Tuesday, October 27
Shadow

விவேகம் படத்தை தொடர்ந்து அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா ?

அஜித் தற்போது `சிறுத்தை’ சிவா இயக்கத்தில் `விவேகம்’ படத்தில் நடித்து வருகிறார். இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள `விவேகம்’ படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

சமீபத்தில் வெளியான `விவேகம்’ படத்தின் டீசர், ரசிகர்களால் மிகவும் விரும்பி பார்த்தனர் இதனால் பல் வேறு சாதனைகள் நிகழ்த்தியது டிசர். இந்நிலையில் படம் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது.
`விவேகம்’ படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த படம் குறித்த பரபரப்பில் அவரது ரசிகர்கள் தீவிரமாக இருக்கின்றனர். அதன்படி அஜித் அவரது அடுத்த படத்தில் சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக மீண்டும் இணைய இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த படத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் அஜித் தற்போது `விவேகம்’ படத்தின் டப்பிங் பணிகளில் தீவிரமாக ஈடுபட இருப்பதாகவும், தனது அடுத்த படம் குறித்து அவர் இன்னமும் யோசிக்கவில்லை என்று அஜித்துக்கு நெருங்கிய வட்டாரத்தில் இருந்த வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply