Wednesday, October 28
Shadow

மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணையும் நயன்தாரா

தற்போது சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடித்து வெளிவரவிருக்கும் படம் வேலைக்காரன். இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகிறது.

இப்படத்தின் டீஸர் கூட நேற்று வெளியானது. படத்தின் டிசர் மக்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. தற்போதைய தகவல் என்னவென்றால் பொன்ராம் படம் முடிவடைந்ததும் ‘நானும் ரௌடிதான்’ புகழ் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறாராம் சிவகார்த்திகேயன். அண்மையில் இதுகுறித்து தகவல்கள் வெளியான நிலையில் தற்போது மேலும் சில தகவல்கள் கசிந்துள்ளன.

அதாவது இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நயன்தாரா. அதோடு விக்னேஷ் சிவனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் நிச்சயம் அவர் தான் இந்த படத்தில் நடிப்பார் என்கிறார்கள். விக்னேஷ் சிவனும் நயன்தாராவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு வருகிறாராம்.

விரைவில் இதுகுறித்து முறையான அறிவிப்புகள் வெளிவரும் என்றும், சூர்யா நடித்து வரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தை முடித்த பிறகு சிவகார்த்திகேயன் படத்தை விக்னேஷ் சிவன் ஆரம்பிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது

அதோடு இந்த படத்தின் அர்விப்பை கேட்டு சன் தொலைக்காட்சி இந்த படத்தின் சாட் லைட் உரிமத்தை பெரும் தொகை கொடுத்து வாங்கி இருப்பது மேலும் குறிப்பிடவேண்டிய விஷயம்

Leave a Reply