
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று ஜூலி வெளியேற்றப்பட்டார், வெளியேறிய ஜூலி அரங்கத்தில் இருந்த ஓவியா ரசிகர்களின் கோபத்தையும், அவர் மீதுள்ள வெறுப்பையும் நன்றாகவே அறிந்திருப்பார் என எண்ணுகிறோம்.
இவருடன் கலந்துரையாடிய கமல் ஓவியா ரசிகர்களிடம் எனக்காக ஜூலியை என் தங்கையாக நினைத்து அவரை ஒன்றும் செய்யாதீர்கள், அவர் மீது காழ்ப்புணர்ச்சி காட்டாதீர்கள் என வேண்டுகோள் விடுத்தார். மன்னிப்பது நம் பண்பாடு எனவே மறப்போம் மன்னிப்போம் என்று கமல் கூறினார் இருந்தும் ஓவியா ரசிகர்கள் கொஞ்சம் பிடிவாதமாக தான் இருந்தார்கள் என்பது உண்மை இருந்தும் கமல் பேசிய விதமே ரசிகர்களை அமைதி செய்தது என்று சொல்லலாம்
இதற்கு அரங்கத்தில் இருந்த ஓவியா ரசிகர்கள் உங்களுக்காக அவங்களை விடுறோம் என ஒட்டுமொத்த ரசிகர்களும் கூற, அப்போது ஜூலி ஓவியாவின் ரசிகர்களின் பலத்தை கண்டு நிச்சயம் அதிர்ந்து போய் இருப்பார். பின்னர் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார் அங்கு இருந்த ரசிகர்கள் மன்னித்து விட்டார்கள் ஆனால் அவரின் உறவுகள் அவரை மணிக்குமா என்பதும் கேள்வி குறி
