Saturday, April 18
Shadow

ஸ்டன்ட் மாஸ்டராக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் – பிரபுதேவா

வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன்,கே.எஸ்.சிவராமன் தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “ ஒரு பக்க கதை “ படத்தை தயாரித்து வருகிறார்கள் அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதை தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடிக்கும் “ ஓடி ஓடி உழைக்கனும் “ படத்தையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது….இதை தொடர்ந்து பிரபுதேவா நாயகனாக நடிக்கும்

“ எங் மங் சங் “ படத்தையும் தயாரிக்கிறார்கள். தேவி வெற்றிப் படத்திற்கு பிறகு பிரபுதேவா நடிக்கும் படம் இது.. கதாநாயகியாக லஷ்மிமேனன் நடிக்கிறார்.

மற்றும் தங்கர்பச்சான், சித்ராலட்சுமணன், கே.ராஜன், R.j. பாலாஜி,பாகுபலி பிரபாகர் ( கலக்கேயா), கும்கி அஸ்வின், நாகேந்திரபிரசாத், முனீஸ்காந்த், காளி வெங்கட், மாரிமுத்து ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ஆர்.பி.குருதேவ் ( இவர் காஞ்சனா 2, யோகி போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர்.இந்த படத்துக்கு சமீபத்தில் பல குத்து பாடல்களை கொடுத்து வெற்றி பெற்ற மொட்ட சிவா கெட்ட சிவா இசையமைப்பாளர் அம்ரீஷ் தான் இசையமைக்கிறார். இந்த படத்தின் இயக்குனர் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் – எம்.எஸ்.அர்ஜுன்.

நடிகரும், இயக்குனருமான பிரபுதேவா ஆரம்ப காலத்தில் டான்ஸ் மாஸ்டராக கொடி கட்டியவர். அதற்கு பிறகு நடிகராகவும், இயக்குனராகவும் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார்.
டான்ஸ் மாஸ்டரான பிரபுதேவா, ஸ்டன்ட் மாஸ்டராக அதாவது குங்பூ சண்டை பயிற்சியாளராக நடிக்கும் படம் “ எங் மங் சங் “ முழுக்க முழுக்க காமெடி கலக்கல் படமான “ எங் மங் சங் “ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

Leave a Reply