Monday, April 20
Shadow

நெஞ்சம் மறப்பதில்லை நீடிக்கும் ரீலீஸ்சிக்கல் ?

முதல் பிரதி அடிப்படையில் எஸ்கேப் ஆர்ட்டிஸட்மதன் நிறு வனத்திற்கு கெளதம் வாசுதேவ் மேனன் – செல்வராகவன் கூட்டணி தயாரித்திருக்கும படம்”நெஞ்சம் மறப்பதில்லை.கடந்த வருட இறுதியில் இப்படம் ரீலீஸ் செய்து விடலாம் என்ற நம்பிக்கையில் தமிழ்நாடு உரிமையை திருநெல்வேலி பகுதி விநியோகஸ்தர் சுப்பு ராஜ் விலைக்கு வாங்கினார். புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்தை செல்வராகவன் இயக்கி உள்ளார்.

பத்து வருட இடைவெளிக்குப் பின் யுவன் சங்கர் ராஜா – செல்வராகவன் இணைந்து பணிபுரியும்படம், அதுவும் பேய் கதை என்பதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜுன் 30 ரீலீஸ் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் படம் வருவது சந்தேகம் என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.

எங்கேப் ஆர்ட்டிஸ்ட் பேனர் தயாரிப்புஎன்றாலே பஞ்சாயத்து இல்லாமல் படம் வராது என்பது அடிப்படை விதியாகிவிட்ட பின் “நெஞ்சம் மறப்பதில்லை” மட்டும் என்ன விதிவிலக்கா என்கிறது கோடம்பாக்க வியாபார வட்டாரம். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் முந்தைய படங்களுக்கு மதுரை அன்பு செழியன், மற்றும் மார்வாடி களிடம்வாங்கியுள்ள பைனான்ஸ் தீர்க்கப்பட்டால் படம் வெளிவரலாம். அதனால்தான் இப்படத்திற்கு தினத்தந்தியை தவிர்த்து விளம்பரங்கள் கொடுக்கப்படவில்லை. பல முறை பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, இறுதிநேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இப்படம் வருமா வராதா என உறுதியாகாததால் பிறபடங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்குவதில் குழப்பம் நீடிக்கிறது.

Leave a Reply