Monday, April 20
Shadow

பணத்தால் ஏற்படும் தீமைகளை சொல்லும் படம் தான் சாட்டை அன்பழகனின் ‘ருபாய்’

இயக்குநர் பிரபு சாலமனின் “காட் பிக்சர்ஸ்” தயாரிப்பில் சாட்டை பட இயக்குநர் அன்பழகனின் இயக்கத்தில் கயல் சந்திரன் மற்றும் ஆனந்தியின் நடிப்பில் “ரூபாய்” என்கிற படம் வரும் ஜூன் மாதம் 2017’ல் வெளியாகிறது.

இந்த படத்தை “ஜெ.கே. கிரியேஷன்ஸ்” தயாரிப்பாளர் ஜெ.ஜெயகிருஷ்ணன் மற்றும் ஆர்.பி.கே. எண்டெர்டெய்ன்மண்ட் இணைந்து தமிழகம் முழுவதும் வெளியிடுகின்றனர். இப்படத்திற்கு வெற்றி வரிசையில் உள்ள இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியான நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற, இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் படத்தின் இசை உரிமையானது முன்னரே ஒரு சிறந்த விலைக்கு ஒரு முன்னணி நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது.

இப்படம் சென்னை இண்டர்னேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் பிரத்யேகமாக ரிலீசுக்கு முன்னரே திரையிடப்பட்டது. அப்போது இப்படத்தை கண்டவர்கள், பணத்தின் மீதுள்ள ஆசைதான் அனைத்து தீமைகளுக்கும் வேர் என்பதை இயக்குனர் மிக அழகாக கமர்ஷியல் பாணியிலும், காதலின் உச்சத்திலும் படமாக்கியுள்ளார் என தெரிவித்தனர். இப்பட்டத்தின் கிளைமேக்ஸ், நிச்சயம் மக்களின் மனதை கொள்ளை கொள்ளுமளவு பாதிக்கும் என இப்படத்தை கண்ட பிரபலங்களும், ரசிகர்களும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply