Monday, April 20
Shadow

கௌதம் கார்த்திக்கை கரை ஏறுவாரா தந்திரம் பலிக்குமா? படுகுழியில் தள்ளுமா?

கார்த்திக் வாரிசு என்பதால் கோடம்பாக்கத்தில் தட்கல் முறையில் கதாநாயகன் வாய்ப்பை பெற்றவர் அதுவும் தமிழ் சினிமா முகங்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் கடல் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் “கெளதம் கார்த்திக் “கடல் படம் ஓடையாக கூட மாறாமல் ஊத்திக் கொண்டது. இருந்தாலும் அடுத்தடுத்த படங்களில் நடிக்க இவருக்கான சம்பளம் கோடி களில் கேட்கப்பட்டது.

தெலுங்கில் “அலா முதலைந்தி ” படத்தில் நாயகனாக நடித்த படமும் பிளாப். இப்படம் ” என்னமோ ஏதோ ” என தமிழில் மொழிமாற்றம் செய்து ரீலீஸ் செய்யப்பட்டது. படம் முதல் நாளே முடங்கிப் போனது தியேட்டர்களில்.அடுத்து ” வை ராஜா வை, படத்தில் நடித்தார் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கம், AGS என பிரம்மாண்டம், கெளரவ வேடத்தில் தனுஷ் என எல்லாம் இருந்தும் படம் வசூலில் ஒன்றும் மில்லாமல் ஒரங்கட்டப்பட்டது. அடுத்து கார்த்திக் கதாநாயக வேஷம் கட்டிய “முத்துராமலிங்கம் “பல இடங்களில் ரீலீஸ் ஆகவில்லை, ஆன இடங்களில் முதல் காட்சியிலேயே மூடுவிழா கண்டது.

ஏகப்பட்ட பில்டப்புக்களுக்கு பின் பாரம்பர்யமிக்க வெற்றி பட நிறுவனம் சத்யஜோதி தயாரிப்பில் கெளதம் கார்த்திக்நாயகனாக நடித்த “ரங்கூன் ” ரீலீஸ் ஆனது.4.5 கோடிக்கு தமிழ்நாடு உரிமை விற்கப்பட்ட இப்படம் வெறும் 2 கோடி தான் வசூலித்தது. கோடி களில் சம்பளம் கேட்கும் கெளதம் கார்த்திக் நடித்த படங்கள் தயாரிப்பாளர்களை தெருக்கோடியில் தான் நிறுத்தி உள்ளது.

இந்த சூழலில் தோல்விப் படங்களின் இயக்குனர் R. கண்ணன் இயக்கத்தில் கார்த்திக் நடித்துள்ள ” இவன்தந்திரன்” படம் வரும் 30.06.17 அன்று ரீலீஸ்ஆகிறது.இப்படத்தை உலகமெங்கும் வெளியிமும் பொறுப்பு தனஞ்செயன்வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது இவர் தலைமை அதிகாரியாக பணிபுரிந்த நிறுவஙை்களை மூடு விழா நடத்திவிட்டு அடுத்த கம்பெனிக்கு போகும்யோகம் உண்டு. அதே போன்று “இவன் தந்திரன்” என்ன ஆகுமோ என்ற பதட்டத்தில் தயாரிப்பாளர்கள் தவிக்க தொடங்கியுள்ளனர். அதற்கு ஏற்றார் போல் புற நகர் பகுதிகளில் இந்த படத்திற்கு தியேட்டர் கொடுப்பதில் நெருக்கடி உருவாகி உள்ளது.

தனசெழியன் இதுவரை இவர் தொட்ட ஒரு படங்கள் வெற்றி என்று சொல்லும் அளவுக்கு இல்லை என்பது வருத்தம் அந்த அளவுக்கு ராசியானவர் அது மட்டும் இல்லை இவர் தேர்ந்தடுக்கும் கதைகளும் கதாபதிரமும் தோல்வியை தான் தழுவியுள்ளது. இதில் ஏற்கனவே தத்தளிக்கும் கௌதம் கார்த்தியின் எதிர்காலமே கேள்வி குறியாக தான் இருக்கும் என்று கிசுகிசுக்கபடுகிறது

Leave a Reply