
தமிழ் சினிமா ஆர்வலர்கள், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த “விவேகம்” நேற்று உலகம் எங்கும் ரீலீஸ் ஆனது. தமிழ்நாட்டில் அதிக திரைகளில் வெளியான தமிழ் படம் என்ற பெருமைக்குரிய இடத்தை் ” விவேகம் “பெற்றது. ஆம் 550 திரைக்கு மேல் ஒரு தமிழ் படம் இதுவரை ரீலீஸ் ஆனது இல்லை. போட்டிக்கு படம் இல்லை. 119 கோடி பட்ஜெட் 124 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டது விவேகம். இந்தி வட்டாரத்துக்கு விவேக் ஓபராய், கமலஹாசன் அக்க்ஷரா ஹாசன், என நடிகர்கள் பட்டாளம்.ஓபனிங் கொடுக்க அஜீத் ரசிகர் பட்டாளம் எல்லாம் இருந்தது. ரஜினி, விஜய் படங்களை கடந்து ஓபனிங் இருந்தது. காலைகாட்சி முடிந்து வெளியில் வந்த அஜீத் ரசிகன் மரண பயத்தில் வந்தனர். “இன்னுமா நம்ம தல சிவாவை நம்புறாரு சொதப்பிட்டாரு சிவா” என ஒரு ரசிகர்கமெண்ட் அடிக்க, அது பரவாயில்லை கார்ட்டூன் படத்தை எடுத்துட்டு ஹாலிவுட் தரத்தில் படம்னு சொன்ன இயக்குனர் சிவாவை…………. லே என சென்னை பாஷையில் திட்டி காமெண்டுகள் காதுல ரத்தம் வடியுறஅளவுக்கு வந்து கொண்டிருந்தன. விவேகம் தெறிமாஸ் என டிவிட்டர் குருவிகள் கூவிக் கொண்டிகுந்தன. தொலைக்காட்சிகள் விவேகம் ஓபனிங்கை தலைப்பு செய்திகளாக்கினார்கள். காலையில் 900 ம் பேர் பார்த்த தியேட்டரில் பகல் காட்சி 300 ஆனது. இரவு காட்சி 150 ஆனது. முன்பதிவு அதிகம் ஆன சென்னை. கோவை ஏரியாக்களில் அரங்கு நிறைந்த காட்சிகளே இது அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும். பிற ஏரியாக்களில் இரவுக் காட்சியேடல்லடித்துள் ளது. என்ன காரணம் என விசாரித்த போது விவேகம் படத்தில் சத்து இல்லை என்றார் ஒரு தியேட்டர் மேனேஜர் அப்படி என்றால் என கேட்டபோது அதாங்க கதையை வைத்து தான் படம் எடுப்பாங்க இவனுக கதையே இல்லாம துப்பாக்கிய வச்சு சுட்டுக்கிட்டே இருந்தா வர்றவனும் தியேட்டர விட்டு ஓடிருவானுங்க இவனுக போயி வர்றவன் களு யும் தடுத்துடுவானுங்க என்றார் மேனேஜர். அதிக விலை கொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்கள், எம்.ஜி அடிப்படையில் விவேகம் படம் திரையிட்ட தியேட்டர் உரிமையாளர்கள் மரண பயத்துக்கு உள்ளானார்கள். மதியக் காட்சியி ல்ருந்து வேகமாக குறைந்து வந்த விவேகம் கலெக்க்ஷன் கண்டு கவலைப்பட்ட விநியோகஸ்தர்கள் 50% சதவீதம் நஷ்டம் உறுதி என்கின்றனர்.
