Saturday, April 18
Shadow

அம்மா வேடத்தில் இருந்து பாட்டியாக ப்ரோமோஷன் வாங்கிய சரண்யா

தமிழ் சினிமாவின் மிக சிறந்த நடிகை என்ற பெயர் தன் முதல் படத்திலே எடுத்தவர் என்று சொன்னால் மிகையாது என்று சொல்லலாம். காரணம் இவர் மணிரத்தினம் கண்டுபிடிப்பு மட்டும் என்பதால் இல்லை முதல் படம் நாயகனில் கமல்ஹாசனுக்கு ஈடுகொடுத்து பேர் வாங்கின நடிகை அது மட்டும் இல்லை இவர் நடித்த பல படங்கள் சொல்லலாம் மனசுக்குள் மத்தாப்பு போன்ற படங்கள் எடுத்துகாட்டு என்று சொல்லலாம்.

திருமணத்துக்கு பின் சிறுது நாள் கழித்து நடிக்க ஆரமிபித்த சரண்யா முழுக்க முழுக்க அம்மா வேடத்தில் களம் இறங்கினார் அதிலும் மிக பெரிய வெற்றி எல்லா முக்கிய ஹீரோகளுக்கு அம்மாவாக நடித்த பெருமை உள்ள நடிகையும் என்று சொல்லலாம் இவர் நடிக்கும் அம்மா பாத்திரங்கள் பலருக்கு இது போல ஒரு அம்மா நமக்கு கிடக்க மாட்டார்களா என்று ரசிகர்களை ஏங்க வைத்த அம்மா என்று தான் சொல்லணும்

களவாணி படத்திற்கு பிறகு முன்னணி அம்மா நடிகையாகி விட்டார். தென்மேற்கு பருவக்காற்று படத்தில் அம்மா வேடத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றார். என்றாலும், சமீபகாலமாக ராதிகா, ஊர்வசி, ரம்யாகிருஷ்ணன், பானுப்பிரியா உள்ளிட்ட பல நடிகைகள் அம்மா வேடங்களில் மறுபிரவேசம் செய்திருப்பதால் சரண்யாவின் மார்க்கெட் டல்லடித்து வருகிறது. என்றாலும், கைவசம் பல படங்கள் வைத்திருக்கிறார்.

இதில், இட்லி என்றொரு படத்தில் அவர் அம்மா வேடத்தில் இருந்து மாறி பாட்டியாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவருடன் கோவை சரளா, கல்பனா ஆகியோரும் பாட்டியாகவே நடித்துள்ளனர். கதைப்படி, சரண்யாவின் பேத்தி ஒரு பெரிய பிரச்சினையில் சிக்கிக்கொள்ள அவரை எப்படி அதிலிருந்து மீட்கிறார் சரண்யா என்பதுதான் கதையாம். ஆக, கதையின் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரண்யா, இந்த படம் மறுபடியும் தனது மார்க்கெட்டில் பரபரப்பு கூட்டும் என்று எதிர்பார்க்கிறார்.

Leave a Reply