விஜய் எல்லோருக்கும் மரியாதை கொடுக்க தெரிந்தவர். இவர் சிறிய நடிகர், பெரிய நடிகர் என்ற பாகுபாடே பார்க்க மாட்டார். வயதில் சின்னவர்களை கூட அண்ணா என்று தான் சொல்லுவார் .
அப்படித்தான் தெறி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடிக்க ஜிகர்தண்டா, சுந்தரபாண்டியன் படத்தில் நடித்த சௌந்தர் ராஜனை அட்லீ அழைத்துள்ளார்.
அவரும் உடனே ஓகே சொல்லி நடிக்க செல்ல, அங்கு விஜய் ஒரு சில நாட்கள் ஷுட்டிங் பரபரப்பில் சௌந்தரிடம் பேசவில்லையாம்.
ஒருநாள் சௌந்தரே நேராக விஜய்யிடம் போய் தன்னை அறிமுகப்படுத்த ‘சாரி சௌந்தர், ஷுட்டிங் பரபரப்பில் கவனிக்கவில்லை, சாரி’ என்று விஜய் கூறினாராம்.
இதை கேட்டு ஒரு நிமிடம் சௌந்தர் ராஜனுக்கு கொஞ்சம் தர்மசங்கடமாக இருந்ததாம், சூப்பர் ஸ்டார் இடத்தில் இருக்கும் விஜய் இப்படி நடந்துக்கொண்டது தன்னால் எப்போதும் மறக்க முடியாது என்று கூறியுள்ளார்.
