Wednesday, June 24
Shadow

ராஜமௌலி யின் அடுத்த ஹீரோ யார் தெரியுமா?

பாகுபலி-2 என்ற பிரமாண்ட வெற்றி படத்தை கொடுத்தவர் ராஜமௌலி. தற்போது இந்திய சினிமாவே எதிர்ப்பார்ப்பது ராஜமௌலியின் அடுத்தப்படம் என்ன என்பது தான்.

ஆனால், அவர் கண்டிப்பாக என் அடுத்தப்படம் கிராபிக்ஸ், அனிமேஷன் போன்ற காட்சிகள் இல்லாத படமாக தான் இருக்கும் என கூறினார்.

இந்நிலையில் ராஜமௌலி மலையாள நடிகர் மோகன்லாலின் தீவிர ரசிகராம், அவருக்காக ஏற்கனவே அவர் ஒரு கதை எழுதி வைத்துள்ளாராம்.

இதனால், மோகன்லாலுடன் கூட்டணி அமைக்கலாம் என அவர் முடிவு செய்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

Leave a Reply