Friday, April 24
Shadow

சிவகர்த்திகேயனின் வேலைக்காரன் படத்துக்கு வந்தது பிரச்சனை

சிவகார்த்திகேயன்னின் வேலைகாரன் படத்துக்கு வந்தது பிரச்சனை என்னடா இதுவரை எதுவும் இல்லை என்று நிம்மதியாக இருந்த படகுழுக்கு வைத்தார் முன்னால் இயக்குனர் ஆப்பு படம் ரிலீஸ் தள்ளிபோகுதே என்ற கவலையில் இருந்த படகுழுக்கு மேலும் ஒரு பிரச்சனை.

கள்வணின் காதலி, மச்சக்காரன், நந்தி ஆகிய படங்களை இயக்கிய தமிழ்வாணன் என்பவர், இயக்குநர் சங்கத்தில் ‘வேலைக்காரன்’ படத்திற்கு எதிராக புகார் ஒன்றை கொடுத்திருக்கிறாரம். அதில், விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘வேலைக்காரன்’ என்னுடைய கதையை திருடி எடுத்திருப்பதாக அறிகிறேன். எனவே, இந்த பிரச்சினையில் சங்கம் தலையிட்டு எனக்கு உரிய இழப்பீடு வாங்கித்தர வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

பொதுவாக, படம் வெளியான பிறகு தான், கதை திருட்டு குறித்து புகார்களும், பிரச்சினைகளும் வருவது வழக்கம். ஆனால், படம் வெளியாவதற்கு முன்பாகவே தன்னுடைய கதையை திருடி படம் எடுத்து விட்டார்கள் என்று தமிழ்வாணன் புகார் அளித்திருப்பது கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்போது, பெப்ஸி மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்ப்பதற்காக நடைபெறும் பேச்சுவார்த்தையில் இயக்குநர்கள் சங்கம் பங்கேற்று வருவதால், இந்த பிரச்சினை சில நாட்களுக்கு பிறகு சூடுபிடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Reply