Saturday, April 18
Shadow

மிக பெரிய அதிர்ச்சியில் முருகதாஸ் காரணம் என்ன தெரியுமா?

தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு முதல் முறையாக நேரடி தமிழ் படத்தில் நடிக்கிறார் அதுவும் அவர் சொந்த குரலில் டப்பிங் செய்து என்பது ஒரு சிறப்பான விஷயம் இந்த படம் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் மிகவும் எதிர்பர்க்கும் படம் அதோடு இந்த படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் என்பதால் இந்திய சினிமாவே இந்த படத்தை மிகவும் எதிர்பார்க்கும் படமாக அமைந்துள்ளது.

முருகதாஸ் தற்போது ஸ்பைடர் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளார். இப்படம் முடிந்து அடுத்து இவர் விஜய்யுடன் இணையவுள்ளார்.

இந்நிலையில் யு-டியூபில் ஸ்பைடர் படத்தின் காட்சி லீக் ஆகிவிட்டது என்று ஒரு செய்தி வெளிவந்தது.

இது முருகதாஸையே ஒரு நிமிடம் அதிர்ச்சியாக்கியது, பிறகு தான் தெரிந்தது அது ரசிகர்கள் உருவாக்கியது என்று.

ஸ்பைடர் படத்தின் ட்ரைலர் விரைவில் வரவுள்ளதாக கூறப்படுகின்றது, படம் இம்மாத இறுதியில் வரவிருக்கின்றது.

Leave a Reply