Wednesday, October 28
Shadow

நான் சினிமாவை விட்டு விலகுகிறேன் கமல்ஹாசன் அதிரடி

மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பினால் தென்னிந்திய திரைப்படங்கள் பாதிக்கப்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொழுதுபோக்கு மற்றும் திரைப்படங்களுக்கு 28 % வரியை விதித்துள்ளது.

இதனால் மத்திய அரசிடம் சினிமா துறையினர் வரி விதிப்பை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கமல் ஹாசன் கூறியதாவது, ” மத்திய அரசு திரைப்படங்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்கவில்லை என்றால் நான் சினிமாவை விட்டே விலகி விடுவேன் என கூறியுள்ளார்.
இது அவரது ரசிகர்களையும் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தென்னிந்திய வர்த்தக சபையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது கமல்ஹாசன் சொன்னது:

❣சினிமா சூதாட்டம் போன்றது அல்ல, சினிமா என்பது கலை. ஹாலிவுட் படத்திற்கு நிகராக இந்திய சினிமாவுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது என்பது சரியானது கிடையாது

❣புதிதாக அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி வரி திரைப்பட தயாரிப்புக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்க உள்ளதாக அறிய வருகிறோம்.

❣ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு வரி என்ற அடிப்படையில் திரைத்துறைக்கு ஒரே மாதிரியான வரியை கொண்டு வருவது சரியானதாக இருக்காது.

❣இந்தி சினிமாவுக்கு இணையாக பிராந்திய மொழி படங்களுக்கு வரி விதிப்பது என்பது கட்டுப்படியாகாத ஒன்றாகும்.

❣இந்தி மொழி திரைப்படங்களுக்கு சந்தை வேறு, பிராந்திய மொழி படங்களுக்கான சந்தை வேறு. மேலும் சூதாட்ட விடுதிகளுக்கும் 28 % வரி திரைப்படங்களுக்கும் 28% வரி என்பதை எப்படி ஏற்பது.

❣திரைப்படத்துறையினரின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். சினிமா டிக்கெட்டிற்கு 28% வரி விதிக்கும் முடிவை கைவிட அரசு பரிசீலிக்க வேண்டும்

❣28% ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தினால் சினிமாவை விட்டு விலகுவதை தவிர வேறு வழியில்லை, இந்தி திரையுலகம் ஜிஎஸ்டி வரியை ஏற்றாலும் நாங்கள் ஏற்க மாட்டோம் .

Leave a Reply