
விஜய்க்கு மிக பெரிய வெற்றி படம் என்றால் அது போக்கிரி படம் என்று தான் சொல்லணும் விஜய்யின் குறிப்பிட்ட சில மிக பிரமாண்டம் மட்டும் இல்லாமல் அனைவராலும் மிகவும் கவர்ந்த பட பட்டியலில் அதவாது கமர்சியல் படங்களில் கில்லி அதுக்கு அடுத்து படம் என்றால் அது போக்கிரி இந்த இரண்டு படங்கள் தான் விஜய்யின் மார்க்கெட் மிக பெரிய அந்தஸ்தை கொடுத்த படம் என்று சொன்னால் மிகையாகது.
சமீபத்தில் அதிக படங்கள் இரண்டாம் பாகம் வந்து கொண்டு இருக்கிறது குறிப்பாக பழைய வெற்றி படங்களை தூசு தட்ட ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் இதுவரை இரண்டாம் பாகம் என்று விஜய்க்கு ஒரு படங்கள் அறிவிப்பு கூட இது வரை வந்தது இல்லை அந்த பெயரை அழிக்க போக்கிரி இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
விஜய், அசின் நடித்து தமிழில் சூப்பர் ஹிட்டான படம், ‘போக்கிரி’. பிரபுதேவா இயக்கியிருந்த இந்தப் படம் தெலுங்கில் வெளியான போக்கிரி படத்தின் ரீமேக். இந்த போக்கிரியை இந்தியில் வான்டட்’ என்ற பெயரில் ரீமேக் செய்து இயக்கினார் பிரபுதேவா சல்மான்கான் ஹீரோவாக நடித்திருந்த இந்தப்படம் அங்கும் சூப்பர் ஹிட் போனி கபூர் தயாரித்திருந்தார்.
இதனை அடுத்து அண்மையில் சல்மான் கான், போக்கிரியின் இரண்டாம் பாக கதையோடு வருமாறு பிரபுதேவாவிடம் கேட்டிருப்பதாகவும் அவர் கதை தேடிவருவதாகவும் கூறப்படுகிறது. அப்படி இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டால் தமிழிலும் எடுக்கப்படும் என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு இதன் அதிகாரபூர்வ தகவலுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள்
