
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்கள் மட்டும் இல்லாமல் உலக புகழ் வாய்ந்த நடிகர்கள் என்றால் அது கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் என்று சொல்லணும் அதேபோல தமழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னனி நடிகர்கள் மட்டும் இல்லாமல் முதல் இரண்டு இடங்களை இன்றும் தக்கவைத்துள்ளனர்.
இதில் ஒரு விஷயம் என்னவென்றால் இருவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் அதிலும் ரஜினி ரசிகர்களுக்கு கொஞ்சம் வெறித்தனமா ரசிகர்கள் அதிகம் உண்மையை சொல்லபோனால் கமல்ஹாசனைவிட ரஜினிகாந்த்க்கு ரசிகர் பட்டாளம் அதிகம் என்று தான் சொல்லணும். இதனால் ரஜினிகாந்த தன ரசிகர்களை சுயநலத்துக்கு மட்டும் தான் பயன்படுத்துகிறார் என்ற பேச்சும் அதிகம் அதுக்கு எடுத்துகாட்டு ரஜினி நான் அரசியலுக்கு வருவேன் என்று பல வருடங்களாக சொல்லி மட்டும் வருகிறார் தவிர அதற்கு இதுவரை அவர் எந்த முயற்சியும் எடுக்காமல் ரசிகர்களை எமற்றிவருகிறார் என்பது தான் உண்மை நான் எப்ப வருவேன் எப்படி வருவேன் தெரியாது ஆனால் வரேண்டிய நேரத்தில வருவேன் என்று இன்னும் மக்களை ஏமாற்றி மட்டும் வருகிறார் ஆனால் இன்றைய நம் தமிழகம் இருக்கும் நிலைமைக்கு அவர் முன் வந்து அரசியலுக்கு வந்தால் தான் மக்களுக்கு நல்லது என்று அனைவரும் சொல்லி கொண்டு இருந்தும் அதை பற்றி கவலை படமால் இன்றும் மக்களை ஏமாற்றி விட்டு அமெரிக்காவில் சூதாட்ட கிளப்யில் பொழுது கழித்து வருகிறார் தவிர மக்களை பற்றியும் ஏன் அவர் ரசிகர்களை பற்றியும் கவலைபடாமல் இருக்கிறார்.
ஆனால் இதுவரை நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லாத கமல்ஹாசன் இன்று மக்களுக்கு பிரச்சனை வரும் போதெல்லாம் குரல் கொடுத்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் மக்களுக்காக அரசியல்வாதிகளை எதிர்க்கவும் செய்கிறார் இதனால் மக்களிடம் அவருக்கு மிகுந்த மரியாதை கிடைத்துள்ளது .
ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழக அரசியல் களம் பரபரப்பான திருப்பங்களை சந்தித்து வருகிறது. அ.தி.மு.க இரண்டாக பிளந்து இரட்டை இலை சின்னமும் முடங்கிப்போய் கிடக்கிறது. தி.மு.க தலைவர் கருணாநிதியும் அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.
இந்நிலையில், மக்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் திரட்டி தமிழக அரசியலை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்லும் தலைவராக யார் வரப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவர் மனதிலும் கேள்வியாக நிற்கிறது.
அதற்கேற்றாற் போல் நடிகர் ரஜினிகாந்தும் சமீபத்தில் அரசியலுக்கு வருவது போல் சூசகமாக கூறியிருக்கிறார். மற்றொரு திருப்பமாக கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் பற்றியும் பேச்சுகள் தற்போது அடிபட தொடங்கிவிட்டன. முன்பை விட ஆட்சியாளர்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அரசியல் வட்டாரத்தை கமல் பரபரப்பாக்கி வருகிறார். கமல்ஹாசனுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளும், திரையுலகினரும் ஆதரவு குரல் எழுப்பி வருகிறார்கள்.
மேலும் தி.மு.க-வின் சொந்த நாளிதழான முரசொலி பவள விழா நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசன் பங்கேற்க உள்ளார். இது அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.
இந்நிலையில், பிரபல தனியார் நாளிதழ் ஒன்று அரசியல் களத்திற்கு தகுதியானவர் யார்? என்று ஓட்டெடுப்பு ஒன்றை நடத்தியது. அதில் 53 சதவீதத்தினர் கமலுக்கு ஆதரவு தெரிவித்தும், 47 சதவீதம் பேர் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்தும் தங்களது விருப்பத்தை பதிவு செய்துள்ளனர்.
