Sunday, April 19
Shadow

அஜித்தின் விவேகம் ஆங்கில படத்தின் தழுவலா?

தமிழ் சினிமாவில் பாகுபலி 2க்கு பிறகு மிகவும் பர பரப்பாக இருப்பது என்றால் அது விவேகம் படத்தின் டிசர் என்று தான் சொல்லணும் பல சாதனைகள் புரிந்த இந்த டிசர், ஒரு சிலர் இந்த டிசரை பார்த்து ஆங்கில படம் போல இருக்கு என்று பலர் தெரிவித்தனர் ஒரு சிலர் இது எதோ ஆங்கில படத்தின் தழுவல் என்றும் சொன்னார்கள். இப்போது ஒரு சிலர் இது உறுதியாக ஆங்கில படத்தின் தழுவல் என்று ஆணித்தரமாக சொல்லுகிறார்கள்.

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் விவேகம்.

இப்படத்தில்முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில் வில்லனாக விவேக் ஓபராய் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், விவேகம் படம் ஹாலிவுட்டில் வெளியான Bourne series படத்தை போல் இருக்கும் என கூறினார்.

இப்போது டீசரை மறுபடியும் பார்த்தால் Bourne படங்களின் தழுவலில்தான் விவேகம் உருவாகி வருவது அப்பட்டமாக தெரிகிறது. என்று சிலர் கிசுக்கிறார்கள் படம் வந்த பிறகு தான் எல்லாம் உண்மையும் தெரியும் என்பது நம் கருத்து

Leave a Reply