Wednesday, June 24
Shadow

ஒரு போட்டியை பார்க்க கிளம்பிய நண்பர்கள்… வாழ்க்கையை மாற்றிய பயணம்! – ZEE5-ல் வரும் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’

ஒரு போட்டியை பார்க்க கிளம்பிய நண்பர்கள்… வாழ்க்கையை மாற்றிய பயணம்! – ZEE5-ல் வரும் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’

சென்னை:

தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு தெருவிலும் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு அல்ல; அது ஒரு உணர்வு, ஒரு கனவு, ஒரு தலைமுறையின் நினைவு. அந்த உணர்வை மையமாக வைத்து உருவாகியுள்ள புதிய தமிழ் வெப் தொடர் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’, வரும் ஜூன் 26 முதல் ZEE5 தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.

இயக்குநர் சவிர் சுதாகர் இயக்கத்தில், எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்த ஆறு அத்தியாய தொடர், கிரிக்கெட் ரசிகர்களின் வாழ்க்கையில் நிகழும் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை திரையில் பதிவு செய்கிறது.

ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த நண்பர்கள் குழு, தங்களது அபிமான கிரிக்கெட் நட்சத்திரத்தின் கடைசி போட்டியை நேரில் காண வேண்டும் என்ற ஒரே ஆசையுடன் சென்னை நோக்கி பயணிக்கிறார்கள். ஆனால் அவர்கள் நினைத்ததை விட அந்தப் பயணம் பல மடங்கு சுவாரஸ்யமாகவும், உணர்வுபூர்வமாகவும் மாறுகிறது. நட்பு, நம்பிக்கை, சவால்கள், ஏமாற்றங்கள், மகிழ்ச்சி என வாழ்க்கையின் பல வண்ணங்களை சந்திக்கும் அவர்கள், இறுதியில் இலக்கை அடைவதை விட பயணமே எவ்வளவு முக்கியம் என்பதை உணர்கிறார்கள்.

இந்த தொடரில் வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட பாலமுரளி, ஜகபர் சாதிக், நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிராமத்து இளைஞர்களின் இயல்பான வாழ்க்கை, கிரிக்கெட்டின் மீதான அவர்களின் தீவிர ஈடுபாடு மற்றும் நண்பர்களுக்கிடையேயான உறவு ஆகியவை யதார்த்தமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஒளிப்பதிவாளர் பி.எம். ராஜ்குமார், படத்தொகுப்பாளர் பவித்ரன் மற்றும் கலை இயக்குநர் தமிழ்செல்வன் BFA ஆகியோரின் பங்களிப்பு தொடருக்கு தனித்துவமான காட்சியமைப்பை வழங்கியுள்ளது.

இந்த தொடரைப் பற்றி ZEE5 தமிழ் மற்றும் மலையாளத்தின் மூத்த துணைத் தலைவர் மற்றும் வணிகத் தலைவர் லாயிட் சேவியர் கூறுகையில், “இந்தியாவில் கிரிக்கெட் என்பது மக்களின் வாழ்க்கையோடு கலந்த உணர்வு. அந்த உணர்வையும் ரசிகர்களின் அர்ப்பணிப்பையும் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ மிகவும் இயல்பாக பிரதிபலிக்கிறது. அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் இந்த தொடர் கவரும் என்று நம்புகிறோம்” என்றார்.

இயக்குநர் சவிர் சுதாகர் கூறுகையில், “தங்களது ஹீரோக்களை நேரில் பார்க்க வேண்டும் என்று கனவு காணும் ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகரின் மனநிலையையும் இந்த தொடரில் பதிவு செய்துள்ளோம். கிரிக்கெட்டைத் தாண்டி, நட்பு மற்றும் வாழ்க்கைப் பயணத்தின் அழகை பேசும் கதையாக இது இருக்கும்” என்றார்.

கிரிக்கெட் ரசிகர்களின் ஆர்வம், நண்பர்களின் பாசம் மற்றும் வாழ்க்கைப் பயணத்தின் மறக்க முடியாத தருணங்களை ஒருங்கே சொல்ல வரும் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’, ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது.

டிரெய்லர் லிங்க்:

 

 

A Journey Fueled by Cricket, Friendship, and Dreams: Mammattiyan Stars to Stream on ZEE5 from June 26

Chennai:

In Tamil Nadu, cricket is more than just a sport—it is an emotion that unites generations, communities, and countless dreams. Capturing this spirit on screen, ZEE5 is all set to premiere its upcoming Tamil original sports drama series, Mammattiyan Stars, on June 26.

Directed by Savir Sudhakar and produced by Singaravelan under the banner of SS Group, the six-episode series is a heartfelt tribute to cricket fans and the extraordinary lengths they go to in pursuit of their passion.

At the heart of Mammattiyan Stars is a group of die-hard cricket enthusiasts from a small village who embark on a memorable journey to Chennai to witness the final match of their beloved cricket hero. What begins as a dream trip soon transforms into an emotional adventure filled with friendship, unexpected challenges, laughter, heartbreak, and life-changing experiences. Along the way, they discover that sometimes the journey itself becomes more meaningful than the destination.

The series features an ensemble cast including Vaibhav Murugesan, Lavanya Anbazhagan, Venkata Balamurali, Jagabar Sadik, Naan Kadavul Rajendran, and Vivek Prasanna in pivotal roles. Through relatable characters and authentic storytelling, the series beautifully reflects the passion for cricket that runs deep across Tamil Nadu.

The technical team includes cinematographer P.M. Rajkumar, editor Pavithran, and art director Tamizhselvan BFA, whose contributions bring the vibrant world of the series to life.

Speaking about the series, Lloyd Xavier, Senior Vice President and Business Head – South, ZEE5 Tamil & Malayalam, said, “In India, cricket is much more than a sport—it is an emotion that connects people across generations. Mammattiyan Stars captures the unwavering passion of fans and the lengths they go to experience a once-in-a-lifetime moment. We believe this heartfelt story will resonate with audiences not only in Tamil Nadu but far beyond.”

Director Savir Sudhakar added, “This series is a tribute to every cricket fan who has dreamt of watching their heroes play live. While cricket forms the backdrop, the heart of Mammattiyan Stars lies in its themes of friendship, aspirations, and the unforgettable experiences that shape our lives. We wanted to tell an honest, emotional, and celebratory story, and we are excited to share it with audiences through ZEE5.”

Blending friendship, emotions, adventure, and the undying spirit of cricket fandom, Mammattiyan Stars promises an engaging and heartwarming viewing experience when it premieres exclusively on ZEE5 on June 26.

Trailer: