மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணையும் நயன்தாரா
தற்போது சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடித்து வெளிவரவிருக்கும் படம் வேலைக்காரன். இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகிறது.
இப்படத்தின் டீஸர் கூட நேற்று வெளியானது. படத்தின் டிசர் மக்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. தற்போதைய தகவல் என்னவென்றால் பொன்ராம் படம் முடிவடைந்ததும் ‘நானும் ரௌடிதான்’ புகழ் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறாராம் சிவகார்த்திகேயன். அண்மையில் இதுகுறித்து தகவல்கள் வெளியான நிலையில் தற்போது மேலும் சில தகவல்கள் கசிந்துள்ளன.
அதாவது இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நயன்தாரா. அதோடு விக்னேஷ் சிவனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் நிச்சயம் அவர் தான் இந்த படத்தில் நடிப்பார் என்கிறார்கள். விக்னேஷ் சிவன...
