilingual film. The project marks the directorial debut of Karthikk Jai Palani, who previously worked as an associate director with filmmaker Venkat Prabhu.

Prathana Nathan and Teju Ashwini have been roped in as the female leads, bringing together an interesting young cast for this romantic entertainer.

Prathana Nathan, who earned recognition for her performances in films such as ‘Parking’ and ‘TTT’, is currently playing the female lead in the upcoming film ‘Ninja’, starring GV Prakash Kumar. Teju Ashwini, who caught the audience’s attention with her performance in ‘Enna Solla Pogirai’, will next be seen playing the female lead in ‘Super Hero’, starring Arjun Das.

The film is being jointly produced by Soldiers Factory, the production house behind the National Award-winning film ‘Parking’, and Redacted Studios. Founded by director-turned-producer KS Sinish, Soldiers Factory has established itself by backing films with distinctive storylines and interesting concepts.

The production house earned widespread recognition with ‘Parking’, which won three National Film Awards. Its previous productions also include the Telugu film ‘Vivaha Bhojanambu’, featuring Satya and Sundeep Kishan, and Santhanam’s comedy entertainer ‘Dikkiloona’. The banner currently has several interesting projects in the pipeline, including ‘Super Hero’, starring Arjun Das, and ‘Ninja’, featuring GV Prakash Kumar.

Meanwhile, Redacted Studios, founded by Shanjan G., has been actively involved in producing films across Tamil and Malayalam cinema. Its upcoming projects include ‘Super Hero’, ‘Family Trip’ and a yet-to-be-titled film featuring Jayaram and Simran. Its association with Soldiers Factory marks the production house’s entry into Telugu cinema, opening up new opportunities in the Telugu film industry.

Speaking about the collaboration, producer KS Sinish said:

“We are happy to announce our association with Redacted Studios for our next Telugu-Tamil production. This is an exciting love story that brings together a promising cast and a fresh team of talent.

At Soldiers Factory, we have always welcomed fresh talent, new ideas and collaborations with people who share our passion for cinema. We are delighted to bring this team together and look forward to creating something special.

This is another exciting beginning for us, and we look forward to bringing many more interesting stories to audiences across languages.”

The upcoming film is being simultaneously made in Telugu and Tamil. Centred around a romantic storyline, the film is expected to blend romance with all the essential commercial elements to appeal to audiences across both languages.

Currently referred to as ‘Production No. 7’, the film is yet to receive an official title. Further details regarding the title, additional cast members and the technical crew are expected to be announced soon.

With a promising young cast, a debutant director and two production houses coming together, the project has already generated curiosity among film enthusiasts.